PAGEVIEWERS

தமிழ்நாட்டில் மே 16ம் தேதி தேர்தல்: மே 19-ம் தேதி ரிசல்ட்

 தமிழ்நாட்டில் மே 16ஆம் தேதி திங்கள்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி
மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு 5 நாளுக்கு முன்பு பூத் சிலிப் தரப்படும். படத்துடன் கூடிய பூத் சிலிப் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 மாநிலத்திலும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 29ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி இறுதி நாளாகும்.
CPS ஆசிரியர்கள் மற்றும் 2800 தர ஊதிய ஆசிரியர்கள் கவனத்திற்கு ....
போராட்டம் வெற்றி பெற....சரியான சங்கத்தில் இணையுங்கள்
1. பிரச்சனை உருவாகிய உடன் பேராடியிருக்க வேண்டும்
2.போராட்ட களத்தின் தலைவருக்கும் அதே பாதிப்பு இருக்க வேண்டும்.
3.சட்ட அறிவு இருக்க வேண்டும்.
4.பிரச்சனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தும் தலைவருக்கு தெரிய வேண்டும்
5.எந்த சங்கமாவது
இவை எதுவும் இல்லாததால் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .
உண்மை உணருங்கள் 1989 பின் எந்த போராட்டமாவது கடைசி வரை ஒற்றுமையாய் நடந்த வரலாறு உண்டா ? இல்லை .காரணம் சங்கங்கள் தோழர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்கள் எனவே தான் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .
காலத்திற்கு ஏற்றார் போல் போராட்ட தன்மை மாற வில்லை .நாடக போராட்டங்களால் பொது மக்கள் மத்தியில் ஆசிரியருக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம் .
டாட்டா சங்கம் ஆசிரியர்களுக்கு 2800 தர ஊதியத்தை மாற்றி சட்ட போராட்டம் மூலம் 9300+4200 பெற்று தரும் அதுபோல் 2016 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தை திரும்ப பெற்று தரும் .பழங்கதை பேசும் பாரம்பரியம் பேசுபவர்கள் சங்கங்கள் டாட்டா போல் ஏன் வாக்குறுதிகள் கொடுக்க முடிய வில்லை . CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தைநடைமுறை படுத்திட வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாட்டா வின் CPS வழக்கு 24-02-2016 விசாரணைக்கு வர உள்ளது . CPS திட்டத்தில் உள்ளவர்களே 2800 ல் உள்ளவர்களே டாட்டா உங்களுக்கு எழந்த உரிமையை மீண்டும் பெற்று தரும் .சட்ட போராட்டம் நடத்த அதிக அறிவும் அதிக ஆவணங்களும் வேண்டும் ,ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
புறக்கணியுங்கள் நாடக போராட்டம் நடத்திய சங்கங்களை புறக்கணியுங்கள் .அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியரே ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
----டாட்டா மாநில அமைப்பு ,
CPS ஆசிரியர்கள் மற்றும் 2800 தர ஊதிய ஆசிரியர்கள் கவனத்திற்கு ....
போராட்டம் வெற்றி பெற....சரியான சங்கத்தில் இணையுங்கள்

1. பிரச்சனை உருவாகிய உடன் பேராடியிருக்க வேண்டும்
2.போராட்ட களத்தின் தலைவருக்கும் அதே பாதிப்பு இருக்க வேண்டும்.
3.சட்ட அறிவு இருக்க வேண்டும்.
4.பிரச்சனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தும் தலைவருக்கு தெரிய வேண்டும்
5.எந்த சங்கமாவது
இவை எதுவும் இல்லாததால் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .
உண்மை உணருங்கள் 1989 பின் எந்த போராட்டமாவது கடைசி வரை ஒற்றுமையாய் நடந்த வரலாறு உண்டா ? இல்லை .காரணம் சங்கங்கள் தோழர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்கள் எனவே தான் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .

காலத்திற்கு ஏற்றார் போல் போராட்ட தன்மை மாற வில்லை .நாடக போராட்டங்களால் பொது மக்கள் மத்தியில் ஆசிரியருக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம் .

டாட்டா சங்கம் ஆசிரியர்களுக்கு 2800 தர ஊதியத்தை மாற்றி சட்ட போராட்டம் மூலம் 9300+4200 பெற்று தரும் அதுபோல் 2016 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தை திரும்ப பெற்று தரும் .பழங்கதை பேசும் பாரம்பரியம் பேசுபவர்கள் சங்கங்கள் டாட்டா போல் ஏன் வாக்குறுதிகள் கொடுக்க முடிய வில்லை . CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தைநடைமுறை படுத்திட வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாட்டா வின் CPS வழக்கு 24-02-2016 விசாரணைக்கு வர உள்ளது . CPS திட்டத்தில் உள்ளவர்களே 2800 ல் உள்ளவர்களே டாட்டா உங்களுக்கு எழந்த உரிமையை மீண்டும் பெற்று தரும் .சட்ட போராட்டம் நடத்த அதிக அறிவும் அதிக ஆவணங்களும் வேண்டும் ,ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .

புறக்கணியுங்கள் நாடக போராட்டம் நடத்திய சங்கங்களை புறக்கணியுங்கள் .அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியரே ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
----டாட்டா மாநில அமைப்பு ,
கண்டிப்பாக டாட்டா சங்கம் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியம் பெற்று தரும் .அதன் அடிப்படையில் தான்  7 வது ஊதிய குழு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .உச்ச நீதிமன்ற வழக்கின் படி அரசு ஊதிய முரண்பாடை தீர்க்க வேண்டி டாட்டா கொடுத்த மனு ..
 









 ஏமாறாதீர் !!!!!! போலி வேஷங்களை நாம்பாதீர் !!!!!!

2009க்குப்பின் பணியில் சேர்ந்த இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை
இயக்குநரிடம், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்தறை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு என 16.09.2013 லேயே தெளிவாக
எடுத்துரைத்தது TATA( TAMILNADU ALL
TEACHERS ASSOCIATION) செயலாளர் கிப்சன் அவர்களே.இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டுதான் டாட்டா வின் முதல் ஊதிய வழக்கு 33399/2013. நடந்தது ..


சில சங்கங்கள் தற்போது நடத்தி முடித்து இருக்கும் போராட்ட நாடகங்கலின்  உண்மை முகம் விரைவில் அனைவரும் உணருவார்கள் .தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு முரண்பாடுகளுக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளன .இந்த வழக்குகள் முடியாமல் 7 வது ஊதிய குழு சாத்தியம் இல்லை .சிலர் 2009/2012/2014 வருடங்களில் நியமனம் பெற்றவர்களுக்கு தாங்கள் தான் காவலன் என போலி வேஷம் செய்து வருகிறார்கள்.  

கண்டிப்பாக டாட்டா சங்கம் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியம் பெற்று தரும் .அதன் அடிப்படையில் தான்  7 வது ஊதிய குழு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .





 




 


 
CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. .மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம்  ( PFRDA.) அறிவிப்பு --தமிழ்நாடு ,திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு.இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

CPS - திட்டம் ரத்து - ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு அமைக்க வேண்டுதல் சார்பு .---டாட்டா சங்கம் மனு....


  
2800 தர ஊதியத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் நிரந்தர தீர்வான 9300+4200 ஊதியத்தை 01.01.2006 முதல் வழங்க ஆவண செய்ய வேண்டும் என டாடா பொறுப்பாளர்கள். உயர்திரு. தொடக்க கல்வி இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.   (24-02-2016.)


 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - குடும்ப நல நிதி - ரூ.1,50,000/- லிருந்து ரூ.3,00,000/- ஆக உயர்வு ஆணை வெளியீடு

G.O.No.57 Dt: February 22, 2016 - TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Click Here...

 

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - CPS, சந்தாதாரர்கள் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு / ராஜினாமா / இறப்பு - கணக்கு முடித்து இறுதித் தொகை பெறுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அன்பு இயக்க உறவுகளே!
வணக்கம். ஜேக்டோ இட்ட அனைத்து கட்டளைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட என்னால் முடிந்த வரை இயக்கப் பணியாற்றியதாகவே கருதுகிறேன்.
ஜேக்டோவின் அனைத்து விதமான போராட்டங்களில் நீங்கள் எனக்களித்த ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜேக்டோவின் நேற்றைய முடிவுகள் என்னை வெகுவாக பாதித்துள்ளது.
அப்பாதிப்புகளில் இருந்து வெளிவர மிகவும் கடினமாக உள்ளது.
இப்பதவியில் இன்னும் நீடிக்க வேண்டுமா? என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.
இயக்கப் போராட்ட நிகழ்விற்காக எனதருமை உறவுளை பகைத்துக் கொண்டதும் உண்டு.
வட்டாரச் செயலாளர் அழைத்துச் சென்ற போராட்டப் பாதைகள் நிச்சயம் வெற்றியைத் தரும் என 100% நம்பி வந்த இயக்க ஆசிரியப் பெருமக்களை இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பது?
இனி போராட்டத்திற்கு வாருங்கள் என்று நான் அழைத்தால் எந்த நம்பிக்கையில் உறவுகள் வருவார்கள்?..
மேற்குறிப்பிட்ட பல்வேறு நிகழ்களை நினைவில் கொண்டு என்னை செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள விழைகிறேன் என்பதை நான் சார்ந்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் என் இதயம் இயக்கத்திற்காக துடிக்கும்...
அ.ஜெயராஜ்..
TESTF
குண்டடம்.
அனைவரும் படிக்கவும்
முந்தைய காலக்கட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்ந்தது என்று கூறலாம் ஆனால் இன்றோ சங்கங்கள் அரசியல் சாயம் பூசிக்கொண்டு ஆசிரியர்களிடம் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்கள் நலன் முக்கியம் இல்லை ஆகையால்தான் இன்று சுமார்37சங்கங்கள் உருவாகியுள்ளது.ஆசிரியர்களே நீங்களும் திருந்தமாட்டீர்கள் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்தாலும் அவர்கள் பின்னாடியே இருப்பதுனால் நம்மை அடிமையாக்கி வைத்துள்ளன. நீ பாதிக்கபட்டவன் ஒரு தன்மானம் உள்ள ஆண்மகன் என்றால் அந்த சுயநலம் நாய்கள் சங்கத்திலிருந்து வெளியே வா அப்படியும் நீ அதில் இருந்தால் உண்ணை மாதிரி அடிமை இந்த உலகத்திலே இல்லை .தயவு செய்து மாவட்ட மற்றும் வட்டார தலைவர்களே நான் பெரிய ஆலு நான் இந்த இனத்தை சார்ந்தவன் நான் நல்லா கேட்பேன் என்று ஏமாற்றி உங்களை வளர்பதற்காக அப்பாவி இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றி சங்கத்தில் சேருங்கள் என்று போகாதீர். அவர்களை இடைநிலை ஆசிரியர்கள் ஓடவிட்டு விரட்டுங்கள் .உண்மையாக யார் போராடினாலும் அவர்கள் பின்னே நில்லுங்கள் .இனிமேலும் முதியோர் ஏமாற்றுகாரர்கள் சங்கத்தில் இருப்பேயானால் உண்ணை விட கேவலமான மனிதன் இல்லை நீ மானம் உள்ளவனா மானம் இல்லாதவனா நீயே யோசி!
மாநில ஜாக்டோ தலைவர்களுக்கு நான்கு கேள்விகள்..
1.ஐந்து கட்ட போராட்டத்திற்கு பின்பு இப்படி சில காரணங்களால் போராட்டத்தை நிறுத்தி விட்டால் மீண்டும் என்ன காரணம் கூறி போராட்டத்தை துவங்க முடியும்?
2.ஆசிரியர்களின் எண்ணங்களை மதிக்காத அரசாங்கத்திற்கு எதிராக எந்த சாவால்களையும், நேரடியான கண்டங்களையும் தெரிவிக்காமல் போராட்டங்களை முன்மொழிந்து நடத்தியதும் ,பின்னர் நிறுத்தியதும் மாட்டங்களில் போராட்டங்கள் நடந்தால் மட்டுமே போதும் ,மாநிலம் தழுவிய மறியலை திரும்பப் பெற்றதும் ஏன்? மனிதச்சங்கிலி துங்குவதற்கு முன்னரே திருச்சியில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க என்ன அவசியம் ஏற்பட்டது?
3. அவசரமாக வாபஸ் பெரும் எண்ணங்களே ஜாக்டோ தலைவர்களுக்கு இருந்த சூழலில் யாருடைய உதிரத்தை உரிஞ்சிக்கொள்ள (அ) யாருடைய உழைப்பை கொச்சைப்படுத்த "மனிதச்சங்கிலி போராட்டத்தை அறிவித்தீர்கள்
4. தற்போதைய ஜாக்டோ போராட்டங்களை தேர்வு,தேர்தல்,அச்சம்,அவசரம், ஆகிய காரணங்களினால் சிதைக்க காரணமாக இருந்த சில ஜாக்டோ இணைப்புச் இயக்கங்களை மீண்டும் ஜாக்டோ இணைத்துக் கொள்ளுமா?
மாநிலத் தலைமையில் தற்போதிருக்கும் தாங்கள்.
ஒரு சராசரி ஆசிரியனாக, வட்டார/மாவட்ட பொறுப்பாளராக இருந்த காலகட்டங்களையும் நினைவு கூர்ந்து பதில் கூறுங்கள்.
என்றும் இயக்கப்பணியில்.....
கே.சத்தியநாதன்
மாவட்டச் செயலாளர்
TESTF, Chennai Corporation
ஒற்றுமையை வெளிப்படுத்தி ஒன்று கூடியதன் நோக்கத்தை வெளிக்காட்டுவது மனித சங்கிலி. இப்போதோ சங்கம் எனும் சங்கிலி அறுந்து போய் விடுமோ என்ற அச்சத்தோடு அறிவிக்கப்பட்டிருப்பதுவே மனித சங்கிலி போல உள்ளது.
சங்கிலி, கோட்டை பேரணிக்கு பின்னர் 25 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வராவிட்டால் 26 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் என்றவர்களுக்கு, தற்போது அறிவிப்பு வந்துவிட்ட பின்னர் வேறு என்ன அறிவிப்பு வரும் என்று நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. எதிர்பார்த்தது ஒன்றும் இல்லை என்ற பின்னர் எதற்காக இன்னமும் 25 வரை காத்திருப்பு. நாளை கடத்தி தேர்தல் ஆணையம் மீது பழி சுமத்தி அப்படியே நெளிந்து வளைந்து திரும்பவும் நம்பிய இடைநிலை ஆசிரியர் சமூகம் மீது மிளகாய் அரைக்கவா?
இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சர்ட்டிபிகேட் கோர்ஷ் என்று அறிக்கையில் குறிப்பிட்ட போதே அதை எதிர்த்து குரல் கொடுத்து அதை மக்கள் முன் கொண்டு சென்றிருக்க வேண்டும். மீடியாவும் மக்களும் கல்வி தகுதியை ஏன் குறைத்து தவறான அறிக்கை தருகிறீர்கள் என்று கேட்டிருப்பார்கள். நியாயம் வென்றிருக்கும். அதைவிட்டு ஊதியம் குறைவு என்று மக்கள் மேடைக்கும் செல்ல இயலாது.
பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக பெறும் நிலையில் ஊதியம் நிர்ணயம் செய்த அழகையும், இ.நி.ஆசிரியர்களின் கல்வி தகுதியை குறைத்து அறிக்கை வெளியிட்டதையும் மக்கள் மேடைக்கு எடுத்து செல்வதே இடைநிலை ஆசிரியரின் ஊதியப் பிரச்சினையை அதிகாரிகள் நின்று கவனிக்கச் செய்யும். மனித சங்கிலி மனங்களின் சங்கிலியாக இருக்க வேண்டும். Upper Primary CRC எனக்கு அடுத்த வாரம்தான், அதனால் சும்மா வந்திட்டு போனேன் என்பதல்ல மனித சங்கிலி.
ஆசிரியர் சமூகம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம்.
CPS ஆசிரியர்கள் மற்றும் 2800 தர ஊதிய ஆசிரியர்கள் கவனத்திற்கு ....

போராட்டம் வெற்றி பெற....சரியான சங்கத்தில் இணையுங்கள் 

1. பிரச்சனை உருவாகிய உடன் பேராடியிருக்க  வேண்டும் 
2.போராட்ட களத்தின் தலைவருக்கும் அதே பாதிப்பு இருக்க வேண்டும்.
3.சட்ட அறிவு இருக்க வேண்டும்.
4.பிரச்சனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தும் தலைவருக்கு தெரிய வேண்டும் 
5.எந்த சங்கமாவது
இவை எதுவும் இல்லாததால் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .   

உண்மை உணருங்கள் 1989 பின் எந்த போராட்டமாவது கடைசி வரை ஒற்றுமையாய் நடந்த வரலாறு உண்டா ? இல்லை .காரணம் சங்கங்கள் தோழர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்கள் எனவே தான் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .   

காலத்திற்கு ஏற்றார் போல் போராட்ட தன்மை மாற வில்லை .நாடக போராட்டங்களால் பொது மக்கள் மத்தியில் ஆசிரியருக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம் .

டாட்டா சங்கம் ஆசிரியர்களுக்கு 2800 தர ஊதியத்தை மாற்றி சட்ட போராட்டம் மூலம் 9300+4200 பெற்று தரும் அதுபோல் 2016 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தை திரும்ப பெற்று தரும் .பழங்கதை பேசும் பாரம்பரியம் பேசுபவர்கள் சங்கங்கள் டாட்டா போல் ஏன் வாக்குறுதிகள் கொடுக்க முடிய வில்லை . CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தைநடைமுறை படுத்திட வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாட்டா வின்  CPS வழக்கு 24-02-2016 விசாரணைக்கு வர உள்ளது .  CPS திட்டத்தில் உள்ளவர்களே 2800 ல் உள்ளவர்களே டாட்டா உங்களுக்கு எழந்த உரிமையை மீண்டும் பெற்று தரும் .சட்ட போராட்டம் நடத்த அதிக அறிவும் அதிக ஆவணங்களும் வேண்டும் ,ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .

புறக்கணியுங்கள் நாடக போராட்டம் நடத்திய சங்கங்களை புறக்கணியுங்கள் .அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியரே ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
 ----டாட்டா மாநில அமைப்பு ,

பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தீர்த்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி  (01-02-2015) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-(TATA) நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்ட காட்சி ..




 

டாடா சங்கம் 2013 ல் வழக்கு தாக்கல் செய்யும்போது 52,000 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டில் உள்ளதாக நீதி மன்றத்தில்  .அரசு எண்ணிக்கை அதிகம் என்ற காரணம் கூறி ஊதிய மாற்றம் செய்ய மறுத்து 60473/2014,அரசு கடிதம் நமது சங்கத்திற்கு அனுப்ப பட்டு இறுந்தது. அததைஎதிர்த்து நாம் தற்போது நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளோம் . இந்திய உச்ச நீதிமன்ற வழக்கு எண்.slp (c) no.9091/2015.ல்   IA.NO.5/2015.  நீதி மன்றம் மூலம் அனைவருக்கும் ஊதியம் 9300+4200 என 1.1.2006 முதல் பலன் பெற்று வழங்கப்படும்.

நமக்கு 10 Ias அதிகாரிகள் ஊதிய குழு என்ற பெயரில் ஊதிய உயர்வு வழங்கிட பொய்யாண காரணம் கூறி மறுத்து உள்ளதால் அதை நீதி மன்றம் முலமாக மட்டுமே நீக்கி ஊதிய மாற்றம் பெற முடியும்.


(எ.கா) Aeeo அவர்கள் நமது பண பலன் சார்ந்த கோப்புகளை எதோ ஒரு காரணம் கூறி கோபுகளை திருப்பினால் அதை சரி செய்தால் தான்னே  பணபலன் பெற முடியும்.அதே போல் தான் நமது ஊதிய முரன்பாடும் தீர்க்கப்பட Ias அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஊதிய குழு அறிக்கை தவறானது என அறிவித்துஉள்ளதை  திருத்தி எழுதும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு  .என்பதால் தான் டாடா நீதி மன்றத்தை நாடி  உள்ளது.இதை தான் தமிழக முதல்வர் அவர்கள் 19.02.2016 அன்று சட்ட மன்றத்தில் விதி 110 ன் கிழ் அறிவித்து உறுதி செய்து உள்ளார்கள் .உண்மை உயிர் பெற காலதாமதம் ஆகலாம் ஆனால் தடுக்க முடியாது .போலிகளை நம்பி எமாறா தீர்கள் ! !!!!
அனைவருக்கும் நீதி மன்றம் மூலம் ஊதிய மாற்றம் டாடா பெற்று தரும்.டாடா கிப்ஸன்.

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்
அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1) குடும்ப நல நிதி உயர்வு:கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறுசங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:
கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.
4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வுஅங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000ரூபாயாக உயர்த்தப்படும்.சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.

5) பணிக்கால தகுதி குறைப்பு:
ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:
பள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.

7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வுமக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:
உயர்கல்வித் துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

9)அரசு அலுவலர்கள் வழக்கை விசாரிக்க தீர்ப்பாயம்:
தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்துவந்தனர். தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.

10) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே, செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.

11)ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்து ஊதியக் குழு பரிசீலிக்கும்:
ஊதிய விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.எனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.எனது இந்த அறிவிப்புகள் அரசு அலுவலர்கள் புதிய உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.

🔰Tata sangam ....
ஓய்வூதியம் என்றால் என்ன?
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.
‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.
ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்
1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.
இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.
நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?
புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.
இப்படி பட்ட cps காகத்தான் போராடுகிறோம் என்பதை cps தோழர்களுக்கும் பொதுமக்களுக்கு ம் தெரியப்படுதுங்கள்.
~tata ....kipson.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?..
 .................................................................................................................................
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு..m......TATA Sangam.

சட்டப்பேரவை 110விதியின் கீழ்....
அரசு ஊழியர்களுக்கு

🔰குடும்ப நல காப்பீட்டுத்தொகை உதவி 1,50,000/- லிருந்து 3,00,000/- உயர்வு.
🔰அரசு பணிகள் பொது அரசாணைமூலம் முறைப்படுத்தப்படும்.
🔰சத்துணவு ஓய்வூதியம் 1500/- உயர்வு.
🔰சமையல் உதவியாளர் பணப்பயன் ஓய்வின்போது 25,000/- .
🔰நிர்வாக தீர்ப்பாயம் மீண்டும் செயல்படுத்த முடிவு.
🔰பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் விலக்கு.
🔰பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த புதிய வல்லுநர் குழு.
🔰கிராம செவிலியர்க்கு துறை செவிலியராக பதவிஉயர்வு.
🔰கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம்15,000 .
🔰மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவிஉயர்வு.
🌹🌹🌹TATA...Sangam.🌹🌹
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா** வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20.02.16 அன்று வழங்கப்பட உள்ளது .அரசு உழியர்கள் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக ...
Voice of TATA:-TATA சங்கம் தேர்தல் ஆணையம் மீது வழக்கு .W.P.(MD).NO.3448/2016.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 18/2/16 விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகிறது.
1.கைக்குழந்தை உடைய, தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறன் ஆசிரியர் ஆகியோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
2. கணவன் மனைவி இருவரும் பணியில் இருந்தால் தேர்தல் பணி ஒரே பூத் அல்லது அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்த வேண்டும்.
3.ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும்போது உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். 20km சுற்றளவுக்குட்பட்ட பகுதியில் பணி வழங்கவேண்டும். உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட
  வலியுறுத்தி பொதுநல வழக்கு.தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.விரைவில் விசாரணை விபரம் மற்றும் தீர்ப்பு விபரம் பதிவிடப்படும் ...
TATA


TATA




TATA - சங்கம் போராட்டம் குறித்த நிலைப்பாடு .....

நமது சங்கத்தின் முந்தய மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கள போராட்டம் யார் செய்தாலும் ஆதரவு என்ற நிலை பாடு காரணமாக அரசு உழியர்களின் போராட்டத்திற்கு டாட்டா முழு ஆதரவு வழங்குகிறது .மேலும் வரும் நாள்களில் நடை பெறும்  கள போராட்டங்களில் மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட செயலாளர்களின் முடிவின் படி பேராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மாநில அமைப்பு கேட்டு கொள்கிறது 
Hello Mr. Xxxx    TATAவின் 5வருட  சாதனைகள் ...

He is commenting about TATA &TATA.
Before commenting anyone...you must know what I am...commenting whom...past history...what is going on now...
Not knowing anything...having lot of strength...what is the use...strength/age will not workout...hand full of dash...what's the use...
Last 9 years what u are doing...
Now also not doing fruitful.....nothing...

இடைநிலை ஆசிரியருக்கு பிரச்ச்னைகள் இருக்குன்னு சொல்லி தூங்கி கிடந்த உங்களை எழுப்பியது இந்த சிறு சங்கங்களே...
என்ன நடந்தது...இன்னும் அரசு இடைநிலை ஆசிரியரை டிப்ளமோ ஹோல்டர் இல்லை என்றுதான் சொல்லி வருகிறது...
சிறு சங்கங்களின் சாதனைகள் கடந்த சில வருடங்களில்....

--மாநில மூப்பு அடப்படையில் பணி நியமனம் உச்ச நீதிமன்றம் மூலமாக.நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுத்தல் பெற முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றது .... நாங்களே..

--இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதிய குழுவில் 'பிரச்சனை உள்ளது' என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு .... நாங்களே...

--தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கிட ஊதிய பிரச்சனை தொடர்பாக உச்ச நீதி மன்ற வழக்கு - நிலுவையில்....

....தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு நிலுவையில் .....

....ஆசிரியர் நலனுக்காய் 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு ....மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாள் ..18.02.2016.

... CPS..திட்டம் தவறானது, 2003 க்கு பின் ஓய்வு ,,மரணம் அடைந்தவைகளுக்கு ( 216 பேர் ) கட்டிய பணம் திரும்ப வழங்கிட வேண்டும் .தற்காலிக ஓய்வுதியம் ரூ.10,000/= அனுமதிக்க வேண்டும் .கமுடேசன் வழங்கிட வேண்டும்.என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...விசாரணை நாள் ...23-02-2016 .

எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

...ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!


We don't want any appreciation r recognition...
We r fighting on our way...ultimately v also FOR teachers only...
Leave us alone...pl don't pass any negative comments against us....
--from Kipson Tata

நிதிநிலை அறிக்கையில் மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் இல்லை

தமிழக சட்டப்பேரவையின் வழக்கமான மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படாது என்ற பேரவையின் வழக்கமான மரவை பின்பற்றி, அதிமுக தலைமையிலான அரசு புதிய அறிவிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை.


இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ரூ.60,610 கோடி  உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்ட மானியத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றித்திறனாளி உள்ள குடும்பத்தினருக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 2015-16ஆம் ஆண்டிற்கான நேரடி நியமனம் / இதர நியமன முறைக்கான காலிப் பணியிடம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியீடு....

எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!!

திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு...
மாற்றுத்திறனாளிக்கு உள்ள திராணி கூடவா ஜாக்டோவிற்கு இல்லை...????
கடந்த மூன்று நாட்களாக மாற்றுத்திறனாளிகள் செய்த தொடர் மறியலால் அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் பட்ஜெட்டில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றது..
கூட்டம் முடிந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள்.. பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோட்டையை நோக்கி தொடர் முற்றுகை செய்வோம் என்று ஆவேசமாக அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர்களிடம் அரசுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு களைந்தனர்..
(இப்படியல்லவா அரசை எச்சரித்து விட்டு வந்திருக்கனும் நம் ஜாக்டோ பேரமைப்பு...ஆனால், பண்ணியதா அதை)
16-ம் தேதி பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கு எச்சரித்துவிட்டு வர ஜாக்டோவிற்கு ஏன் இவ்வளவு தயக்கம்...????
தயக்கமா....
இல்லை, கூட்டமைப்பின் மீது உள்ள நம்பிக்கையின்மையா..????

2002-களில் இருந்த உங்களின் வேகம் தற்பொழுது எங்கேபோனது...????
நாங்கள் அகலபாதாளத்தின் விளிம்பில் தவிக்கும் போது கூட...,
நீங்கள் பொங்கி எழாததன் மர்மம் தான் என்ன......??????

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நமக்கு வெறும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன..
அதன்பின் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்,
அதன் பிறகு வெறும் கண்துடைப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றலாம் என்ற எண்ணமோ...????

16-ம் தேதி ஏமாற்றப்பட்டோம் என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளீர்களே...????
தொடர்வேலைநிறுத்தின் தேதியை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூற கூடவா திராணியை இழந்தது ஜாக்டோ பேரமைப்பு...????
17-ம் தேதி கோட்டையை நோக்கி தொடர் முற்றுகையிடுவோம் என்று அறிவித்து எங்களின் கோரிக்கைகளை கேளிக்கை ஆக்கிவிடாதீர்கள்..
(உங்க பொங்கச் சோறும் வேண்டாம் .. பூசாரித் தனமும் வேண்டாம்)

நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்து...
ஆனால் , அதற்கு மற்ற சங்க நிர்வாகிகளோ... உயர்திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியதால் பட்ஜெட் வரை காத்திருக்கலாம் என்றார்களாமே......????
அவர்கள் என்ன 2800 ஊதியக்கட்டில் உள்ளவரா...?????
இல்லை, CPS-ஆல் பாதிக்கப்பட்டவரா...????)
நாங்கள் போராட வேண்டியது அரசுடன் இல்லை...
நாங்கள் சார்ந்துள்ள இயக்கத் தலைமைகளிடம் தான் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திவிட்டீர்கள்..

ஜாக்டோஜியோ-வாக விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டிய நமது போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்துவிட்டீர்களே....????
(இதில் என்ன சூழ்ச்சியோ..!!! )

தொடர்வேலை நிறுத்தத்தை நீங்கள் விரைவில் அறிவிக்க தவறினால்....!!!
எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..

ஜாக்டோவில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அனைத்து சங்கங்களும் இழக்க நேரிடும் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எச்சரிக்கின்றேன்.....
அதற்கு அச்சாரம் தீட்டுவதைப் போல் உள்ளது ஜாக்டோவின் தொடர் அலட்சியப் போக்கு....
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்
தற்சமயம் பேச்சு வார்த்தை தோல்வி.
தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் கோரிக்கைகளை தற்போது ஏற்க இயலாது என நிதித்துறை செயலாளர் அறிவிப்பு.





வாட்ஸ் ஆப்ல் சுட்டது.
எங்கே போனது..?
எங்கே போனது..?
2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?
தெரியவில்லையா...?
தெரியவில்லையா...?
அதைவிட பாதிப்பு அதிகம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா...?
அமைந்திடுமா..?
அமைந்திடுமா..?

முதுமை என்ற நோயிற்கு
ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?

அலட்சியமா...?
அலட்சியமா..?

முதுமை கண்ட தலைமைகளே
நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?

கூறிடுக ...?
கூறிடுக...?

3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...
மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
அறிவிக்காதது ஏன் கூறிடுக..?

சுயநலமோ...?
சுயநலமோ...?

8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?
வேகமெடு..வேகமெடு..
இழப்பினை மீட்க வேகமெடு..

குதிக்கின்றோம்..
குதிக்கின்றோம்...

எங்களின் அடியே நெருப்பினைத் தான்..
பற்ற வைத்தது நம் அரசு..

அதனால் கொதித்து குதிக்கின்றோம்..
உணர்ந்தாயோ..?
உணர்ந்தாயோ..?
அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..

மறுக்கிறதோ...?
மறுக்கிறதோ..?

அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?
அழிக்காதே அழிக்காதே..
போட்ட கோட்டை மீண்டும் அழிக்காதே..

ஆரம்பிக்காதே ஆரம்பிக்காதே..
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்காதே..

குறைக்காதே குறைக்காதே..
போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காதே..

நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு...

அரசு ஊழியர்களுடன் கைகோர்க்க நடவடிக்கை எடு..
யோசிக்காதே யோசிக்காதே..
அரசு ஊழியர்களுடன் இணைய யோசிக்காதே...

இணைந்திடுக இணைந்திடுக...
விருப்பு வெறுப்பினை கலைந்து இணைந்திடுக..

முரண்படாதே முரண்படாதே...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதில் முரண்படாதே..

உருவெடு உருவெடு...
ஜாக்டீயாய் உருவெடு...

அலட்சியம் வேண்டாம்...
அலட்சியம் வேண்டாம்..

போராட்டத்தை அறிவிப்பதில் அலட்சியம் வேண்டாம்..
சோகம் தான்..
சோகம்தான்..
உங்கள் வேகம் எங்கள் சோகம் தான்..

தாண்டினாயே...?
தாண்டினாயே...?

எங்கள் கையைப் பிடித்துத் தாண்டினாயே..?
முழு கிணரும் தாண்டினாயா...?

காத்திருக்காதே..
காத்திருக்காதே...

அரசின் அறிப்பை எதிர்பார்த்து காத்திருக்காதே...
வகுத்திடுக வகுத்திடுக..
அனல் பறக்கும் போராட்ட வியூகம் வகுத்திடுக..

கையில் எடு..
கையில் எடு...

கடைசி ஆயுதத்தை (தொடர் வேலைநிறுத்தம்) கையில் எடு...
புரிகிறதா புரிகிறதா...?
பாதிக்கப்பட்டவர்களின் கொந்தளிப்பு உனக்குப் புரிகிறதா..?

நெருக்கடி கொடுப்போம்...
நெருக்கடி கொடுப்போம்...

தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கும்வரை நெருக்கடி கொடுப்போம்...
காப்பாயோ..காப்பாயோ...
இனியும் அமைதி காப்பாயோ..

இனியும் தாமதம் செய்திட்டால்..
வெளுத்திடுமே...
வெளுத்திடுமே..
சாயம் இருப்பின் வெளுத்திடுமே..

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்

வாக்குறுதிகள் நமக்கு வாய்க்கரிசிகளே....
டிட்டோஜாக் தலைமைகளே..
நாளையாவது பின்வாங்காமல் தெளிவாக கோரிக்கையில் ஒரே நிலைபாட்டுடன் இருங்கள்....
புதிய பென்சன் திட்டம் எங்களுக்கு வாய்கரிசி போட மட்டுமே உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்...
தீயாய் பற்றி எரியக் கூடிய இந்த இரண்டு
(CPS ரத்து & மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம்)
கோரிக்கைகளும் நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசுக்கு உணர்த்துங்கள்..

தற்பொழுது நிதிநிலை சரியில்லை 15 அம்சக் கோரிக்கையில் நிதி சாராத கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்றித் தருகிறோம் ...
750-ஐ போல் ஒரு 250 தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினால் பச்சை துண்டு வாங்க வெளியே வந்துவிடாதீர்....
கோரிக்கைகள் நிறைவேறாவிடில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வாரீர்..
அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
ஜாக்டீயாக உருவெடுத்து அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று..

உங்களின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்..
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்

கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

.
ஆனால், பிற அரசு ஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.
டாட்டா சங்கம் சார்பில் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மீது பொது நல வழக்கு தாக்கல் ..

2016 ஆண்டில் தமிழ்நாட்டின் சட்ட மன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது .தேர்தல் பணிக்கு 3,50,000 ஆசிரியர்கள் பயன்படுத்த உள்ளனர்.தேர்தல் பணியின் போது ஆசிரியர்களின் நலன் சார்ந்து 10 கோரிக்கைகள் 28.12.2015 அன்று தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பபட்டு உள்ளது.இதன் மீது விரைவில் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பிக்க பொது நல வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது .என்பதை மகிழ்சியுடன் தெரிவிக்கிறேன் .என்றும் ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதிய சம்பள கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று
(பிப்ரவரி 1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின் கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.