PAGEVIEWERS
ORAGANISATION OF SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS FOR THE YEAR 2013-2014 REG
DEE.ELE.19547/J2/2013-SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS
தமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு.
மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009 -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு முன்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில், ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு.
மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
நேற்று 03.08.2013 அன்று மதுரை Y.M.C.A SCHOOL COMPOUND - இல் (T.A.T.A.) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டம் மாநில தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் ஆசிரியைகள் உட்பட பல்வேறு ஆசிரியர்களுடன் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 3 நபர் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு எடுத்துகூறப்பட்டது. கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முதல்கட்டமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசின் கவனத்திற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள், ஊதிய குறைதீர்க்கும் பிரிவின் அறிக்கையை தொடர்ந்து வெளியிடப்பட்டஅரசானைகளுக்குப் பின்னரும் தொடர்வது குறித்து பொதுசெயலாளர் திரு.கிப்சன் எடுத்து கூறினார். மேலும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் மேற்கொள்ள இருக்கும் ஜனநாயக முறையிலான உண்ணாவிரதத்திற்கு பெருந்திரளாக ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009 -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு முன்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில், ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
முதல்கட்டமாக உண்ணாவிரதம் 31.8.2013 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் மாநில செய்தி தொடர்பாளர் திரு. கார்கில் ராஜேந்திரன் அவர்கள் நன்றிகூற கூட்டம் நிறைவடைந்தது.
டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.,
வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை
ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள்
தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து அரசியல்
கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க வகை
செய்யும் சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்தவும் மத்திய அமைச்சரவை முடிவு
செய்துள்ளது.
இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கில் முன்னின்று நடத்தி வரும் ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
TRB Published the Tentative Answer Key - 2013
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY
|
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA),
இடைநிலை ஆசிரியர்களின்
ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு
செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள
தீர்மானித்துள்ளது.
இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும்
03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND,
NEAR KARIMEDU POLICE STATION,
AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்
எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.
ஒன்றுபடுவோம்.
பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித
பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின்
கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.
ஆயத்தக் கூட்டத்திற்கு
அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்
தொடர்புக்கு
.9443464081
9487951881..
9043426895
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA),
இடைநிலை ஆசிரியர்களின்
ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு
செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள
தீர்மானித்துள்ளது.
இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும்
03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND,
NEAR KARIMEDU POLICE STATION,
AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்
எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.
ஒன்றுபடுவோம்.
பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித
பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின்
கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.
ஆயத்தக் கூட்டத்திற்கு
அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்
தொடர்புக்கு
.9443464081
9487951881..
9043426895
நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது
நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர். 2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் படி
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய உத்தரவின் படி
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் - திரு.இளங்கோவன்
RMSA இயக்குனர் - திரு.சங்கர்
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன்
மெட்ரிக் பள்ளி இயக்குனர்-- திரு. பிச்சை
பாடநூல் கழக இயக்குநர் - திரு.அன்பழகன்