தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரை
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது
மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.
ஆசிரியர் பணிக்காக, தகுதி தேர்வு எழுத, மைக்ரோ பயாலஜி, சமூக பணி, சமூகவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், பி.எட்., முடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.
பள்ளிக்கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புதல் - அறிவுரைகள் வழங்கி உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் 90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு தான், ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோர முடியும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் எவ்வித இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த கே.குமாரவேலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
எனது தந்தை விவசாயக் கூலி. 2009–ம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ படித்த நான் நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். 1992–ம் ஆண்டு ஒரு பஸ் விபத்தில் எனது வலது கால் துண்டிக்கப்பட்டது. எனக்கு 60 சதவீத ஊனம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக சுகாதார நலத்துறை சான்றிதழ் வழங்கி உள்ளது. அதற்கான ஒதுக்கீட்டின்படி நான் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை
தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு
தெரிவித்து அடுத்தகட்ட விசராணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விசாரணைக்கு வரவில்லை என்றும் இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.