PAGEVIEWERS

முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை-தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

2015 -2016 கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டியவை ...







    
  

 
 

TRB-PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED & SUPPLEMENTARY PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

Click here Provisional list and Supplementary list of Candidates selected after C.V 

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் 11.05.2015க்குள் அளிக்க இயக்குனர் உத்தரவு

நல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி? யோசனை கூறவும். 

இன்றைய போட்டிச் சூழலில் ஒரு பணிக்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள். அனைவரையும் அழைத்து அவர்களை நேர்காணல் செய்து வேலை தருவது என்பது சாத்தியமில்லை.
இதனால் பல நிறுவனங்களும் முதற்கட்டத் தேர்வாக பயோடேட்டாவைத் தான் பரிசீலித்து விண்ணப்பித்தவர்களை சுருக்கி சிலரை மட்டும்  நேர்முகத் தேர்வுக்கோ போட்டித் தேர்வுக்கோ அழைக்கிறார்கள். எனவே Resume எனப்படும் பயோடேட்டாவானது நமது பணிக்கான  அடிப்படையாக அமைகிறது. எப்படி இதைத்தயாரிக்கலாம்?
* நீங்கள் நுழைய விரும்பும் துறை சார்ந்த உங்களது அறிவுத் திறன்களை முறைப்படி வரிசைப்படுத்துங்கள். உங்களது பயோடேட்டாவின்  ஆரம்பத்திலேயே துறை சார்ந்த உங்களது திறன்கள் குறிப்பிடப்பட வேண்டும். உங்களது பயோடேட்டாவை பரிசீலிக்க இருப்பது அத்துறையைச் சேர்ந்த திறம்படைத்த ஒருவர் தான். எனினும் பொதுவாக இது போன்றவரை நமது பயோ டேட்டா சென்றடைவதற்கு முன்பு அவை  பல்வேறு நபர்களாலும் "கீ வேர்ட் சர்ச்"மூலமாகவும் வகைப்படுத்தப் படுகின்றன. எனவே சரியான வரிசைப்படுத்தவது என்பது மிக  முக்கியம்.

சென்னைப் பல்கலையின் இலவச கல்வித் திட்டம்


சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்திவரும் இலவச கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கு, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னைப் பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்(அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி) இத்திட்டத்தின் கீழ், இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மேற்கண்ட 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
ஆதரவற்ற மாணவர்கள், விவசாய கூலிகளின் பிள்ளைகள், முதல் தலைமுறையாக பட்டப் படிப்பில் சேருபவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், விண்ணப்பத்தை, பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.unom.ac.in

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்....

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்!


ரஷ்யா மற்றும் கிரிகீஸ் குடியரசில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்திய மருத்துவ கழகம் மறம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இங்கு பயில்வதற்கு தேவையான கல்வித் த-குதி மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கழக கோரிக்கைப்படி, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவின் முதல் கட்டத் தேர்வான "ஸ்கிரீனிங் டெஸ்ட்" தேர்ச்சி பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகின்றனர் மேலும் சில மருத்துவர்கள் ஆராய்ச்சி துறையிலும் சாதித்து வருகின்றனர்.

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை.........

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக பணியமர்த்தப்படுவர்.

பணி:

எம்பிபிஎஸ். கால அளவு:4½ வருடம் படிப்பு மற்றும் ஒரு வருடம் பயிற்சி (internship).

மொத்த இடங்கள்:

130. ஆண்கள்-105. பெண்கள்-25.

அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்

'பினாமி அரசு, செயல்படாத அரசு, பொம்மை அரசு, ஆலோசகர் அரசு' என, பல பெயர்களை பெற்றுள்ள, தமிழக அரசுக்கு புதிதாக, தற்போது, '45 சதவீத அரசு' என்ற பெயர் கிடைத்துள்ளது.

பொதுப்பணித் துறையில், எந்த பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45 சதவீதத்தை, கமிஷனாக கொடுக்க வேண்டி உள்ளது என, ஒப்பந்ததாரர்கள் கூறிய குற்றச்சாட்டு, தமிழகத்தை உலுக்கி உள்ளது.கமிஷனாக, 45 சதவீதம் கொடுத்தால், வேலை தரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.'பொதுப்பணித் துறையில் ஊழல் அதிகம் வாங்குவோர் பெயர் பட்டியலை வெளியிடுவோம்' என, பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது.

இதை படித்த, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தன், 'முகநுாலில்' எழுதி இருப்பதாவது:
என்ன ஒரு வெட்கக்கேடு? கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் என்பது வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. அனைத்து வகையான வேலைகளுக்கும், 'டெண்டர்' எடுப்போர், 45 சதவீதம் கமிஷன் கொடுப்பதை, செய்திகள் வெளிப்படுத்தி உள்ளன.இவ்வளவு கமிஷன் கொடுப்பவர்கள், எப்படி நல்ல உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியும்? பொதுப்பணித் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கட்டப்படும், கட்டடம், பாலம், சாலை போன்றவை எப்படி தரமாக இருக்கும்?தமிழக அரசின் மொத்த பட்ஜெட் தொகை, 1.42 லட்சம் கோடி ரூபாய். இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய், உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய், கீழ்மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் பணமாக செல்கிறது. பட்ஜெட்டில், 41,215.57 கோடி ரூபாய், அரசு ஊழியர் சம்பளத்திற்காகவும், 18,667.86 கோடி ரூபாய், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த வருவாய் செலவில், 40.65 சதவீதம்.இத்தொகை, மக்கள் செலுத்தும் வரிகள் மூலம் வருகிறது. துாய்மையான நிர்வாகத்தை தருவதற்காகவும், தரமான சேவையை வழங்கவும், வரி செலுத்துகிறோம்.

'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில், 45 சதவீதம் கமிஷன் தொகை, அதிகார மட்டத்திற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரிப்பணம், ஊழலுக்காக செலவிடப்படுவது, வெட்கப்பட வேண்டிய விஷயம்.நடப்பாண்டு பட்ஜெட்டில், மானியம் வழங்குவதற்காக, 59,185.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. இதில், 11,837 கோடி ரூபாய் (20 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.நடப்பாண்டு பட்ஜெட்டில், இலவச லேப் - டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்க, 10,364.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 3,109 கோடி ரூபாய் (30 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.மூலதன செலவு, 2014 - 15ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 23,808.96 கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை, நடப்பு பட்ஜெட்டில், 27,213.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி விகிதம், 14.30 சதவீதம்.மூலதன செலவில், 10,713 கோடி ரூபாய் (45 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு, 25,659 கோடி ரூபாய், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது, 17.98 சதவீதம் ஆகும்.

இதன் காரணமாகத்தான், அரசியலில் நுழையவும், அரசு பணிக்கு செல்லவும், பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.ஆனால், மக்கள் ஏழைகளாக உள்ளனர். அரசியல் கட்சியினர், பொதுமக்களுக்கு கட்சி மீது உள்ள பற்று, ஜாதி மற்றும் பணத்தின் மூலம், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கின்றனர்.ஆனால், 60 சதவீதம் இளைஞர்கள் மற்றும் பொதுவான மக்கள், நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்கள் தினசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், 1.92 லட்சம் பொறியியல் பட்டதாரிகள், 4 லட்சம் இதர பட்டதாரிகள், ஆண்டுதோறும் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.அனைவரும் இளைஞர்கள். அவர்கள் எங்கே செல்வர்? நீர், எரிசக்தி, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை மற்றும் சேவை நிறுவனங்களில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.புதிய தொழிற்சாலைகள் இல்லை. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடத் தொழில், சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாக்டர் படிப்புக்கான 'சீட்' பெற, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், ஒரு 'சீட்,' 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது; எம்.டி., 'சீட்,' 3 கோடி ரூபாய்.அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். தமிழகத்தில், ஓய்வூதியர்கள் உட்பட, 18 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், ஓய்வூதியம் பெறுவோர், 3.60 லட்சம் என எடுத்துக் கொண்டால், 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்; கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 20 லட்சம்; துணைவேந்தர் பணிக்கு, 3 முதல் 7 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக பெறப்படுகிறது.இந்த பட்டியல் நீண்டபடி செல்கிறது. இதுகுறித்து சிந்தித்தால், எதிர்காலம் பயங்கரமாக காட்சி அளிக்கிறது.அதேநேரம், அரசு கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. தற்போது, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும், 30 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.நடப்பாண்டு, 30,446.68 கோடி ரூபாய், கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதி வரை, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் பற்றாக்குறை, 4,616.02 கோடி ரூபாய்.
லஞ்சம் கொடுத்து, வேலை பெற்றவரால், அரசுக்காக, மக்களுக்காக சேவை செய்ய முடியாது. அவரது மனம், கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதிலேயே செல்லும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்.பாதிக்கப்படும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு போடுகின்றனர். வெற்றி பெறும் கட்சி, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் என நம்புகின்றனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம். உயர்கல்வி வாய்ப்பை எப்படி வழங்க உள்ளோம். எங்கும் ஊழல் நிறைந்திருந்தால், அவர்களுக்கு எப்படி தரமான வாழ்க்கையை அளிக்க முடியும்?இவற்றை அலசி பார்த்தால், சில கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. அதற்கு விடைகளை கண்டறிய வேண்டும்.அடுத்த ஆண்டு, தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த கட்சி, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக அறிவிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, நதிகளை இணைப்பதாகவும், வேளாண்மை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை உருவாக்குவதாகவும், மின்சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகிறது என, பார்க்க வேண்டும்.இளைஞர்களே... இந்த கேள்விகளை, உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள்! எந்த கட்சி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தும்; தரமான சேவையை அளிக்க தயாராக உள்ளது யார்; ஊழலற்ற நிர்வாகத்தை தரும் மாற்று யார் என, சிந்தியுங்கள்!இவ்வாறு, பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., துணைப் பொதுச் செயலர் துரைமுருகன்:

பொதுப்பணித் துறை மட்டுமல்ல; நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கமிஷன் பெறுவது, அ.தி.மு.க., ஆட்சியில் சகஜமாகி விட்டது. திட்டப் பணிகளுக்காக, கமிஷன் பெற்றால், அந்த பணிகள் முழுமை பெறாது. கட்டடப்பணி, எர்த் பணி, துார்வாரும் பணிகளில் கமிஷன் கொடுத்தால், தரம் வாய்ந்த பணிகளாக நிறைவு பெறாது.துார்வாரும் கான்ட்ராக்டர்கள் மண் அள்ளும் இயந்திரத்திற்கு வாடகை தர வேண்டும்; பணியாளர்களுக்கு கூலி தர வேண்டும். கமிஷனை கொடுத்து விட்டால், மற்ற பணிகளை எப்படி செய்து முடிக்க முடியும்? அதனால் தான் அனைத்து பணிகளிலும் தரம் கெட்டு காணப்படுகிறது.

ஞானதேசிகன், த.மா.கா., மூத்த தலைவர்:

கமிஷன் வாங்கும், கொடுக்கும் குற்றச்சாட்டுக்களை தடுக்கத் தான், த.மா.கா., பொதுக்குழுவில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். கையூட்டு, கமிஷன் போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க, மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும். அப்போது தான் குற்றச்சாட்டுகள் வராமல் இருக்கும். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்.கம்யூ., கட்சி மாநில செயலர்:

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி துறை கான்ட்ராக்டர்களிடம், கமிஷன் பெறுவது நீக்கமற இருக்கிறது. ஊழல் நடக்காமல் இருக்க, லஞ்சம் கொடுத்தாலும் குற்றம், வாங்கினாலும் குற்றம் என்ற அச்சத்தை உணர்த்தும், லோக் ஆயுக்தா சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றி, மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,:

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும், ஊழல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. மக்கள் வரிப் பணம், மக்கள் நலத்திட்டத்திற்கு சென்றடைவதில்லை.மக்கள் வரிப்பணம், தனிநபர்களை சென்றடைவதால், அவர்கள் பணக்காரர்களாக உருவாகி வருகின்றனர். நல்ல அரசு நடந்தால், அதிகாரிகளுக்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்காது; ஊழல் செய்ய 'செக்' வைக்கப்படும்.ஆனால், அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தினால், ஊழல் நடக்கிறது. அதிகாரிகளும் அதற்கு துணை போகின்றனர். நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர்.அவர்களை, செயல்பட முடியாத வகையில் அழுத்தம் தரப்படுகிறது. ஓட்டு அளித்த மக்களுக்கு, நல்ல ரோடு வசதியை செய்து கொடுக்க, ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. தமிழகத்தில் நடப்பது, மக்கள் ஆட்சியா அல்லது ஊழல் ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள்:

பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள், அதிக லஞ்சம் வாங்கிய, 10 அதிகாரிகள் குறித்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில், புகார் செய்ய முடிவு செய்தனர்.இதற்காக, சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட, புகார் கடிதம் தயாரிக்கப்பட்டது. சங்கத் தலைவர் குணமணி, செயலர் பிரகாஷ், பொருளாளர் குமார், தொழில்நுட்ப ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.அதிகாரிகள் அவர்களை, மொபைல்போனில் அழைத்து, மாலை, 6:00 மணிக்குள், பிரச்னையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, ஊழல் ஒழிப்பு பிரிவில் புகார் கொடுக்கும் திட்டத்தை, அவர்கள் கைவிட்டனர். இதனால், இப்பிரச்னையில் சிக்கிய, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -

G.K.VASAN NEWS


பொது மாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்





BT to PG Promotion Panel

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம், வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1)

CLICK FOR      TAMIL....                        ENGLISH CM & SM.. . ...       
                    MATHS.....                   PHYSICS.......              
                  CHEM,BOT,ZOO....          POL.SCIENCE CM.....
                  GEOGRAPHY CM...        GEOGRAPHY SM....  
                   COMMERCE CM....         COMMERCE SM......
                     PHY.DR I.......  

அழைப்பு-வாருங்கள் பிச்சாவரத்திற்கு!...


பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்
இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
பிச்சாவரம் செல்ல உகந்த நேரம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.
எப்படி அடைவது: தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எங்கு தங்குவது: கடலூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
cuddalore, nature, ecotourism, tamil nadu English summary Pichavaram Mangrove forest - A natural wonder in Tamil Nadu Pichavaram Mangrove forest is a natural wonder in Tamil Nadu.It is the Second largest mangrove forest in the world. Lets take a one day trip to Pichavaram.