PAGEVIEWERS


தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

""தென் மண்டல மின் பாதை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இறுதி செய்யப்பட்டுவிட்டதால், அதுவரை தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
""தமிழகத்தில் மின் திட்டங்கள் தேக்கமடைந்து இருப்பதே அந்த மாநிலத்தில் மின் பற்றாக்குறை நீடிப்பதற்கு காரணம்.
தென் மண்டல மின் பாதையை பலப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு நவம்பரில்தான் நிறைவடையும்.

5-ம் வகுப்பு மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்

5-ம் வகுப்பு மாணவர் தமிழ், ஆங்கில பாடத்தை புரிந்து வாசிக்கவும், வாசித்த கருத்தை தெளிவாக சொல்லவும் தெரிய வேண்டும் என்று வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி கூறினார்.

பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பி.ஏ. இங்கிலீஷ் படிப்புக்கு இணையானது: தமிழக அரசு உத்தரவு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பட்டம், பி.ஏ. இங்கிலீஷ் பட்டப் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அரசுப் பணி நியமனத்தின்போது பி.ஏ. இங்கிலீஷ் பட்டத்துக்கு இணையாக பி.இ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பும் கருதப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் இதுதொடர்பாக அனுப்பிய பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளா

தமிழக சட்டசபை வைர விழா

சட்டமன்ற வைர விழா மலர் வெளியீடுள்



விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஜனாதிபதி முகர்ஜியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கவர்னர் ரோசய்யா, பிற மாநில சபாநாயகர்கள் விழாவில் பங்கேற்றார். வைர விழா மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, ஜனாதிபதி பிரணாப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏக்களுக்கான விடுதிக்கு பிரணாப் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பிரணாப்பை வரவேற்றனர்.

தொடக்கக்கல்வி - 2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல்.


தொடக்கக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த கை,கால் பாதிக்கப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.



Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 - Court Cases - Part II

District wise Particulars

DistrictMatriculation & CBSE
ChennaiFixation
CuddaloreFixation
DharmapuriFixation
ErodeFixation
KancheepuramFixation
KanyakumariFixation
KarurFixation
KrishnagiriFixation
MaduraiFixation
NagapattinamFixation
NamakkalFixation
NilgirisFixation
RamanathapuramFixation
Salem

டிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள்

மாற


 வரும் டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் ஆகிய கிழமைகள் வருகின்றது. இந்த நிகழ்வானது 824 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நிகழ்வதால் இதை அபூர்வமான மாதமாக கருதப்படுகின்றது.  கடந்த 1188ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் கிழமை வந்தது. அதற்கு பிறகு, இந்தாண்டு(2012) டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று கிழமைகளும் 5 முறை வருவதால், ஜோதிட முறைப்படியும், எண்கணித முறைப்படியும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருத்தப்படுகிறது. சனிக்கிழமையை சனிபகவானாகவும், ஞாயிறு சூரியனாகவும், திங்களை சந்திரனாகவும் வழிபடுவது வழக்கம். 9 வகையான கிரகங்களுக்கும் ஒவ்வொ வகையான நிறங்கள் உள்ளன. சனிக்கு கருப்பு, சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெண்மை நிறங்களாக கருதப்படுகின்றன. எண்கணிதப்படி வரும் டிசம்பரில் மூன்று 5 கிழமைகள் வருவதால் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.   இது பற்றி ஜோதிடர் ஒருவர் கூறுகையில், ‘‘2012 டிசம்பரில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 கிழமைகள் 5 முறை வருவதால் சிறப்பு வாய்ந்தாக கருத்தப்படுகின்றது. டிசம்பரில் 1ம் தேதி சனிக்கிழமை உதயமாகி, இம்மாத கடைசி நாளான 31ம் தேதி திங்கள் கிழமையன்று முடிகின்றது. இதை வைத்து கிரகங்களின் நிற முறைகளைவைத்து பார்க்கும் போது  கருமையில் தொடங்கி வெண்மையில் முடிகிறது. இந்த மாதம் வளர்பிறையாக உள்ளது. இந்த மாதத்தில் தொழில், திருமணம் மற்றும் பல்வேறு சுப காரியங்களை செய்யலாம். கிரகங்களின் தோஷம் உள்ளவர்களும் இந்த மாதத்தில் கிரகத்திற்கு உண்டான வழிபாடு முறைகளை செய்தால் அவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்‘‘ என்றார்.

In the month of December 5 Saturday, 5 Sunday, Monday and 5 weeks have been. This event only happens once in 824 years, but this month is rare.

சத்துணவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகைப்பாடுகள் குறித்து, சத்துணவு ஊழியர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு சமையல் கலை வல்லுனர் மில்டன் தலைமையிலான வல்லுனர்கள், பயற்சியுடன் செயல் விளக்கம் அளித்தனர்.துவக்க நிகழ்ச்சியில், கலெக்டர் நடராஜன் முன்னிலையில் கருவேப்பிலை சாதம் தயாரித்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள் முதல், வெள்ளி வரை ஐந்து தினங்களில் வழங்கப்பட உள்ள உணவுகள், முட்டை வகைகள் அவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் அதற்கான கையேடுகள் வழங்கப்பட்டன.

இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.

PFRDA மசோதா குறித்த தங்களின் கருத்துகளை கீழே உள்ள COMMENT BOX-ல் பதிவு செய்யவும்.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு 
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடக்கக் கல்வி - தனியார் உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை ஆசிரியர்களாக நியமிக்க இயக்குனர் உத்தரவு.


 தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனரின் ( உதவி பெறும் பள்ளிகளில் ) செயல் முறைகள் ந.க.எண் :- 37718/எப்2/11 நாள் :- 15.11.2012.


D.T.Ed., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற 10, +2, +3 என்ற முறையில்  பயின்று இருக்கவேண்டும் என்று கூறி 10, D.T.Ed., +3 என்ற முறையில் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சந்திரசேகரன், உமை ஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
"D.T.Ed. பட்டயக் கல்வி, +2 கல்வித் தகுதிக்கு இணையானது. 01.01.2012ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும்".

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.

தீர்ப்பு முழு விவரம்:
TTC Egual to High court Order
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நிதி உதவி கோரும் விண்ணப்பம். தமிழகஅரசு வெளியீடு.
CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று,
ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.

இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை-11-11-2012.

                                             நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது


தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, "விசிட்' வரும் குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள் மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப்பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின் தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட, அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத்துறையில் இருந்து ஆய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன.

          நமது TATA கோரிக்கை          நிறைவேற்றினர் அம்மா ,.
      பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள் அறிமுகப் படுத்தப் படுவதாக, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்தை, காலத்திற்கு ஏற்ப மாற்றவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய உணவு முறை குறித்து, சமையற் கலைஞர்கள், ஊட்டச் சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், சோதனை முறையில்,கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை, பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்
பட்டதால், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலாக்களை, சமையல் நிபுணர்கள் தயாரித்து, விளக்கம் செய்து காட்டினர். இதன் அடிப்படையில், புதிய உணவு வகைகளை, சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய, அரசுமுடிவெடுத்துள்ளது.

இந்த புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு பகுதியில் மட்டும், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்; அந்த பகுதியில், இந்த புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.