PAGEVIEWERS

G.Os of Finance Department - Sanction of Bonus and Ex-gratia to the employees of State Public Sector Undertakings for the year 2015-16 payable during 2016-17

 கல்வித்துறை  இணை இயக்குனர்கள் அதிரடி மாற்றம் .....

Department of School Education Joint Directors Transferred as follows......

1) Mrs. Latha JD (HS) DSE/ 
2)Mr. Sethuramavarma JD(P)
3) Mrs. Suganya JD (Aided) Ele,
4)Mrs. Sasikala JD (Admin) Ele,
5) Mr.Selvakumar JD non formal, 
6) Mr. Ponkumar JD Kallar promoted from Thiruvannamlai CEO, 7) Mrs. Ananthi JD II SSA promoted from Trichy CEO 

Best wishes to all

அக்டோபர் - 17, 19 அன்று உள்ளாட்சி தேர்தல்

வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகி்றது
வேட்பு மனு ஆய்வு : 04-10-2016

காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
வாக்கு எண்ணிக்கை : 21-10-2016

26-10-2016 : பதவியேற்பு
02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.

சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை )

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3

வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4

வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்

ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21

நேற்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே

அவகாசம்----TATA சங்கம் அனுப்பிய மனு 

உங்கள் பார்வைக்கு ....தன் செயல்பாட்டை 100% 

வெளிப்படையாக காட்டும் ஒரே சங்கம் டாட்டா 

மட்டுமே....

                                       மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ..எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை

செய்ய வேண்டியவை

  • முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த  சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .
  • நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில் வைத்து ஒட்ட வேண்டும்.
  • ஸ்டேபில் பண்ணக்கூடாது.*
  • 13A என்று ஒரு படிவம் இருக்கும். அதை சரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்த சான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம் அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்க வேண்டும்.
  • பின்னர்  A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை

  • படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.
  • இரண்டு அலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
  • படிவம் 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது
  • மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம் ஆலோசித்து தெளிவு படுத்தி  கொள்ளுங்கள் .
  • இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது
ஆதாரம் ;-- தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

நோக்கம்

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன.

நடத்தை விதிமுறைகள்

  • தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
  • அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
  • பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
  • அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
  • அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  • பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
  • வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
  • சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.
  • கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
  • மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
  • மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.
  • அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  • தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
ஆதாரம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை
மாவட்டம்
நகர்ப்புறம்
கிராமப்புறம்

மாநகராட்சி
நகராட்சி
பேரூராட்சி
ஊராட்சி ஒன்றியம்
ஊராட்சி

அரியலூர்
0
2
2
6
201

சென்னை
1
0
0
0
0

கோயம்புத்தூர்
1
4
37
12
227

கடலூர்
0
5
16
13
682

தர்மபுரி
0
1
10
8
251

திண்டுக்கல்
1
3
24
14
306

ஈரோடு
1
4
53
14
343

காஞ்சிபுரம்
0
10
24
13
648

கன்னியாகுமரி
0
4
56
9
99

கரூர்
0
4
11
8
158

கிருஷ்ணகிரி
0
2
7
10
337

மதுரை
1
6
24
12
431

நாகப்பட்டினம்
0
4
8
11
434

நாமக்கல்
0
5
19
15
331

பெரம்பலூர்
0
1
4
4
121

புதுக்கோட்டை
0
2
8
13
498

இராமநாதபுரம்
0
4
7
11
443

சேலம்
1
4
33
20
385

சிவகங்கை
0
3
12
12
431

தஞ்சாவூர்
1
3
22
14
589

நீ்லகிரி
0
4
11
4
35

தேனி
0
6
22
8
130

திருவள்ளூர்
0
12
13
14
539

திருவண்ணாமலை
0
4
10
18
860

திருவாரூர்
0
4
7
10
430

தூத்துக்குடி
1
2
19
12
408

திருச்சிராப்பள்ளி
1
3
17
14
408

திருநெல்வேலி
1
18
36
19
425

திருப்பூர்
1
6
17
13
273

வேலூர்
1
13
22
20
753

விழுப்புரம்
0
3
15
22
1104

விருதுநகர்
0
7
9
11
450

Total
12
125
529
385
12,524

மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன.
  • சென்னை
  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • சேலம்
  • திருநெல்வேலி
  • ஈரோடு
  • தூத்துக்குடி
  • திருப்பூர்
  • வேலூர்
  • திண்டுக்கல்
  • தஞ்சாவூர்

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016உள்ளாட்சி தேர்தல் 2016 க்கான பட முடிவு

உள்ளாட்சி தேர்தல் 2016 க்கான பட முடிவுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்-2016- ELECTION -  மாற்று திறனாளி , Low vision-,Leprosy-cured,  and educational institutional ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது... பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Voice of TATA:- 

CPS வல்லுநர் குழுவை சந்தித்த பெரும்பாலான இயக்க நிர்வாகிகள், நாங்கள் அதை ஏடுத்துக்கூறினோம், இதைக்கூறினோம் என்றுதான் சொல்லி வருகிறார்கள் ஆனால் எமது TATA மட்டும்தான் 347 பக்க ஆதாரங்கள் மற்றும் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் என வலுவான கருத்தை தெரிவித்து, அவற்றின் நகல்களை ஆசிரியர்களின் பார்வைக்கு பொது செயலாளர் வெளியிட்டார்.மேலும் CPS ரத்து செய்து TPF வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்கள் வெற்றி உறுதியானது.

இவ
ன்
பு.செல்வக்குமார்.
மாவட்டசெயலாளர்,
சேலம்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.இந்த குழுவிடம் சங்கங்கள் கொடுத்த மனு ஆதாரங்கள் ஆகியவற்றை சங்க தலைமைகள் இணையத்தில் வெளியிட்டு தம் இயக்க உறுப்பினர்களிடம் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அரசாணை.எண்..234 நிதித்துறை...நாள் 01-06-2009 ஆல் ஊதிய முரண்பாடு ஏற்பட்டால் அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம்.* *சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு W.P.No.31084/2015*.TATA-KIPSON.

OCTOBER MONTH-Primary & Upper Primary CRC Dates

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.

ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களது செயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.

பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி, கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இயக்குனரக செய்தி....................

....... .தொடக்கக் கல்வித்துறை கட்டுபாட்டில் 6000 க்கும் மேற்பட்ட நிதியுதவி பெரும் தனியார் பள்ளிகள் உள்ளது இப்பள்ளிகளில் தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் உள்ளதாக 2015 டிசம்பர் மாதம் மாநிலம் முமுவதும் உள்ளதாக AEEO , SSA பணியாளர்களை கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது இந்த பட்டியலில் உள்ளவர்களை வெளிமாவட்டங்களில் தேவை உள்ள நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மாற்றம் செய்திட இயக்குனரால் அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 2004 ஆண்டு இதுபோல் உபரி ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.அதன் பின் 12 வருடங்களுக்கு மேலாக பணி நிரவல் செய்யப்படாத்தால் தென் மாவட்டங்களில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் உள்ளதால் அங்கு உபரி ஆசிரியர்களும் அதிகமாக உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 524 பேர் உபரி ஆசிரியர்கள் என கண்டறியபட்டுள்ளனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் நிதி இழப்பு ஏற்படுகிறது.எனவே விரைவில் இவர்கள் வெளிமாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்இந்த மாறுதல்கள் உள்ளாட்சி தேர்தல் முடிந்த்தும் .வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள் பணி ஓய்வு வரை திரும்ப தன் மாவட்டத்திற்கு மாறுதல் பெற முடியாது........டாடா கிப்ஸன்
*_வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை !_*
ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள்
நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1 ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல் அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள

விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களை நியமிக்க கூடாது.
அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்த கூடாது.
அதிக வாக்காளர்கள் அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள் நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால் வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.