PAGEVIEWERS


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.;-

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.


முதுகலை ஆசிரியர்கள் ;-
 
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்;-
 
மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்;-
 
மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.201

விரைவில் பணி நியமன ஆணை -TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

 

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள்அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...சென்ற ஆண்டு நடந்தகலந்தாய்விற்கு போது
பின்பற்றப்பட்ட நடை முறை...

கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின்  நகல்களும்கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன்கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள்நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TETகலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..

நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்தசான்றிதழ்களின்  நகல்களை எடுத்து செல்வோம்..

முக்கியமாக

1. தேர்வுக்கான நுழைவுசீட்டு

2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.

4.உங்கள் சன்றோப்பமிட்ட  பள்ளி கல்லூரி சான்றிதழ்  நகல்கள் 2செட்...


5. passport size புகைப்படம் 3

TNTET- PAPER 1- LIST....

 


தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு..

 


PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு..

 


 TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY..

 

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..

 

             


CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு



I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S
D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R
W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2
S . S i m i e o n   R a j                               
. . .   P e t i t i o n e r
V s .

1 .   G o v e r n m e n t   o f   T a m i l   N a d u
R e p .   b y   i t s   S e c r e t a r y   t o   G o v e r n m e n t
F o r e s t   a n d   E n v i r o n m e n t   D e p a r t m e n t
F o r t   S t . G e o r g e
C h e n n a i   ​   6 0 0   0 0 9 .

2 .   T h e   P r i n c i p a l   C h i e f   C o n s e r v a t o r   o f   F o r e s t s
P a n a g a l   B u i l d i n g ,   S a i d a p e t
C h e n n a i   ​   6 0 0   0 1 5

3 .   T h e   D i s t r i c t   F o r e s t   O f f i c e r ,
T i r u p a t t u r   F o r e s t   D i v i s i o n   a n d
J o i n t   D i r e c t o r   o f   A a n a i m a l a i   T i g e r   R e s e r v e   F o r e s t ,
U d u m a l a i p e t t a i ,
T i r u p a t h u r   D i s t r i c t .

4 .   T h e   A c c o u n t a n t   G e n e r a l   o f   T . N a d u
O f f i c e   o f   t h e   A c c o u n t a n t   G e n e r a l
O f f i c e   a t   T e y n a m p e t
C h e n n a i   ​   6 0 0   0 1 8 .                                     . . . 
R e s p o n d e n t s
W r i t   p e t i t i o n   f i l e d   u n d e r   A r t i c l e   2 2 6   o f   t h e   C o n s t i t u t i o n   o f   I n d i a
t o   i s s u e   a   w r i t   o f   M a n d a m u s   d i r e c t i n g   t h e   r e s p o n d e n t s   t o   c o u n t   h a l f   o f   t h e   s e r v i c e
r e n d e r e d   b y   t h e   p e t i t i o n e r   a s   S o c i a l   F o r e s t r y   W o r k e r   f r o m   0 1 . 0 9 . 1 9 8 2   t i l l
2 0 . 0 8 . 2 0 0 5   a l o n g   w i t h   r e g u l a r   s e r v i c e   r e n d e r e d   b y   h i m   a s   F o r e s t   W a t c h e r   f r o m
2 4 . 0 8 . 2 0 0 5   t o   3 1 . 0 7 . 2 0 1 1   a s   q u a l i f y i n g   s e r v i c e   a n d   s e n d   t h e   r e v i s e d   p r o p o s a l   t o
t h e   f o u r t h   r e s p o n d e n t   a n d   t o   g r a n t   p e n s i o n   w i t h   a l l   c o n s e q u e n t i a l   m o n e t a r y
b e n e f i t s .

DSE - SSLC / HSC QAURTERLY EXAMINATION TIME TABLE SEPTEMBER 2014........


2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு....

 


புதிய பென்ஷன் திட்டத்தில் 
 
 
கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் 
 
இல்லாததால் தமிழகத்தில் ஒரு 
 
 
லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 
 
லட்சம் அரசு ஊழியர்கள் 
 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசு வேலையை விரும்புகின்றனர். நாங்களும் அப்படி நினைத்துதான் பணியில் சேர்ந்தோம். ஆனால், தற்போது அந்தப் பயன்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழக அரசு முன்பு நடைமுறையில் இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.
நன்றி தி ஹிந்து 21.8.14
.


பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்க தொடக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு

 

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறைசரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடிஉத்தரவிட்டுள்ளதுதொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ளஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து
வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பானபதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகதொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. அதன்அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது:

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.
2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.

ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்விவிவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயல்வதற்குஅனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆண்டி லும் டிச.31ம் தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்,பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணிபதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான்தயாரிக்கப்படுகிறது.

எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம்மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ளபதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகைஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளதுஎன்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல்மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போதுஅனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல வேண் டும்.


உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்துஉறுதி செய்து கொள்ள வேண்டும்.

CLICK HERE - PU / MUNICIPAL / GOVT TEACHERS' SERVICE REGISTER MAINTENANCE & ENTRIES REG INSTRUCTIONS

SC/ ST மற்றும்  MBC மக்களுக்கான அரசு பணி நியமங்களில் பின்னடைவு பணியிடங்களை 6 மாதங்களில் நிரப்பிட உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி தீர்ப்பு ...18-07-2014.


ஆதி திடவிடர் பள்ளி ஆசிரியர்களிக்கு ஆன் -லைன் கலந்தாய்வு ...
ஐயோ பாவம் !1-1-2011க்கு முன் பதவி உயர்வு பெற்ற  நம் இடை நிலை ஆசிரியர் சமூதாயம்......

தமிழக அரசு இடை நிலை ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ .எண் ;23 ன் படி  ரூ 750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும் 1.1.2006 முதல் 31-12-2010 வரை கிடையாதாம் .ஏன் என்றால் நாம் எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் நல்லவர்கள் . பாதிப்பை உரியவர்களிடம் எடுத்து சொல்ல தனி தகுதி அற்றவர்கள் .பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம் .
        1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் இடை நிலை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூ 750 தனி ஊதியம் கிடையாது இதனால் 1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாதிப்பு ரூ 750 + அதற்கான அகவிலை படியும் சேர்த்து வருடத்திற்கு ரூ 15,000 /= பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .ஒரு ஒன்றியத்தில் வருடத்திற்கு எப்படியும் 5 முதல் 10 பேர் வரை பதவி உயர்வு பெற்றிருப்பார்கள் ஆனால் இப்படி ஓர் பதிப்பு இருப்பது 60% ஆசிரியர்களுக்கு தெரியாது தெரிந்தவர்களும் பேசுகிறார்கள் ஆனால் பாதிப்பு நீங்க முயற்ச்சி எடுக்க வில்லை 
             தமிழ் நாட்டில் 365 ஒன்றியங்கள் உள்ளது அப்படி ஆனால் 
2006 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
 2007 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2008 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
2009ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2010 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
மொத்தம்  பாதிக்கப்பட்டவர்கள் 3650*5 = 18,250 பேர் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்த பிரச்சனைக்காக இதுவரை  நீதிமன்றம் செல்ல வில்லை ஏன் என்றால் நமக்கு நம் பாதிப்பு தெரியாது .அடுத்து நமக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை நீதிமன்றத்திற்கு வழக்குக்கு செலவு அதிக பச்சம் ரூ 25000 தான் ஆகும் .
               இந்த பாதிப்புக்காக பாதிக்கப்பட்ட  நாம் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டால் நம் ஆயுள் இறுதி வரை வருடத்திற்கு வருடம் பாதிப்பு தொகை அதிகமாகும் .இந்த பாதிப்பு நீங்கிட நமது  TATA சங்கம் சரியான வழிகாட்டுதல் செய்திட தயாராக உள்ளது .2013 அக்டோபர் மாதம் நிதித்துறை செயலாளர் வெளியிட்ட கடிதப்படி இளையோர் முதியோர் ,4 (3) விதி எல்லாம் 2006 ல் நடை முறைக்கு வந்த 6 வது ஊதிய குழு விதிகளில் இடம்மில்லை என ஆணையிட்டு உள்ளது .எனவே பாதிக்கப்பட்ட தோழர்கள் ஒருங்கிணைப்பு செய்யுங்கள் .வரும் மாதம் நாம் நிதிமன்றம் செல்ல தயார் ஆவோம் ..
              மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 
                            S.C.KIPSON. TATA.பொது செயலாளர் 
                              CELL- 9443464081//9840876408..