அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, "விசிட்' வரும் குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள் மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப்பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின் தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட, அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத்துறையில் இருந்து ஆய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன.