இனிய உதயம் 24.11.2013- ல் திருச்சியில்
UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.
UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.
24.11.2013 மாலை 5 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் ஒருமித்த கருத்துடைய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் நலன்களுக்காக உழைத்திட ஒன்றுகூடி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்கங்கள்:
1. JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
2. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்.
3. ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
4. தமிழக ஆசிரியர் மன்றம்.
5. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பிற்கு " ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு" - UNION OF TEACHERS ORGANISATIONS என பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பெயரினை "யூ டூ" - "U" TO என உச்சரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
2. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை பெறவேண்டும் எனவும், பங்கேற்பு ஓய்வூதியத்தை (CPS) இரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முக்கியப்படுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
3. U TO அமைப்பின் மாநில தொடர்பாளராக திரு. சி. ஜெகநாதன் (JSR TESTF)
மற்றும் நிதிக்காப்பாளராக திரு. தே. தயாளன் ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்) ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது.
4. ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை வருங்காலத்தில் சேர்த்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தினை தலைவராக திரு.மோகன்தாஸ் (JSR TESTF) அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
நிறைவாக திரு. விவேகானந்தன் அவர்கள் நன்றி கூற கூட்டமைப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.