PAGEVIEWERS











அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

 

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு..

 

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 1 சென்னை சி.எஸ்.. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர்,சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம்,தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு,
திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜிமருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி,பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்விஅலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி,இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல்முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகிஅண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம்
திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலிடவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசுமேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர்கோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி,வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.


32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
 
2000 முதல் 2010 வரை தேர்ச்சி பெற்றவர்கள் 
இடைநிலை ஆசிரியர்கள் விபரம் - அரசு தேர்வு வாரியம் அறிவிப்பு ...



14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

 


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.;-

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.


முதுகலை ஆசிரியர்கள் ;-
 
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்;-
 
மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்;-
 
மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.201

விரைவில் பணி நியமன ஆணை -TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

 

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள்அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...சென்ற ஆண்டு நடந்தகலந்தாய்விற்கு போது
பின்பற்றப்பட்ட நடை முறை...

கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின்  நகல்களும்கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன்கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள்நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TETகலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..

நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்தசான்றிதழ்களின்  நகல்களை எடுத்து செல்வோம்..

முக்கியமாக

1. தேர்வுக்கான நுழைவுசீட்டு

2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.

4.உங்கள் சன்றோப்பமிட்ட  பள்ளி கல்லூரி சான்றிதழ்  நகல்கள் 2செட்...


5. passport size புகைப்படம் 3

TNTET- PAPER 1- LIST....

 


தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு..

 


PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு..

 


 TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY..

 

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..

 

             


CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு



I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S
D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R
W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2
S . S i m i e o n   R a j                               
. . .   P e t i t i o n e r
V s .

1 .   G o v e r n m e n t   o f   T a m i l   N a d u
R e p .   b y   i t s   S e c r e t a r y   t o   G o v e r n m e n t
F o r e s t   a n d   E n v i r o n m e n t   D e p a r t m e n t
F o r t   S t . G e o r g e
C h e n n a i   ​   6 0 0   0 0 9 .

2 .   T h e   P r i n c i p a l   C h i e f   C o n s e r v a t o r   o f   F o r e s t s
P a n a g a l   B u i l d i n g ,   S a i d a p e t
C h e n n a i   ​   6 0 0   0 1 5

3 .   T h e   D i s t r i c t   F o r e s t   O f f i c e r ,
T i r u p a t t u r   F o r e s t   D i v i s i o n   a n d
J o i n t   D i r e c t o r   o f   A a n a i m a l a i   T i g e r   R e s e r v e   F o r e s t ,
U d u m a l a i p e t t a i ,
T i r u p a t h u r   D i s t r i c t .

4 .   T h e   A c c o u n t a n t   G e n e r a l   o f   T . N a d u
O f f i c e   o f   t h e   A c c o u n t a n t   G e n e r a l
O f f i c e   a t   T e y n a m p e t
C h e n n a i   ​   6 0 0   0 1 8 .                                     . . . 
R e s p o n d e n t s
W r i t   p e t i t i o n   f i l e d   u n d e r   A r t i c l e   2 2 6   o f   t h e   C o n s t i t u t i o n   o f   I n d i a
t o   i s s u e   a   w r i t   o f   M a n d a m u s   d i r e c t i n g   t h e   r e s p o n d e n t s   t o   c o u n t   h a l f   o f   t h e   s e r v i c e
r e n d e r e d   b y   t h e   p e t i t i o n e r   a s   S o c i a l   F o r e s t r y   W o r k e r   f r o m   0 1 . 0 9 . 1 9 8 2   t i l l
2 0 . 0 8 . 2 0 0 5   a l o n g   w i t h   r e g u l a r   s e r v i c e   r e n d e r e d   b y   h i m   a s   F o r e s t   W a t c h e r   f r o m
2 4 . 0 8 . 2 0 0 5   t o   3 1 . 0 7 . 2 0 1 1   a s   q u a l i f y i n g   s e r v i c e   a n d   s e n d   t h e   r e v i s e d   p r o p o s a l   t o
t h e   f o u r t h   r e s p o n d e n t   a n d   t o   g r a n t   p e n s i o n   w i t h   a l l   c o n s e q u e n t i a l   m o n e t a r y
b e n e f i t s .

DSE - SSLC / HSC QAURTERLY EXAMINATION TIME TABLE SEPTEMBER 2014........


2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு....

 


புதிய பென்ஷன் திட்டத்தில் 
 
 
கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் 
 
இல்லாததால் தமிழகத்தில் ஒரு 
 
 
லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 
 
லட்சம் அரசு ஊழியர்கள் 
 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசு வேலையை விரும்புகின்றனர். நாங்களும் அப்படி நினைத்துதான் பணியில் சேர்ந்தோம். ஆனால், தற்போது அந்தப் பயன்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழக அரசு முன்பு நடைமுறையில் இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.
நன்றி தி ஹிந்து 21.8.14
.