PAGEVIEWERS

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மூன்று, மேல்நிலைப்பள்ளிகள், 18 என, மொத்தம், 21 பள்ளிகள் உள்ளன. கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், கூடுதலாக இருந்த, 14 ஆசிரியர்கள், பற்றாக்குறையான பணியிடங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டனர்.
*** கல்வி இயக்கக தெளிவுரைகளுடன்
உள்ள பதிவு...

தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களின்
பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு---
ஊதியமில்லா விடுப்பு எனும் நிலையை மாற்றி
முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ***

** அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 180 நாட்கள்
சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு
( UEL PA )உள்ளது. **

* இந்த 180 நாட்களை ஓய்வு பெறும் போது ஒப்புவிப்பு
செய்து 180 நாட்களுக்கு அரைச் சம்பளம் வீதம்
90 நாட்களுக்கு ஊதியம் பெறலாம். *

** ஆசிரியர்கள் இந்த 180 நாட்களில்
சுமார் 30 நாட்கள் கற்பித்தல் பயிற்சிக்கு சென்றால்,
நாம் எடுக்கும் 30 நாள் UEL PA விடுப்புக்கு,
15 நாள் ஊதியம் கிடைக்கும். **

** நம்முடைய இருப்பு 180-30=150 ஆக குறையும்.
எனவே ஓய்வு பெறும் போது, 75 நாட்களுக்கு
மட்டுமே ஊதியம் பெற முடியும்.
கற்பித்தல் காலம்-15 நாள் ஊதியம்+
ஓய்வு சமயம். -75 நாள் ஊதியம்=
மொத்தம். -90 நாள் ஊதியம் **

* கற்பித்தல் பயிற்சிக்கு LLP எடுத்து விட்டால்,ஓய்வு சமயம்
180 நாள் UEL PA க்குரிய 90 நாள் ஊதியம் பெறலாம். *

** எனவே கூட்டிக் கழித்துப் பாருங்களேன்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு...
அப்போ...அந்த ஒரு மாத ஊதியம்....?
Loss of pay தான். **

* எனவே நாம் பெறுவது அரைச் சம்பளம் அல்ல.
நமக்கு ஒரு மாத ஊதியம் இழப்பு ஏற்படுகிறது
என்பதை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். *

**** பள்ளிக் கல்வித்துறை
அரசுக் கடித எண்.48269/எம்2/94 நாள்.28.12.95

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
3849/சி32/96 நாள்.3.2.96

ஆகியவற்றின் படி
அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,தமிழாசிரியர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்கள்,தொழிலாசிரியர்கள்
ஆகியோர்கட்கு

பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டது. ****

*** எனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கற்பித்தல் பயிற்சிக்கு
LLP - Leave On Loss Of Pay என்பதை மாற்றி
முழு ஊதியம் பெற்றுத் தர வேண்டும். ***

👆 * மேற்காணும் செயல்முறைகளின் படி...
ஓய்வு நேரம் பயிற்சி எடுக்கலாம்.
பிஎட்., கற்பித்தல் பயிற்சி வகுப்பு எடுத்தல் காரணமாக
1.பள்ளி பாடநேரம் பாதிக்கப் படக் கூடாது.
2.பாடக் குறிப்பு எழுதுவது பாதிக்கக் கூடாது
3.பயிற்சி ஏடுகள் சரிபார்க்க வேண்டும்
4.தேர்வுகள் வைக்க வேண்டும்
5.கற்பித்தல் பாதிக்கக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் பள்ளிக் கல்வித்துறையில்
முழு ஊதியம் வழங்கப்படுகிறது. *

** தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
படிக்க அனுமதி பெறும் போது...
மேலே காணும் இது போன்ற நிபந்தனைகளுடன்
அனுமதி தரப்படுகிறது. **

* தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை.
பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்று ஆசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் உள்ள
பள்ளிகளாகவும் உள்ளன. *

* எனவே தொடக்கக் கல்வித் துறையில்...
விடுப்பு முடிந்து வந்து மீண்டும்
சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தான்
பாடங்களை நடத்தணும்,
பாட நோட்டுக்களையும் திருத்தணும்,
தேர்வும் வைக்க வேண்டும்,
பாடம் சார்ந்த பதிவேடுகளை
சம்பந்தப்பட்ட விடுப்பு ஆசிரியர் தான்
பராமரிக்க வேண்டும். *

* எனவே முழு பணி செய்தாலும் ஊதியமில்லை. *

** நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே
கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து
அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது. **

* ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில்
பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால்
முழு ஊதியம் தரப்படுவதில்லை. *

*** Primary Teacher க்கு
Full work உண்டு.
But
No pay
For
Teaching practice... ***

** ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கட்கு ஊதியம் வழங்க
அந்த கணக்குத் தலைப்பின் கீழ் அரசால் நிதி
விடுவிக்கப்படுகிறது.

எனவே நாம் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் போது,
வழங்கப்பட்ட ஊதியம் போக, எஞ்சிய ஊதியம்
அரசிடம் ஒப்புவிப்பு செய்யப்படுகிறது.

எனவே இது நிதிச்சுமை சாராத கோரிக்கை. **
**** பள்ளிக் கல்வித் துறை,நிதித் துறை,
பணியாளர் & நிர்வாக சீர்திருத்தத் துறைகளின்
பார்வைக்கு எடுத்துச் சென்று,
தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கட்கு
கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும். *** .

ஓய்வூதியம் என்பது சலுகையா சிந்திப்பீர்...........

ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்குகின்றன.
ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்
. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
--------------------நன்றி---------------டாட்டா கிப்சன் ........

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு

TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

     2012 ல் நீதிமன்ற தீர்ப்பு படி  திரு.கிருஷ்ணன்  IAS.அவர்கள் தலைமையில் 3 நபர்களை கொண்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மறுத்து கிழ்க்கண்ட காரணங்களை கூறியது 1.தமிழக இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி SSLC+சான்றிதழ் படிப்பு மட்டுமே .மத்திய அரசில் +2 வுடன் டிப்ளமோ ஆகும் .2.தமிழ் நாட்டில் பணி நியமனம் ஒன்றிய அளவில் .மத்திய அரசில் தேசிய அளவில் .3.ஆங்கிலம் , இந்தி கற்பிக்க தெரியாது ..4.கணினி அறிவு இல்லை .என்ற பொய்யான காரணங்களை கூறி  மறுத்து விட்டது,உண்மையில் 1989 முதல் நீதிபதி .திரு,ராமானுஜம் அவர்கள் அறிக்கை படி டிப்ளமோ கல்வி தகுதிக்கு தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது..
                           சென்னை உயர் நீதிமன்றம் 27.2.2014 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு படி தமிழகத்தின் 2010 ஒரு நபர் குழு அறிக்கை மற்றும் 2012 ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை ஆகியவை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி .நீதிபதி .திரு.பால் வசந்த குமார் அவர்கள் தலைமையிலான இரு நபர்கள் அமர்வு ரத்து செய்து விட்டது மேலும் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட ஓய்வு பெற்ற நீதிபதி.திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் அமைத்து ஆணை வழங்கப்பட்டது..
                                     தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) சார்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 தாக்கல் செய்யப்பட்டது.அதில் 10.9.2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது .ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014.படி ஊதிய மாற்றம் செய்திட மறுத்து விட்டது .மேலும் அரசு கடிதத்தை ரத்து செய்து  ஊதிய குறை தீர்க்கும் ஆணையம்  9300+4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் .1612/2015.தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு தமிழக அரசு ஊதிய பிரச்சணை தீர்க்க முன் வராமல் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்று உள்ளது என்பதால்  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) வும் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது .உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கண்டிப்பாக இழந்த ஊதிய உரிமை மீட்கப்படும் அன்று இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1.1.2006 முதல் 9300 + 4200 என மாற்றம் செய்யப்படும்.

இவன்  
டாட்டா. கிப்சன் .பொது செயலாளர் .தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்




 
டாட்டா மாநில அமைப்பின் அறிவிப்பு ....
நமது சங்கத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவின் கூட்டம் மதுரை ....ஆரப்பாளையம் ......ஹோட்டல் சிவ சத்யாவில் வைத்து ..16.08.2015 ..ஞாயிறு பிற்பகல் 3.30.மணிக்கு நடைபெற்றது ....
உயர் மட்ட நிர்வாக குழுவில் மாநில தலைவர். திரு. கார்த்திகேயன் அவர்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தை பொது செயலாளர் முகவரிக்கு எழுதி 31-08-2015 க்குள் அனுப்பி வைக்க முடிவு செய்ய பட்டது ...அதன்படி
மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின்  பெரும்பான்மை முடிவின் படி மாநில தலைவர் ராஜினாமா ஏற்கப்பட்டது என அறிவிக்கப்படுகிறது ....

வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது. இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள் அதிகம்
பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது.
இவற்றிற்கிடையே ஒவ்வொறு தொகுதியிலும் கணிசமான
ஓட்டுகளை வைத்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அவர்களது
குடும்ப உறுப்பினர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும்
என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக்
கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஆளும் அ.தி.மு.க மீது
அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே ஒரு
அதிருப்தி மட்டுமே இருப்பதாகவும் அது என்னவெனில் கடந்த
சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த மீண்டும் பழைய
பென்சன் திட்டம்,6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும்
என்பது களையப்படாதது மட்டுமே ஆகும்.ஒருவேளை மீதமுள்ள
நாட்களில் அவை நிறைவேற்றப்பட்டால் இவர்களின் (அரசு
ஊழியர்களின்) வாக்குகள் அ.தி.மு.க.விற்கே செல்லும்
என்பதால் போட்டி எளிமையாகலாம் என்ற எதிர்பார்ப்பும்
எழுந்துள்ளது.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நடந்த
ஆசிரியர்கள் பேரணியில் பேசிய தி.மு.க.பொருளாளர்,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்............
இடைநிலை ஆசிரியர் ..ஆன் ..லைன் ...பணி மாறுதல் கலந்தாய்வு ...டாட்டா. .பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தொடர்ந்த கிரிமினல் வழக்கு எண் ;-17064/2014. காலிபணியிடங்கள் மறைக்க பட்டதை ஊழல் தடுப்பு காவல்துறை விசாரணை நடத்திட உயர் நீதிமன்றம் தீர்ப்பு  .காரணமாக 30-08-2015. ஆன் லைன் கலந்தாய்வு நேர்மையான முறையில் தொடக்க கல்வி துறையில்  நடந்ததாக தகவல் கிடைத்தது .டாட்டா சங்கத்தின் மாபெரும் வெற்றி ஆகும் .நேர்மையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற காரணமான தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுக்கு நன்றி .


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!..............

2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED,,,,,,,

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அரசாணை பற்றிய ஓர் பார்வை:

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த  ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே. அதனை அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.

"தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்:29, பள்ளிக்கல்வி, நாள்: 12.2.2008-ல் கீழ்வருமாறு திருத்தம் செய்து வெளியிடுகிறது, இவ்வாறு குறிப்பிட்டு திருத்தம் என்று தலைப்பிட்டு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CRC யில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு அனுபவிக்க அரசாணை 62 நாள்: 13.3.15 வெளியிடப்பட்ட பின்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு மட்டுமே ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க வேண்டுமெனவும், அதற்கு முன்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்திருக்கக் கூடாதென்று சில ஒன்றியங்களில் கூறப்படுவதாக அறிய வருவதால் இவ்விளக்கத்தினை ஆசிரியர்கள் முன் வைத்துள்ளோம். இதனடிப்படையில் உரிய கோரிக்கை மனு ஒன்றை TATA பொது செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் வரும் செப்டம்பர் 4 அன்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து அளிக்க உள்ளார் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களுக்கு மே-2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஊதியம் பெற ஆணை வெளியீடு

சிவகங்கை : பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி.......

7வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு



7வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை - நீக்கம் செய்திட TATA சங்க பொது செயலாளர் தலைமையில் 4 பேர்  செப்டம்பர் 5 ல் ஆசிரியர் தினத்தில் டெல்லி பயணம் .

நமது சங்கம் சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் முதலில் 33399/2013 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதற்கு தமிழக அரசு கடித எண் 60473/ஊ.கு.தீ.பி./2014. மூலம் ஊதியம் வழங்க முடியாது என அறிவித்தது.
                           அதற்கு எதிராக 2 வது வழக்கு 1612/2015 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதற்கு தமிழக அரசு கடித எண் .12925/ஊ.கு.தீ.பி./2015.நாள் .27.5.2015 மூலம் அரசு உச்ச நீதிமன்றத்தில் ஊதிய முரண்பாட்டை தீர்க்க தடை பெற்று உள்ளது .எனவே 9300+4200 வழங்க முடியாது என தெரிவித்து உள்ளது.
மேலும் நமது சங்கம் சார்பான வழக்கு 5302/2015.தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது,.
                              அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ஆண்டிலேயே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி விட்டோம் என தனது அபிடவிட்டில் பொய்யான தகவலை கூறி தடை பெற்று உள்ளது .மேலும் தடை நீக்க பட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நமது உண்மை நிலையை கூறி உரிமையை நிலைநாட்டிட தெளிவான தீர்ப்பு பெற்றால் மட்டுமே 7 வது ஊதிய குழுவிலும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும் .ஆனால் 80 % பேர் வரும் பாதிப்பு அறியாமல் உள்ளனர் .பலர் ஏளனம் பேசுகிறார்கள் .பலர் டாட்டா சங்கம் மூலம் ஊதிய பிரச்சனை தீர்ந்து விட கூடாது என செயல்படுகிறார்கள் .
                       யார் தடுத்தாலும் 8 வருடம் இழந்து வருகிற ஊதிய உரிமை மீட்கப்பட அனைவரும் டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டம் வெற்றிப்பெற ஆதரவு தாருங்கள் .வருகிற சி.ஆர் .சி .கூட்டத்தில் உரிமை மீட்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் .உணர்வுள்ள அன்பர்களே உண்மை நிலை அனைவரும் அறிந்திட .......இறுதி வெற்றி என்றும் இடைநிலை ஆசிரியருக்கே ..டாட்டா கிப்சன்.

இடைநிலை காலிப் பணியிடங்கள் :- 22-08-2015


📲📲📲📲📲📲📲📲📲📲
தற்போதைய தகவல்:
காஞ்சிபுரம் மாவட்டம்,

🌻மதுராந்தகம் ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் விவரம்;-
1)பவுந்தங்கரணை,
2)மேல்வசலை,
3)அத்திவாக்கம்,
4)குருவாபதன்மேடு,5)ஓணம்பாக்கம்,
6)ஜமின் எண்டத்தூர்,
7)குன்னத்தூர்

Pudukottai vacant place 101 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Aranthangi 11
Arimalam 4
Annavasal 19
Kundrandar koil 8
Avudayar koil 11
Manamel kudi 7
Viralimalai 15
Karambakudi 17

Erode Dt: 🌷🌷🌷🌷🌷🌷🌷
Nambuyur block vacant:
Mettukadu..1l.
sanarpalayam2
Sengalipalayam1
Polavapalayam 1
Semmampalayam 1
Kannakattupalayam1
Vemandampalayam1
Arasankuttaipudur1
Thottipalayam1
Theethampalayam1
Varappalayam 1
Alagegoundampalayam1

Modakkurichi Block:
1.pups-Utharankattupudur
2.pups-kovilpalayam
3.pums-muthugoundanpalayam.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் பட்டியல் ( 17 ). 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆலங்குளம் ஒன்றியம் :
1.மாவிலியூத்து.
2.தங்கம்மாள்புரம்.
3.கருப்பினான்குளம்.

குருவிகுளம் ஒன்றியம் :
4.ஓடைகாரன்பட்டி.
5.ஆராய்ச்சி பட்டி.
6.கணபதி பட்டி.
7.மேல நாலாந்தலா .

பாப்பாக்குடி ஒன்றியம் :
8.மருதம்புதுர்.

சங்கரன்கோவில் ஒன்றியம் :
9.வடந்த்தம்பதூர்.
10.பெரீயூர்.
11.வேலாயுதபுரம் .

கடையநல்லூர் ஒன்றியம் :
12.குழையநேரி.

கடையம் ஒன்றியம் :
13.பொட்டல்புதூர்.
14.நாலான் கட்டளை.

செங்கோட்டை ஒன்றியம்:
15.தவனை .
16.சாம்பார் வடகரை.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் :
17. புதுகிராமம்

தூத்துக்குடி மாவட்ட sec.gr காலிப் பணியிடம்: 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 .
புதூர.ஒன்றியம்: ,1.கழுகாசலபுரம் .2.தாப்பாத்தி 3. கீழ் அருனாசலபுரம் 4.முத்துசாமி புரம்.

BT vacant ,,,1.(maths)singilipatty.
விளாத்திகுளம் ஒன்றியம்.sec.Gr:
1.கந்தசாமிபுரம் 2.மாமூநயினார்புரம்
Krishnagiri Dt :
📲📲📲📲📲📲📲📲📲
In veppanapalli block there are SG vacants the list of scls follows with
kilo meters.
From krishnagiri-

*veppanapalli
(23km)-3
*Kattaiyambedu
(43km)-1
*Periya Bathlapalli(36km)-1
*chenna santhiram20km-1
Next year deployment.
*Ipiganapalli30km-1 Next year deployment.
*Edipalli40km-1
*M.Gollapalli35km-1
*K.N.Podur38km-1
*Theertham36km-2.
*Chinna kothur25km-2
*Gangamadugu
36km-1
*veppanapalli Teludu 1
*P.Thammandarapalli
33km-1
*Manavaranapalli
33km-2
*Nerlagiri 33km-1
*Naduvanapalli
23km-1
*Jedukothur31km-2
*Nallur31km-1
*Viruppasanthiram 21km-1
*Kuriyanapalli-30km-1
*Bathimadugu 45km-1
*Varagasanthiram
23km-1
*Nedusalai21km-1
*Marasanthiram
20km-1
Ramasanthiram

20km-1.

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது............

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.
திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம. மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
,ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை குறித்து நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களிடம் அரசின் அபிடவிட் காட்டி விவாதம் செய்யப்பட்டது .அவர்கள் இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற பல்வேறு சாத்தியம் உள்ளன .மேலும் வழக்கை டெல்லி யில் தங்கியிருந்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர் அவர்களை வைத்து கொள்ளுங்கள் என்றார் .நாம் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திரு .ந்ந்தகுமார அவர்கள் நடத்த உள்ளார் என்றோம் .நல்லது. என்றார்கள் .மேலும் விரைவாக தடையை நீக்கம் செய்து ஆணை பெற்று வாருங்கள் .அதை வைத்து உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இறுக்கும் வழக்கு எண் 5301/2015;தீர்ப்பு பெற முடியும். என்றார் கள் .எனவே இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கே .
இதுவரை உச்ச நீதிமன்றம் வழக்குக்கு நன்கொடை ₹.12,350/-மட்டுமே வரப்பட்டது .நமது தேவை ₹2,50,000ஆகும் .இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் இது இறுதி யுத்தம் ஆகும் .நாம் தற்போது விட்டு விட்டால் நம் ஆயுள் இறுதி வரை பாதிப்பு தொடருந்து வரும் .உணர்ந்து போராட்டம் சட்ட போராட்டம் செய்து வெற்றி பெறுவோம் ......டாட்டா கிப்சன்