PAGEVIEWERS

ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6 வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது .கல்வி  துறை சார்பாக  டாட்டா சங்க சங்கம் SLP-9109/2015. ல்   I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? இதோ தடை ஆணை ...


யார் கள போராட்டம் செய்தாலும் சென்னை மாநில செயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு .

               தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு அரசு ஆணை 234 நிதி நாள் .1.6.2009 ன் படி நடைமுறை படுத்தப் பட்டது .அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே  பெற்று வந்ததை விட ரூ 370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது.தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 நிதி .நாள் 27.6.2009 ன் படி 1.1.2006 முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள் 1.86.என்ற விதியை பயன் படுத்தி ஊதியத்தை பெருக்கி நிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது .அதன் பின் அரசு ஆணை 444 ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அரசின் கைபாவையாக செயல் பட்டு முரண்பாடான அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிமன்றத்தை நாடினர் .நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை 123 ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில் விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது..டாட்டா சங்கம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்தது..மேலும் இணையம் மூலம் சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரயும் விழிப்படைய செய்த சங்கம் டாட்டா மட்டுமே .
                27.2.2014 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 ஊதிய குழு முரண்பாடுகளை தீர்க்க ஆனையிடப்பட்டது..தமிழக அரசின் 6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642 பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள் .மேலும் 72,000 இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு  டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது .தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு டாட்டா மட்டுமே சென்று உள்ளது. 5.5 இலச்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6 வது ஊதிய குழு வுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்கு நடத்துவது டாட்டா சங்கம் மட்டுமே .

                            அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011 ல் இருந்து சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில் 200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள் ஒட்டு மொத்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வில்லை .எனவே சாட்சி டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் .அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 என ஊதிய மாற்றம் ஏற்படும் .
                                மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வு நடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்ய முடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரை பணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதிய பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாத வரையில் தமிழ் நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது .இந்த நிலை ஏற்பட காரணம் தமிழக அரசு தான் கரணம் ஆகும் .
                                    மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6 ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7 ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும் .இதற்கு காரணம் டாட்டா வின் சட்ட போராட்டம் தான் .எனவே கண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெருவித்து கொள்கிறேன் .

                                                         டாட்டா  கிப்சன்            
                                                     .9025054081//9443464081..


அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மூன்று, மேல்நிலைப்பள்ளிகள், 18 என, மொத்தம், 21 பள்ளிகள் உள்ளன. கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், கூடுதலாக இருந்த, 14 ஆசிரியர்கள், பற்றாக்குறையான பணியிடங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டனர்.
*** கல்வி இயக்கக தெளிவுரைகளுடன்
உள்ள பதிவு...

தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களின்
பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு---
ஊதியமில்லா விடுப்பு எனும் நிலையை மாற்றி
முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ***

** அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 180 நாட்கள்
சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு
( UEL PA )உள்ளது. **

* இந்த 180 நாட்களை ஓய்வு பெறும் போது ஒப்புவிப்பு
செய்து 180 நாட்களுக்கு அரைச் சம்பளம் வீதம்
90 நாட்களுக்கு ஊதியம் பெறலாம். *

** ஆசிரியர்கள் இந்த 180 நாட்களில்
சுமார் 30 நாட்கள் கற்பித்தல் பயிற்சிக்கு சென்றால்,
நாம் எடுக்கும் 30 நாள் UEL PA விடுப்புக்கு,
15 நாள் ஊதியம் கிடைக்கும். **

** நம்முடைய இருப்பு 180-30=150 ஆக குறையும்.
எனவே ஓய்வு பெறும் போது, 75 நாட்களுக்கு
மட்டுமே ஊதியம் பெற முடியும்.
கற்பித்தல் காலம்-15 நாள் ஊதியம்+
ஓய்வு சமயம். -75 நாள் ஊதியம்=
மொத்தம். -90 நாள் ஊதியம் **

* கற்பித்தல் பயிற்சிக்கு LLP எடுத்து விட்டால்,ஓய்வு சமயம்
180 நாள் UEL PA க்குரிய 90 நாள் ஊதியம் பெறலாம். *

** எனவே கூட்டிக் கழித்துப் பாருங்களேன்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு...
அப்போ...அந்த ஒரு மாத ஊதியம்....?
Loss of pay தான். **

* எனவே நாம் பெறுவது அரைச் சம்பளம் அல்ல.
நமக்கு ஒரு மாத ஊதியம் இழப்பு ஏற்படுகிறது
என்பதை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். *

**** பள்ளிக் கல்வித்துறை
அரசுக் கடித எண்.48269/எம்2/94 நாள்.28.12.95

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
3849/சி32/96 நாள்.3.2.96

ஆகியவற்றின் படி
அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,தமிழாசிரியர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்கள்,தொழிலாசிரியர்கள்
ஆகியோர்கட்கு

பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டது. ****

*** எனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கற்பித்தல் பயிற்சிக்கு
LLP - Leave On Loss Of Pay என்பதை மாற்றி
முழு ஊதியம் பெற்றுத் தர வேண்டும். ***

👆 * மேற்காணும் செயல்முறைகளின் படி...
ஓய்வு நேரம் பயிற்சி எடுக்கலாம்.
பிஎட்., கற்பித்தல் பயிற்சி வகுப்பு எடுத்தல் காரணமாக
1.பள்ளி பாடநேரம் பாதிக்கப் படக் கூடாது.
2.பாடக் குறிப்பு எழுதுவது பாதிக்கக் கூடாது
3.பயிற்சி ஏடுகள் சரிபார்க்க வேண்டும்
4.தேர்வுகள் வைக்க வேண்டும்
5.கற்பித்தல் பாதிக்கக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் பள்ளிக் கல்வித்துறையில்
முழு ஊதியம் வழங்கப்படுகிறது. *

** தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
படிக்க அனுமதி பெறும் போது...
மேலே காணும் இது போன்ற நிபந்தனைகளுடன்
அனுமதி தரப்படுகிறது. **

* தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை.
பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்று ஆசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் உள்ள
பள்ளிகளாகவும் உள்ளன. *

* எனவே தொடக்கக் கல்வித் துறையில்...
விடுப்பு முடிந்து வந்து மீண்டும்
சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தான்
பாடங்களை நடத்தணும்,
பாட நோட்டுக்களையும் திருத்தணும்,
தேர்வும் வைக்க வேண்டும்,
பாடம் சார்ந்த பதிவேடுகளை
சம்பந்தப்பட்ட விடுப்பு ஆசிரியர் தான்
பராமரிக்க வேண்டும். *

* எனவே முழு பணி செய்தாலும் ஊதியமில்லை. *

** நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே
கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து
அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது. **

* ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில்
பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால்
முழு ஊதியம் தரப்படுவதில்லை. *

*** Primary Teacher க்கு
Full work உண்டு.
But
No pay
For
Teaching practice... ***

** ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கட்கு ஊதியம் வழங்க
அந்த கணக்குத் தலைப்பின் கீழ் அரசால் நிதி
விடுவிக்கப்படுகிறது.

எனவே நாம் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் போது,
வழங்கப்பட்ட ஊதியம் போக, எஞ்சிய ஊதியம்
அரசிடம் ஒப்புவிப்பு செய்யப்படுகிறது.

எனவே இது நிதிச்சுமை சாராத கோரிக்கை. **
**** பள்ளிக் கல்வித் துறை,நிதித் துறை,
பணியாளர் & நிர்வாக சீர்திருத்தத் துறைகளின்
பார்வைக்கு எடுத்துச் சென்று,
தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கட்கு
கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும். *** .

ஓய்வூதியம் என்பது சலுகையா சிந்திப்பீர்...........

ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்குகின்றன.
ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்
. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
--------------------நன்றி---------------டாட்டா கிப்சன் ........

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு

TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

     2012 ல் நீதிமன்ற தீர்ப்பு படி  திரு.கிருஷ்ணன்  IAS.அவர்கள் தலைமையில் 3 நபர்களை கொண்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மறுத்து கிழ்க்கண்ட காரணங்களை கூறியது 1.தமிழக இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி SSLC+சான்றிதழ் படிப்பு மட்டுமே .மத்திய அரசில் +2 வுடன் டிப்ளமோ ஆகும் .2.தமிழ் நாட்டில் பணி நியமனம் ஒன்றிய அளவில் .மத்திய அரசில் தேசிய அளவில் .3.ஆங்கிலம் , இந்தி கற்பிக்க தெரியாது ..4.கணினி அறிவு இல்லை .என்ற பொய்யான காரணங்களை கூறி  மறுத்து விட்டது,உண்மையில் 1989 முதல் நீதிபதி .திரு,ராமானுஜம் அவர்கள் அறிக்கை படி டிப்ளமோ கல்வி தகுதிக்கு தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது..
                           சென்னை உயர் நீதிமன்றம் 27.2.2014 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு படி தமிழகத்தின் 2010 ஒரு நபர் குழு அறிக்கை மற்றும் 2012 ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை ஆகியவை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி .நீதிபதி .திரு.பால் வசந்த குமார் அவர்கள் தலைமையிலான இரு நபர்கள் அமர்வு ரத்து செய்து விட்டது மேலும் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட ஓய்வு பெற்ற நீதிபதி.திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் அமைத்து ஆணை வழங்கப்பட்டது..
                                     தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) சார்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 தாக்கல் செய்யப்பட்டது.அதில் 10.9.2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது .ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014.படி ஊதிய மாற்றம் செய்திட மறுத்து விட்டது .மேலும் அரசு கடிதத்தை ரத்து செய்து  ஊதிய குறை தீர்க்கும் ஆணையம்  9300+4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் .1612/2015.தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு தமிழக அரசு ஊதிய பிரச்சணை தீர்க்க முன் வராமல் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்று உள்ளது என்பதால்  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) வும் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது .உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கண்டிப்பாக இழந்த ஊதிய உரிமை மீட்கப்படும் அன்று இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1.1.2006 முதல் 9300 + 4200 என மாற்றம் செய்யப்படும்.

இவன்  
டாட்டா. கிப்சன் .பொது செயலாளர் .தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்




 
டாட்டா மாநில அமைப்பின் அறிவிப்பு ....
நமது சங்கத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவின் கூட்டம் மதுரை ....ஆரப்பாளையம் ......ஹோட்டல் சிவ சத்யாவில் வைத்து ..16.08.2015 ..ஞாயிறு பிற்பகல் 3.30.மணிக்கு நடைபெற்றது ....
உயர் மட்ட நிர்வாக குழுவில் மாநில தலைவர். திரு. கார்த்திகேயன் அவர்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தை பொது செயலாளர் முகவரிக்கு எழுதி 31-08-2015 க்குள் அனுப்பி வைக்க முடிவு செய்ய பட்டது ...அதன்படி
மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின்  பெரும்பான்மை முடிவின் படி மாநில தலைவர் ராஜினாமா ஏற்கப்பட்டது என அறிவிக்கப்படுகிறது ....

வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது. இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள் அதிகம்
பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது.
இவற்றிற்கிடையே ஒவ்வொறு தொகுதியிலும் கணிசமான
ஓட்டுகளை வைத்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அவர்களது
குடும்ப உறுப்பினர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும்
என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக்
கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஆளும் அ.தி.மு.க மீது
அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே ஒரு
அதிருப்தி மட்டுமே இருப்பதாகவும் அது என்னவெனில் கடந்த
சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த மீண்டும் பழைய
பென்சன் திட்டம்,6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும்
என்பது களையப்படாதது மட்டுமே ஆகும்.ஒருவேளை மீதமுள்ள
நாட்களில் அவை நிறைவேற்றப்பட்டால் இவர்களின் (அரசு
ஊழியர்களின்) வாக்குகள் அ.தி.மு.க.விற்கே செல்லும்
என்பதால் போட்டி எளிமையாகலாம் என்ற எதிர்பார்ப்பும்
எழுந்துள்ளது.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நடந்த
ஆசிரியர்கள் பேரணியில் பேசிய தி.மு.க.பொருளாளர்,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்............