PAGEVIEWERS


ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு..

 


கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற நினைக்கும்   ஆசிரியர்களுக்கு  TATA வின் எச்சரிக்கை அறிவிப்பு 

      ஏற்கனவே நமது சங்கம் இலஞ்ச ஒழிப்பு காவல் துறையில்  கொடுத்த புகார் ( 1000 கோடி நிர்வாக பணி மாறுதல் ஊழல் ) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .  அதன் பேரில் தற்போது அனைத்து கல்வித்துறை அலுவலங்களிலும் 2006 முதல் 2011 வரை கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது ..

               தயவு செய்து இனிமேல்  கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்   TATA  எச்சரிக்கை செய்கிறது .
 
 நமது சங்கம் வழக்கு மூலம் 2006 க்கு பின் பணம் கொடுத்து மாறுதல் பெற்றவர்களுக்கு மிக பெரிய பாதிப்பு வர உள்ளது என்பதால்     தயவு செய்து இனிமேல்  கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்   TATA  எச்சரிக்கை செய்கிறது
அன்பார்ந்த ஆசிரியர்களே கையூட்டு கொடுத்து பணிமாறுதல் பெற்று வரும் ஆசிரியர்களால் உங்கள் பதவி ஊயர்வு பாதிக்கப்பட்டு உள்ளதா ? 

      இதோ உங்கள் பாதிப்பை போக்கிட நீதிமன்ற ஆணை ...2 வாரத்தில் பதவி உயர்வு வழங்கிட ஆணை ...
பாதிப்பு உள்ளவர்கள் TATA மாநில அமைப்பை தொடர்பு கொள்ளவும்  ...9443464081.


 

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு..

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப்
பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...
 
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status: Disposed
Status Of: WRIT PETITION
Case No.: 9247
Year : 2014
Petitioner : R.SARAVANAN
Respondent : GOVERNMENT OF TAMILNADU
Pet's Advocate : M/S.ROW AND REDDY
Res's Advocate :
Category :Service
  Last Listed on: No Date Mentioned
Case Updated on : Apr 23 2014
No Connected Application(s) No Connected Matter(s)

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 100 த.ஆ, 900 மு.ப.ஆ பணியிடங்களுக்கு 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு....

 


பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு...

 


ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -

CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus 

 Important Dates
Application Forms are issued from 
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

DEPARTMENTAL EXAM - ONLINE APPLY - TO DAY IS THE LAST CHANCE - துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

CLICK HERE TO ONLINE APPLY......


Selected Tests and Fees
Test 1 :Edu.Dept-Deputy Inspectors Test - Paper-I 004 (50
Test 2 :Edu.Dept-Deputy Inspectors Test - Paper-II 01750
Test 3 :Edu.Dept-Dy.Inspector Test-Educational Statistics 11950
Test 4 :Tamil Nadu Government Office Manual Test 20850
Test 5 :Account Test for Subordinate Officers - Part I 17650
Test 6 :Account Test for Executive Officers - 11450
Test 7 :

Test 8 :

 
Total Fees to be paid (including Rs 30 as Registration Fee) : Rs. 330
   



Departmental Examinations May 2014 - Instructions


தொடக்கக் கல்வி - கருவூல ஒத்திசைப் பணி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலிருந்தும் ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 முடிய கருவூல ஒத்திசைவு செய்யப்பட்ட தொகை குறிப்பிடப்பட்டு கருவூல அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று அனுப்ப உத்தரவு.....


பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - நேரடி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு

 

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பணி என்ன? சிலைடு ஷோ விளக்கம்

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் 2014-2016 ஆம் கல்வியாண்டுக்கான B.Ed விண்ணப்பபடிவங்கள் வரவேற்கின்றன


தமிழகத்தில் 24.4.2014- அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசு பொது விடுமுறை அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது.

 

 இனிய சித்திரைத் திருநாள் 

                                   நல்வாழ்த்துக்கள்



TATA - வின்  மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.


தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு  மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று இறுதி விசாரணைக்கு வர உள்ளது .
         அ .ஆ ,எண் ;1383/கல்வி /88. நாள் ;23.08.1988  ( தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள்  ) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14/ 15/மற்றும் 16 க்கு எதிராக உள்ளது .ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . அதில் அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது .ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்ய வில்லை . 
                            மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யாத நிலையில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது .மேலும் இந்த தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம் .தொடர்புக்கு ;கிப்சன் ;9443464081.

                             இந்த  வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டல் வருகிற 2014  ஆண்டிற்கான பதவி உயர்வு மாநில சீனியரிட்டி படி தான் நடத்திட வேண்டும் .
மேலும் தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெறலாம் .

                    பள்ளி கல்வி துறை போல் தொடக்கக் கல்வி துறையிலும்  ஒரே விதி முறை பின்பற்றிட வேண்டும் .எங்கு பணி மாறுதல் பெற்றாலும்  சீனியரிட்டி பாதிப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் , தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெற  வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நமது சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம் .வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம்.

MADRAS HIGH COURT - MADURAI BENCH 
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status    :  Pending

Status of          WRIT PETITION(MD)  4773        of    2011    
C. KIPSON, S/O.CHELLADURAI,                 Vs.                  THE GOVERNMENT OF TAMIL NADU,
Pet's Adv.       :   M/S. K. BAALASUNDHARAM                   
Res's Adv.      :       
Last Listed On        :   26/4/2011    
Next Date of Hearing :     Tuesday, April 26, 2011     
Category        :   Service     
CONNECTED APPLICATION (S)

  MP(MD)   1    of  2011

CONNECTED MATTER (S)

No Connected Cases. 
    
Case Updated on:   Wednesday, April 27, 2011 
TATA - வின் இடை நிலை சிரியரின் ஊதிய வழக்கு W.P .NO; 33399/13. குறித்து  தற்போதைய  நிலை  விபரம் ......

           சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து வதந்திகளை பரப்பி வருவதை தடுப்பதற்காக இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது ....  

                  ஏற்கனவே அரசு தரப்பில் நமது ஊதிய வழக்கில் 7 முறை வாய்தா வாங்கியுள்ளனர் , தற்போது பாராளுமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர் வெளியூரில் இருப்பதாலும் தேர்தல் நடைமுறை காரணமாகவும் பதில் மனு தாக்கல் செய்திட 2 மாதம் கால அவகாசம் அரசு  தரப்பில்  8 வது முறையாக  வாய்தா வாங்கியுள்ளனர். மீண்டும் வழக்கு வரும் ஜூன் மாதம் 2 வது வாரம் நிதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் ,.

                   சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து , வழக்கு தள்ளு படி செய்யப்பட்டு விட்டது எனவும் , நமக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டது எனவும் ,,  வழக்கை நம்ப வேண்டாம் ,அதில் பயன் கிடைக்காது என நமது வழக்கிற்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதை நம்பவேண்டாம் , உங்களுக்கு வழக்கு 
 குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி மூலம்  9443464081  தொடர்பு கொண்டு பேசி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் ,


CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status:Pending
Status Of:WRIT PETITION
Case No.:33399
Year :2013
Petitioner :C.KIPSON
Respondent :THE STATE OF TAMILNADU
Pet's Advocate :M/S.AJMAL ASSOCIATES
Res's Advocate :MR.A. LECIMAN
Category :Service
Last Listed on: No Date Mentioned
Case Updated     on                                                      - 18  - 2014
No Connected Application(s)No Connected Matter(s)


 


அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

 


EXPECTED 7TH CPC PAY SCALE


6th CPC PAY STRUCTUREEXPECTED PAY STRUCTURE OF 7TH CPC
Pay BandPay BandsGrade PayPay in the Pay BandPay ScalePay BandGrade PayPay in the Pay BandPay Scale
PB-15200-2020018005200700015000-6000050001500020000
PB-15200-2020019005830773015000-6000055001700022500
PB-15200-2020020006460846015000-6000065002000026500
PB-15200-2020024007510991015000-6000075002300030500
PB-15200-20200280085601136015000-6000085002600034500









PB-29300-34800420093001350030000-100000100003000040000
PB-29300-348004600125401714030000-100000135003500048500
PB-29300-348004800133501815030000-100000150004000055000









PB-315600-391005400156002100050000-150000165005000066500
PB-315600-391006600187502553050000-150000200006000080000
PB-315600-391007600219002950050000-150000230007000093000









PB-437400-6700087003740046100100000-20000026000100000126000
PB-437400-6700089004020049100100000-20000027500110000137500
PB-437400-67000100004300053000100000-20000030000120000150000

LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

 


ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

 

அரசாணை எண்.100 நிதித்துறை நாள்.09.04.2014 - ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு

 

அன்பான ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ;-

4 ( 3 ) விதி படி 2006 ம் ஆண்டு நடை முறை படுத்தப்பட்ட 6 வது திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது ,

 சில மாவட்டங்களில் சில AEEO மற்றும்  MIDDLE H.M  களுக்கு 4 ( 3 ) விதி படிஊதியம் நிர்ணயம் செய்து பண பலன் பெற்று உள்ளனர் ,அவர்களுக்கு பணி ஒய்வு பெறும்போது  A G  கணக்கு முடிக்கும் போது பதிப்பு ஏற்படலாம் 

அன்பார்ந்த ஆசிரியர்களே இலையோர் மூத்தோர்  ஊதிய முரண்பட்டால் பதிக்கப்பட்டுள்ளவர்களே RTI கடிதத்தில் கண்டப்படி ரூ 1004 செலுத்தி இதற்கான கூடுதல் விபரம் , ஆதாரம் பெற என்னை தொடர்பு கொள்ளவும் .

  4 ( 3 ) விதி தற்போது நடைமுறையில் இல்லாததால் உங்கள் பாதிப்பு நீங்கிட உண்மையை உணர்ந்து  TATA - சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக வாருங்கள் , நமது சங்கம் வளர கிளைகளை உருவாக்குங்கள் 

S.C.KIPSON --9443464081////9840876481..
TATA -பொது செயலாளர் ..






 







 
TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று பள்ளி  கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு .ராமேஸ்வர முருகன் அவர்களுடன் சந்திப்பு 

1 ) புதுகோட்டை மாவட்டம் -கிள்ளு கோட்டை -அரசு உயர் நிலை பள்ளி த.ஆ அவர்கள் ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 மாத ஊதியம் பெற்று வழங்காதது குறித்தும் ,பிற நடவடிக்கை குறித்தும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவித்ததும் உடனடியாக CEO அவர்களை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்கள் .

2 )  பள்ளி கல்வி துறையில் வரலாறு ,ஆங்கிலம் பாட பிரிவுகளில் ஒரே  பாடத்தில் இளநிலை  , முதுநிலை பட்டம் படித்தவர்களை மட்டுமே  முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .

3 .) திருநெல்வேலி -DEEO அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர்     மற்றும் திருச்சி -  தா. பேட்டை  AEEO  அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் அவர்களை பணி மாறுதல் செய்திட மனு கொடுக்கப்பட்டது .

TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு ,இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு 

 கோரிக்கை விபரம் ;

1) இடை நிலை ஆசிரியருக்கு ஊதிய முரண்பாடு ஏற்பட காரணமான தொடக்கக் கல்வி சார் நிலை பனி விதிகள் அ .ஆ .எண் ;1383/கல்வி / நாள் ;23.08.1988 .ல் விதி 6 ன் படி கல்வி தகுதி SSLC ,சான்றிதழ் படிப்பு .எனவும் விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது எனவும் உள்ளதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு படியும் மாற்றி அமைக்க வேண்டும் என்றோம் .அதற்கு அவர் இதை கூறி மறுக்க வில்லை அது வேறு காரணம் நானும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ .ப .அறிக்கை படித்தேன் என்றார் .நாம் RTI மூலம் பெற்றதை காட்டி விளக்கியும் முழு மனதாக ஏற்க வில்லை .

2 ) திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து உயர் கல்வி -13 பேரின் பின்னேர்ப்பு -ஊக்க ஊதிய பெற இயக்குனர் அலுவலகத்தில் 6 மதமாக நிலுவையில் உள்ள கோப்புகளை அனுமதி வழங்கி அனைத்து மாவட்டத்தில் உள்ள  ஆசிரியர்களும்   பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .

3 ) கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ஓன்றியத்தில் B. Lit தகுதியில் பதவி உயர்வு பெற்ற 9 ந .நி பள்ளி .தலைமை  .ஆசிரியர்களுக்கு   பின் B.Ed  படித்ததற்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் .இது போல் அனைத்து மாவட்டத்தின் ஆசிரியர்களும் பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .

4 ) திருச்சி -முசிறி  ஒன்றிய AAEEO ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் பண பலன் பெற்று வழங்கப்படாதது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப் பட்டது .உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள் .

5  )  திருநெல்வேலி மாவட்டம் -மானூர் -ஒன்றியம் -திருமதி .ராஜா மணி அமலி ராணி   அவர்களுக்கு வயது தளர்வு ஆணை பெற இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்ப பட்ட பணிப்பதிவேடு 4 வருடமாக ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது அதனால் 4 வருட ஊதிய உயர்வும் , சரண்டர் பணபலன் பெற முடியாமல் உள்ளது .விரைவில் ஆணை வழங்கி கோப்புகள் அனுப்பப்படும் என்றார்கள் .

6 )    திருநெல்வேலி மாவட்டம் -ஆலங்குளம்  -ஒன்றியதில்  T.D.T.A. பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற திரு.டேனியல் அவர்கள் கையூட்டு  AEEO,DEEO க்கு கொடுக்காத காரணத்தால் 9 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது விரைவில் ஊதியம் பெறவும் த .ஆ . பணியிட ஒப்புதல் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் .

7 ) தமிழ் நாட்டில் 80% பள்ளிகள் ஓட்டு கட்டடத்திலும் ,60 % பள்ளிகள் மின்சார வசதி இல்லாமலும்   மின்தடை காரணமாகவும் அதிகரிக்கும் வெயிலில் மாணவ குழந்க்தைகள் பாதிக்கப்படுவதால் RTE சட்ட படி வேலை நாள் 200 ஆக குறைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டோம் ,

8 ) CRC பயிற்சி நாளை பணி நாளக ஏற்றது போல் தேர்தல்  பயிற்சி நாளையும் ,வாக்குபதிவு நாள் ,அதற்கு முந்தய  நாளையும் பணி நாளக அல்லது 4 நாள் ஈடு செய் விடுப்பு வழங்கிட இயக்குனர்,பள்ளி கல்வி செயலாளர் ,தேர்தல் ஆணையர் ஆகியேரிடம் மனு நேரில் கொடுக்கப்பட்டது .

9 )  திருநெல்வேலி மாவட்டம் -களக்காடு   -ஒன்றியதில் UASS துவக்கப்பள்ளி த .ஆ  பணிபுரிந்த திருமதி .யுனைசி கிரேனா அவர்களை முறைகேடாக நிரந்தர பணி நீக்கம் செய்து 4 வருடமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் பணி ஆணை வழங்கும் வரை 20.05.2014 அன்று முதல் காலவரை யற்ற போராட்டம் TATAசங்கத்துடன் பதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பம்,குழந்க்தைகளுடன் நடைபெறும் .

10 ) சேலம் -ஏற்காடு -நல்லூர் -பள்ளி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 எ  ஆணை ரத்து செய்திட மறு விசாரணை செய்திட வேண்டும் .மேலும் தாரமங்கலம் AEEO மீது துறை நடவடிக்கை எடுக்க மனு கோடுக்கப்பட்டது .
இடை நிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988.ன் படி தொடக்க  கல்வி சார்நிலை பணி விதிகள்  .விதி  6 ன் படி இடை நிலை ஆசிரியர்  கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது ,
  
       இதை  கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு  படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

   இந்த  அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி  +2  , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும் .

இதோ மனு உங்கள் பார்வைக்கு 




 
திருநெல்வேலி -தினத்தந்தி -பக்கம் -2 ல் நமது சங்கம் சார்பான செய்தி ...........