இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

                                                   
இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்தியமனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின்இரானி நியமிக்கப்பட்டுள்ளார்பிரதம மந்திரி நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலைபதவியேற்றது. புதிய
அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார்என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய மனிதவளத் துறைக்கு புதியஅமைச்சராக, 38 வயதே நிரம்பிய ஸ்மிருதி சுபின் இரானி என்றபெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல்மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை கேபினட்அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயதுமுதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமானதுறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணிநியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரான அவர், பல சிறப்பான திட்டங்களை துடிப்புடன்மேற்கொண்டு, இந்திய கல்வித்துறையில் பல விரும்பத்தக்கசீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்பதே அனைவரின்எதிர்பார்ப்பு!

மத்திய மனிதவளத் துறைக்கென்று இணையமைச்சர் யாரும்நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment