PAGEVIEWERS
தமிழ் உறவுகளே... நாம் தமிழில் பேசவேண்டாம்; இனி தமிழில் பேச முயற்சிப்போம்...
இங்கிலாந்தில் 5 லட்சம் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு மதிப்பளித்து இலண்டன் தொடர்வண்டித்துறை தமிழில் பயணச் சீட்டு பெறுவதற்கு உதவி செய்கிறது. தானியங்கி இயந்திரம் மூலமாக தமிழில் பயணச் சீட்டை தேர்வு செய்ய உதவுகிறது.
தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள் உள்ளனர் . ஆனால் அவர்களுக்கு மதிக்களிக்காமல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பயணச் சீட்டை கொடுக்கிறது இந்திய தொண்டர்வண்டித்துறை. தமிழை பயன்படுத்த மறுக்கிறது. பல முறை நேரில் சென்று மனு அளித்தும் தொடர்வண்டித்துறை நிர்வாகம் தமிழர்களின் புகாரை கண்டு கொள்வதில்லை. தமிழர்களை அலட்சியப்படுத்துகிறது. தமிழக அரசும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நடுவண் அரசின் அராஜக இந்தித் திணிப்பை தமிழக அரசு தட்டிக் கேட்பதாக தெரியவில்லை.
ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி 50 கி.மீ க்குள் வழங்கிடவும் , பள்ளியின் மடிக்கணினி யை தேர்தல் பணிக்கு பயன்படுத்திட தடை விதிக்க வும் TATA சங்கம் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெண் ஆசிரியர்களுக்கு நமது சங்க கோரிக்கையை ஏற்று 50 கி.மீ க்குள் பணி வழங்கிட தேர்தல் ஆணையம் உத்தரவுவிட்டு உள்ளது .
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு
அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர்
அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி (எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், சென்னை கிண்டியில் உள்ள தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ("டேட்டா சென்டர்')ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் தகவல் தொகுப்பு மையமே இனி மேற்கொள்ளும்.
பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லரை செலவின பணியாளர்கள், 10ஆண்டு பணிமுடித்த நாள் பணிவரன்முறைப்படுத்துதல் - வழக்குகள் மற்றும் வழக்குகளின் மீது பெறப்பட்ட தீர்ப்பாணை சார்பு
GOVT LTR NO.7172 / CC3 / 2014 DATED.14.3.2014 - EMPLOYEES WORKING ON DAILY WAGES - BRINGING REGULAR ESTABLISHMENT ON COMPLETION OF 10 YEARS OF SERVICE REG ORDER CLICK HERE...
DSE - EMPLOYEES WORKING ON DAILY WAGES REG PROC CLICK HERE...
SUPREME COURT ORDER REG EMPLOYEES WORKING ON DAILY WAGES CLICK HERE...
கரும்பலகை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டம் ,ஏற்காடு ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் முதல் மேற்படி தலைப்பில் நிதி இல்லாமல் ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது .இந்த கோரிக்கை நமது சங்க மாநில பொருளாளர் திரு.முனிய சாமி மூலம் நமது இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது .
கோரிக்கையை ஏற்று உடனடியாக ஊதியம் வழங்கிட அனைத்து DEEO க்களுக்கும் கடிதம் அனுப்பினார்கள் .அதன் நகல் நமது மாநில பொருளாளர் மூலம் சேலம் மாவட்ட DEEO அவர்களுக்கு கொடுத்து அனுப்ப பட்டது .தொடர்ந்து பள்ளிக்கல்வி செயலரிடம் பேசி தடையின்றி ஊதியம் பெற்றிட அரசு ஆணை வெளியிட செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்
கோரிக்கையை ஏற்று உடனடியாக ஊதியம் வழங்கிட அனைத்து DEEO க்களுக்கும் கடிதம் அனுப்பினார்கள் .அதன் நகல் நமது மாநில பொருளாளர் மூலம் சேலம் மாவட்ட DEEO அவர்களுக்கு கொடுத்து அனுப்ப பட்டது .தொடர்ந்து பள்ளிக்கல்வி செயலரிடம் பேசி தடையின்றி ஊதியம் பெற்றிட அரசு ஆணை வெளியிட செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்
அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் தோழர்களே !
TNPTF என்ற சங்கம் 2 வது முறையாக நமது TATA சங்கத்தின் வழக்கையும் ,சங்கத்தையும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும் லெட்டர் பேடு சங்கம் அல்வாவுக்கு பெயர் பெற்ற ஊர்க்காரன் என்றும் ஏளனம் செய்து எழுதியுள்ளது .
போராட்டம் என்ற பெயரில் இடை நிலை ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள் நாங்கள் அல்லவே !
நீதிமன்ற நடவடிக்கையை அந்த அந்த நாளில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளியிட்டது தவறு என்றால் அதை நாங்கள் ஏற்கிறோம் . பிற சங்கம் போல நமது TATA சங்கம் இடை நிலை ஆசிரியர்களை ஏமாற்றியது இல்லை .நீதிமன்றம் மூலம் TATA சங்கம் ஊதிய பிரச்சனையை தீர்த்து விட்டல் இவர்கள் சங்கத்தில் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் TATA சங்கத்திற்கு போய்விடுவார்கள் என்ற பயத்தில் தான் விமர்சிக்கிறார்கள் .
உண்மையான கம்யூனிஸ்ட் யார் என்றால் லெனின் மற்றும் மாவோ வின் வாழ்கை வரலாறு படித்து அது போல் நடப்பவனே ! கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்கமான TNPTF நம்மையும் நமது வழக்கையும் எள்ளி நகையாடுவதற்கு கண்டிப்பாக காலம் இவர்களுக்கு பதில் சொல்லும் ,
இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை நமது TATA சங்கம் 172 பக்கம் கொண்ட ஆவணங்களை 3 வருடமாக சேகரித்துவழக்கு தாக்கல் செய்து வட்டிக்கு கடன் வாங்கி நடத்தி வருகிறோம் . சில தோழர்கள் மூலம் நமது வழக்கிற்கு நன்கொடை ரூ 48,000 மட்டுமே கிடைத்து உள்ளது ஆனால் இது வரை வழக்கிற்கு ரூ 2,68,650 செலவு ஆகியுள்ளது வழக்கின் இறுதியில் கண்டிப்பாக வெற்றி நமது இடை நிலை ஆசிரியரின் சமுதாயத்திற்கே !
நமது ஊதிய வழக்கு நீதிபதி மாற்றம் காரணமாக விசாரணைக்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது .அதை சரி செய்து உள்ளோம் .நமது மூத்த வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுக்க பட்டு உள்ளது அதனால் வருகிற வாரம் முதல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்