PAGEVIEWERS


சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் பிடிவாதத்தால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள்

(பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.....

 

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை,ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்.,முடிப்பது அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு,தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில்வழங்கப்படுகிறது.
இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40 நாள் எடுத்துக்கொள்ளவேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறைபயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள்வலியுறுத்துகின்றன. ஆனால், சேலம் மாவட்டத்தில்துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும் மேற்பட்டஇடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்விஅலுவலகத்தை அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறுமுதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள்அனைத்தும், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே,பி.எட்., பட்டம் வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர்.இதனால், இருதலைக்கொள்ளி எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள்தவித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள்கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில்,நடுநிலைப்பள்ளிகளில் பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதிவழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர்.


ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான்பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர்.படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்துஅலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

 

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மாநில அரசு ஊழியர்களுக்கு வாகன
மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த 

இயக்குனரின் அறிவுரைகள்



பள்ளிக்கல்வி - தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு

 துறையின் முன் அனுமதி பெறாமல் 


உயர் கல்வி பயின்றால் ஊக்க 


ஊதியம் கிடையாது-தமிழ் நாடு 


தொடக்கக் கல்வி இயக்குனர் 


செயல்முறை/அறிவுரை



மீண்டும் வேகமெடுக்கும் இடை ஆசிரியர் ஊதிய வழக்கு -W.P.NO;33399/2013.

வழக்கு தாக்கல் செய்த நாள்       ; 07-11-2013
முதல் விசாரணை நாள்               ; 06-12-2013 
2 வது விசாரணை  நாள்                ; 11-12-2013 
3 வது விசாரணை  நாள்                ; 17-12-2013
4 வது விசாரணை  நாள்                ; 06-01-2014
5 வது விசாரணை  நாள்                ; 07-01-2014
6 வது விசாரணை  நாள்                ; 17-01-2014
7  வது விசாரணை  நாள்                ; 06-01-2014
8  வது விசாரணை  நாள்                ; 21-01-2014
9  வது விசாரணை  நாள்                ; 05-02-2014
10  வது விசாரணை  நாள்              ; 17-02-2014
11 வது விசாரணை  நாள்                ; 04-03-2014
12  வது விசாரணை  நாள்                ; பாராளுமன்ற 
                                                                     தேர்காரணமாக   
                                                                              3 மாதம்     
                                                 ஒத்தவைக்கப்பட்டு உள்ளது 

13  வது விசாரணை  நாள்                ; 30-07-2014 முதல்   
                                                        08-08-2014 வரையிலான    
                                                               WEEKLY CASE LIST  
                                                          ல் COURT NO;9 ல் இடம்    
                                                                     பெற்று உள்ளது ,


HIGH COURT OF JUDICATURE AT MADRAS 
WEEKLY CAUSE LIST

(For 30-07-2014 to 08-08-2014 )
 
 COURT NO. 9 
 
 HON'BLE MR JUSTICE R.S.RAMANATHAN
 
 TO BE HEARD FROM WEDNESDAY THE 30TH DAY OF JULY 2014 
 TO FRIDAY THE 8TH DAY OF AUGUST 2014
--------------------------------------- 
WEEKLY  LIST
 
53.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                           H.MOHAMMED IMRAN  AND 
                       K.PONNAIAH 
 
 

தற்போது நமது டாட்டா சங்கம் மூலம் 1989 முதல் +2 ,உடன் DIPLOMA என நமது தகுதி மாற்றப்பட்டு உள்ளதாக TRB,DTERT, அரசு தேர்வு இயக்கம்  ஆகியன தகவல் பெரும் சட்டம் மூலம் தெரிவித்து உள்ளது ,இந்த வழக்கு ஒட்டு மொத்த (தர ஊதியம் ரூ 2800 ல் உள்ள 72,000 பேர் )   இடை நிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+ 4200 என மாற்றம் செய்யப்பட வேண்டும் என நடந்து வருகிறது .நமது ஊதிய வழக்கு 1.86 கேட்டு குறிகிய நேக்கத்தொடு நடை பெற வில்லை. தற்போது  Diploma in  Elementary Education ( தொடக்க கல்வி படையத் தேர்வு  )சான்று 2011-2012 கல்வி ஆண்டு முதல் அ .ஆ .எண் ;237 கல்வி .நாள் 16.08.2010மூலம் வழங்கப் படுவதாக அரசு தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது .D.T.Ed சான்று 
 அ .ஆ .எண் ;1828 கல்வி .நாள் ;30-12-1989.மூலம் வழங்கப் படுவதாககூறியுள்ளனர்   ஆனால் அரசு ஆணை  தங்களிடம் இல்லை DTERT  தெரிவித்து உள்ளது .மேற்படி அரசு ஆணை கிடைத்தவர்கள் தயவு செய்து எனக்கு அனுப்பி வைக்கவும் .9443464081. மேற்படி அரசு ஆணை தேடி அனைவரும் களத்தில் இ ரங்க்கிடுவொம் 

 
 இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் 
 
பெற முடியுமா ?

 TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?

 1984 ம் ஆண்டு  இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) 

ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது .இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு  ஊதியம்  ரூ  975+5% PP  என மாற்றப்பட்டது .

1996 ஊதிய குழுவில்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.பின்னர்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும்  இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம்  ரூ4000+5% PP  என மாற்றப்பட்டது .

2006  ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு

 1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள்  அங்கு விலைவாசி குறைவு 
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர் 
5. SSLC.யுடன்  சான்றிதழ்  படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .

  TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .

பணி ஒய்வு பெற்றோர்   தலைமையில் செயல் படும்     சங்கத்தில் உள்ள ரூ 2800    இடை நிலை ஆசிரியரே  உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை   RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் ..  TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள்  சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள்  ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.

முந்தய   ( வரலாறு ) போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது  ,தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர் என்பதால் அவர்களுக்கு பதிப்பு இல்லை. இன்று  இடை நிலை ஆசிரியருக்கு 1.ஊதிய பாதிப்பு அதனால் வருடத்திற்கு ரூ 1,50,000 வரை இழப்பு .2.CPS திட்டத்தால் எதிர்காலம் பாதிப்பு .3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006 ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் எனற நிலை இல்லாமல் போனது.. இது போல் இன்னும் எத்தனையோ பாதிப்புகள்   .நம் முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர். அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ? அல்லது பெற்று தர மனம் இல்லையா ? .
 
 மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான்   இடை நிலை ஆசிரியரின்  உரிமையை நிலை நாட்ட   வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒசங்கமும் மனு கொடுக்கவில்லை .

 அன்புடன் இ யக்கப்பனணி யில்  TATA.KIPASON.9443464081.


இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

 

CLICK HERE FOR PAPER I NOTIFICATION

CLICK HERE FOR PAPER I -NEW WEIGHTAGE &CANDIDATE DETAILS 


அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காககடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ்மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல்
வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் பட்டதாரிஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில்,தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ்மதிப்பெண்களுடன் கூடிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்த, புதிய வெயிட்டேஜ்மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த பட்டியல்வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் 
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களைதெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.