PAGEVIEWERS

 தொடக்க கல்வி துறையில் 
 இடை நிலை ஆசிரியர்    


  TO 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உண்டா ?---இல்லை 

 

இன்று ( 4.3.14 ) தொடக்க கல்வி இயக்குனரகத்தை தொடர்புக் கொண்டு விசாரித்ததில் நடை பெறாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் நடத்திட அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது .இது வரை அனுமதி கிடைக்க வில்லை .மேலும் செயலர்  20 நாள் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்று உள்ளத்தால் அனுமதி தாமதப்படுவதாக தெரிவித்தனர் . மேலும் தேர்தல் தேதி நாளை ( 5.3.14 ) அறிவிக்கப் படுவதாக செய்தி வெளிவருவதால் பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும் மாறுதல் இடை நிலை ஆசிரியருக்கு ''காணல் நீர் தான் '' 

நமது சங்க தோழர்கள் நலன் கருதி 2013 பேணல் படி பதவி உயர்வு மே 2014 ல்  நடத்திட நீதிமன்றத்தை நாடிட வழி கட்டியுள்ளோம் ..

                                            கிப்சன் .TATA .பொதுசெயலாளர் 

TETOJAC போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

 
TETOJAC போராட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் " "டிட்டோ ஜாக்கில் 

 இணைந்துள்ள இயக்கங்கள் தவிர வேறு இயக்கங்களையோ, 

அமைப்புகளையோ அரசியல்கட்சி தலைவர்களையோ வாழ்த்துரை மற்ற 

நடவடிக்கைகளுக்கு அழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்". என்று 

குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் சில இடங்களில் நாங்கள் உங்களுக்காகத்தானே 

போராடுகிறோம் என்று சொல்லி டிட்டோ ஜாக்கில் இணையாத சங்க 

ஆசிரியர்களையும் அழைக்கிறார்களாம். இது என்ன நடைமுறை என்று 

புரியவில்லை. 

எல்லோரும் ஆசிரியர்கள்தான். ஆனாலும் கொள்கை அடிப்படையில் 

பல்வேறு சங்கங்களாக  செயல்படவேண்டிய சூழ்நிலை. ஒன்றுசேர 

வாய்ப்பில்லை. ஒன்று சேர்ந்த்தவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 

போராடுங்கள். போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

                           தாமஸ் ராக்லண் ட் TATA.துணை பொதுச்செயலாளர் 
RTI