PAGEVIEWERS



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 

2லட்சம்ஊழியர்கள் பாதிப்பு -தினகரன் நாளிழ் 

-16.04.2013-மதுரை பதிப்பகம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி 01.01.2013 முதல் வழங்க  இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 72% உள்ள அகவிலைப்படியுடன்  8% சேர்த்து 80%மாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தரைநிலைப் மாதிரி பட்டியல்.


பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களில், உளவியல் ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு



LIST OF RESTRICTED HOLIDAYS 2013
13.1.13 SUN BOGI
27.1.13 SUN THAI POOSAM
13.2.13 WED ASH WEDNESDAY
21.2.13 THUS GARVEEN KHADER
25.2.13 MON MASI MAGAM
4.3.13 MON VAIKUNDASAMY JAYANTHI
10.3.13 SUN MAHA SIVARATHRI

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு

CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த
வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
அதிரடி இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.


அவ்வுத்தரவில்
இறந்தவருக்கு எந்த மாதிரியான
செட்டில்மென்ட்
என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும்,
அதுவரை புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
மனுதாரர் கட்டிய
சந்தாவை பங்கு சந்தையில்
மூதலீடு செய்ய கூடாது எனவும்,
இறந்தவரின்
பங்களிப்பு தொகையினை வட்டி
தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க
உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD 

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,


CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை

நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய

 அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த

 வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்  

ஒவ்வொருவரும் அனுப்புவதுபயனளிக்கும் என்ற 

நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.

 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல்இக்கோரிக்கை

அவசியம் எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும்

 இதனை பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் 

அவர்களுக்கு தபால் மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M,.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics சமமானதாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology சமமானதாகவும் கருத அரசாணை வெளியீடு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு - டி.ஆர்.பி., அரசு பரிந்துரை செய்தது. 

பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பி.எச்டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் - நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது. 

இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், ""உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், ""தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில்,
TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறை கேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பல்கலை கழகத்தை நிர்வகிக்க அங்கு அரசு நிர்வாக அதிகாரியாக ஷிவதாஸ் நியமிக்கப்பட்டார்.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது

வரலாற்று பெருமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34....

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள்

 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை

செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும். இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக www.rtionline.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.......

மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் அறிவை வளர்க்கவும் அறிவை ஆய்வு செய்து பரிசோதிக்கவும் முடிவு செய்து தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 20 சதவீத மார்க்குக்கு இந்த புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது வருடாந்திர தேர்வில் எந்த பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதி மாணவர்களிடம் வழங்கப்படும். அதில் இருந்து 20 சதவீத மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் எவ்வாறு புரிந்து படிக்கிறார்கள் என்பதை பரிசோதிக்கவும் அவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த முறை வித்திடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை வருகிற கல்வி ஆண்டில் (2013–2014) 9–வது வகுப்பு, 10–வது வகுப்பு, 11–வது வகுப்பு ஆகியவற்றுக்கு கொண்டுவரப்படுகிறது. 12–வது வகுப்புக்கு 2014–2015ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்,,,

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.


              பொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.  மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.




உங்கள்  தொடர்புக்கு    

1. DIRECTOR OF SCHOOL EDUCATION
கே.தேவராஜன்
044-28278796, 044-28232580 (Fax)
dse@tn.nic.in
2. DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS
தண்.வசுந்தர தேவி
044-28278286, 9444216250
dge@tn.nic.in

"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு)

, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத 

முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு,

 இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி 

பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், 


"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.

மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது'

கூட்டுறவு தேர்தலில் பரபரப்பு 568ல் 410 ஓட்டுகள் செல்லாதவை




கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. 11 இடங்களுக்கு மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 568 வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அப்போது, அதிக அளவில் செல்லாத வாக்குகளாகவே வந்ததால், வேட்பாளர்கள் ஆத்திரமடைந்து வாக்கு எண்ணும் இடத்திலிருந்து வெளியேறினர். மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரினர். 
C.L ON 5.1.13
                          KANCHIPURAM



CADDALORE

Departmental Test- Books To Download


Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150, 151-270, 271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150, 151-220, 221-296, 297-380, 381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300, 301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188, 189-288, 289-388, 389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190, 191-290, 291-400, 401-520, 521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340, 341-490, 491-600 )


INTERIM ORDER WILL BE UPDATED SHORTLY IN OUR WEBSITE...

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை

என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது



நமது இயக்க முயற்சியால் அரசு உச்ச 

நீதிமன்றத்தில்  2009 நியமன

இடை நிலை ஆசிரியர்களுக்கு  பணி மாறுதல் 

 பெற வழக்கை  முடிக்க

மனு தாக்கல் செய்து உள்ளது  


தீர்ப்பு  6.8.13 வர உள்ளது  




ஓர் ஆசிரியர் சங்கம் 5.1.13 ல் 35000 பேர் C.L. 

எடுத்ததாக  கூரியது உண்மை  இல்லை    




தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர்

என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

சட்டசபையில், உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: திறந்தநிலை பல்கலையில், நேரடி பட்டம் பெற்றவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்கு, அரசாணை எண் 107, தடையாக உள்ளது.
இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கவும், அரசாணை, 107ஐ நீக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை 

பணிக்காலமாக கணக்கீட வேண்டும் 

 நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
 பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள என்றும், இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ப.மோகன் கூறியுள்ளார்.
.
முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் நலனில்அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளின் பெயரை, அரசு, பகிரங்கமாக வெளியிடுவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த, மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்தி, கடந்த ஆண்டு, ஜனவரி முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அளவில், 700க்கும் மேற்பட்ட தனியார்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்

உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

CPS வழக்கில் மேலும் ஒரு வெற்றி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


CLICK HERE TO DOWNLOAD CHENNAI HIGH COURT ORDER AGAINST W.P.NO.5872/2013


CONDUCT -kipson76@yahoo.in

CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத (CBSE/ ICSE) பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25% மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு


அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற் கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதர பட்டமேற்படிப்புகளுக்கு தற்போது ஆண்டு தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல் - அனுமதி அளித்து ஆணை


"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப்

 படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி

 வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட்

 உத்தரவிட்டு உள்ளது.


முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்), 2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம், 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு, 2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ., (ஆங்கிலம்) படித்தார். பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும் படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார்.

ஏப்ரல் 3ந் தேதி முதல் பொறியியல், 'கலை மற்றும் அறிவியல்' கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரிகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசை கண்டித்து தமிழக முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



சன் குழுமத்திற்கு மாணவர்கள் கடும் எச்சரிக்கை


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி நாளை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.