PAGEVIEWERS

கல்வித்தரம் எப்போது மேம்பாடு அடையும் ?
தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?
1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.
4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.
இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?

தவறாமல் பங்கு பெறுங்கள் .....

6 வது ஊதிய குழு பிரச்சணை ---ஊதிய வழக்கு --- போரடகளம் --கருத்தரங்கம் ..

இடம் ;- இராமநாதபுரம் ;  நாள் .11.10.2015  மாலை .2.30 மணி .


08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்
(-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %

ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 %

ஆசிரியர்கள் ஸ்டிரைக் அபாரம் -அரசு மெகா ஷாக்.......

8.10.2015 போராட்டத்தில் டாட்டா சங்கம் ..ஆழைக்கப்படாத விருந்தினர் ஆக கலந்து கொண்டது . ஜேக்டோ வில் எண்ணிக்கை அதிகமாக பள்ளிகல்வி துறை சார்ந்த சங்கம் இருந்தாலும் பள்ளிகல்வி துறை யில் பணிபுரியும் ஆசிரியர் கள் அதிகம் பங்கு பெற வில்லை .20% மட்டுமே பங்களிப்பு செய்தனர் .ஜேக்டோ நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டம் செய்யும் முன்னர் தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து சங்கங்கள் இணைத்து இதைவிட வலுவான போராட்டம் உருவாக்க வேண்டும் .நான் பெரியவர் நீ சிறியவர் என்பதை மறக்க வேண்டும் .போராட்டம் செய்ய வராத பள்ளிகல்வி சங்கங்கள் ஒதுக்கப்பட்ட. வேண்டும் .
👥வேறுபாடு கருதாது அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை .
👥 பெரியவர்/ன் என்ற எண்ணம் உண்டான போதே எல்லாம் துண்டாகி விட்டது. இதை உணர வேண்டும்.
👥ஈகோ வை விடுத்து அனைவரும் ஒன்றினையும் போது மட்டுமே வெற்றி சாத்தியப்படலாம்.
👥பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிக்கையில் வெகு சுலபமாக "சில சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுகிறது" என்று கூறியுள்ளது நமக்குள் ஒற்றுமையில்லை என்பதையே உலகுக்குத் தெரிவிப்பதாக உள்ளது.
👥 இனி வரும் காலத்தில் "ஒரு சில" என்பதற்குப் பதிலாக "அனைத்து சங்கங்களும்" என்று குறிப்பிடும் நிலையை உருவாக்கினால் மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகாமலிருக்க ஒற்றுமை அவசியம்.
👥ஒன்று படுவோம் போராடுவோம் என்பது வெறும் வார்த்தையாக மட்டும் இருந்தால் போதாது. மனதிலும் உணர்விலும் இருக்க வேண்டும்.....

.டாட்டா கிப்சன் .பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .9025054081.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்,,,,,,,,,,,,

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு ...


1. 6 வது ஊதிய குழு முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் .இடைநிலை ஆசிரியரின் இரு வேறு பட்ட ஊதிய முரண்பாடுதீர்க்கப்பட வேண்டும்

2. CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் 

3.2003--2006 தொகுப்பூதிய பணிக்காலம் பணிகலமாக ஏற்கப்பட்டு பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் .

என்ற கோரிக்கைகளை மட்டும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா  ) அக்டோபர் 8 போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி   போராட்டத்தில் கலந்து கொள்கிறது மேலும் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க கேட்டுக்கொள்ள படுகிறது.டாட்டா சங்கம் போராட்டத்திற்கு தடை வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தாக்கல் செய்ய வில்லை .

மாநில அமைப்பு ....டாட்டா கிப்சன் .

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.