மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் அறிவை வளர்க்கவும் அறிவை ஆய்வு செய்து பரிசோதிக்கவும் முடிவு செய்து தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 20 சதவீத மார்க்குக்கு இந்த புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது வருடாந்திர தேர்வில் எந்த பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதி மாணவர்களிடம் வழங்கப்படும். அதில் இருந்து 20 சதவீத மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் எவ்வாறு புரிந்து படிக்கிறார்கள் என்பதை பரிசோதிக்கவும் அவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த முறை வித்திடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை வருகிற கல்வி ஆண்டில் (2013–2014) 9–வது வகுப்பு, 10–வது வகுப்பு, 11–வது வகுப்பு ஆகியவற்றுக்கு கொண்டுவரப்படுகிறது. 12–வது வகுப்புக்கு 2014–2015ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்,,,