பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை...
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது.
செய்தி பகிர்வு : தினகரன்