PAGEVIEWERS
தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:1.பாலக்காடு- ஈரோடு
2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில்4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக)
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில்
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக)
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA)
1.6.2009 க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களை
வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது
என்பதற்கான விளக்கம்.
அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தற்போது (01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை
ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு
தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்காண் வகையில் நியமனம்
பெற்றவர்கள்
மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா
அவர்களிடமும்,
மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை
செயலாளர் அவர்களிடமும்
கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA )
முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம்
செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி
இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்
மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள்,
மாணவர்கள், சிறுபான்மை மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக்
கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித்
திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில், ஏழு மண்டலங்கள் உள்ளன. இந்திய
மொழிகள் பற்றி பயிலும் திட்டம் இவற்றில் உள்ளது. மொத்த இடங்கள் 506.
பல்வேறு பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. மைசூரில் தென் மண்டல மொழிகளின்
மையம் செயல்படுகிறது. இங்கு கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற
மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடுவண்
அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள்
இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து
படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு
கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள்
நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு
பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில்
இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார்.
பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்
செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக
வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்
எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான்
இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக்
கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான்
இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர்
வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்
கூறினார்.
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில்,
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை
மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு,
கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என,
நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி
பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" - Dinamalar
லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த
வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது என, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம்,
சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி, குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க
பள்ளி, புதுக்குடி முருகா துவக்க பள்ளி, சொக்கம்பட்டி ஹரிஜன் துவக்க பள்ளி
செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்: