PAGEVIEWERS


சிறப்பு ஆசிரியர் பணிக்கு, 10 மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில், 1,020 பட்டதாரி விளையாட்டு ஆசிரியர்கள் உட்பட, 1,500 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, 2011 டிசம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இப்பணி முடிந்து, 10 மாதங்களாகியும், பணி வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்த, முதுகலை பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணியிடங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறித்த விவரத்தை அரசு சேகரிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, ஜூலை 7ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 10.2 லட்சம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய சிலருக்கு, 200 கேள்விகளுக்குப் பதில், 150 கேள்விகள் மட்டுமே, கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, ஐகோர்ட்டில், சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "மறு உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, உத்தரவிட்டது. விடைத்தாளை திருத்திக் கொள்ள, அனுமதித்தது. ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைமதி, "குறைபாடு உடைய, கேள்வித்தாளை வழங்கியதால், பாதிக்கப்பட்ட, 13 பேருக்கு, புதிதாக தேர்வு நடத்தப்பட்டது. அதில், மனுதாரர்களுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது' என்றார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு, "தேர்வு நடத்தப்பட்டு விட்டதால், எங்களுக்கு மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார். இதையடுத்து, "குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்த உத்தரவை நீக்கி, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் பி.எப். பணத்தை 8 வருடமாகத் திருடிய சி.எஸ்.ஐ. பிஷப் கைது.
COIMBATORE: CB-CID sleuths arrested D Amirtham, former secretary of the CSI diocese and present correspondent of five schools run by the diocese on Monday night.Amirtham was produced before the Judicial Magistrate at his residence, who remanded him in custody till March 22.
Subsequently, Amirtham was sent to the Coimbatore Central Prison.
Acting on the direction of CB-CID DSP Sambasivan, the special team led by Inspector Umapathy picked up Amirtham for interrogation on Monday evening. After grilling him for several hours, they arrested him under five Sections including 120B conspiracy, 468 and 471 for bogus documents, 477 for falsification of accounts and 409 for criminal misconduct.
CB-CID inspector Umapathy told Express that Amirtham has been charged for siphoning off five per cent each from both the employees and employer’s contribution towards provident fund account pertaining to 19 teachers right from 2000 to 2008 and not remitting it at the PF office.

எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...

மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 

மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். 
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். 
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.

பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். 
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

பள்ளிகளில் அடிப்படை வசதி மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்'என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்காளால் இரத்து செய்து இயக்குனர் உத்தரவு.


தமிழக அமைச்சரவை மாற்றம் செய்து முதல்வர் உத்தரவு.


ஊட்டி தாவரவியல் பூங்காவில் தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்



 ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய புல்வெளி மைதானத்தில் ஓடியாடி விளையாடுவது வழக்கம். இரண்டாவது சீசன் துவங்கியுள்ளதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும் ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், பூங்கா நிர்வாகம் பராமரிப்பு என்ற பெயரில் பெரிய புல்வெளி மைதானத்தை கடந்த சில நாட்களாக மூடி வைத்துள்ளது. பெரிய புல்வெளி மைதானத்திற்கு செல்ல பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓடியாடி விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பெரிய புல்வெளி மைதானத்தை திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
His Excellency the Governor and Honble Chief Minister paid floral tributes to Mahatma Gandhi on his 144th birthday
Press Release
Press Release

TNPSC - VAO EXAMINATION 30.09.2012 ANSWER KEYS RELEASED

TO DOWNLOAD TNPSC - VAO EXAM 30.09.2012 GENERAL KNOWLEDGE ANSWER KEYS CLICK HERE...
TO DOWNLOAD TNPSC - VAO EXAM 30.09.2012 GENERAL TAMIL ANSWER KEYS CLICK HERE...
TO DOWNLOAD TNPSC - VAO EXAM 30.09.2012 GENERAL ENGLISH ANSWER KEYS CLICK HERE...

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER
 (Date of Examination:30.09.2012)
 
1
2
3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.
"அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனத்தில், அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான், பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது சட்டவிரோதம். இது, பிறரின் உரிமையை பறிக்கும் செயல். உள்ளூரை சேர்ந்த விண்ணப்பதாரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு செல்லாது. மாவட்ட வாரியாக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். நியமனங்களை இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.
bugs 4

Cherries

பள்ளிப் பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்க அரசு திட்டம்




 பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாக்கும் விதத்தில் ஓட்டுனர்களுக்கு மட்டுமின்றி, பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டுனர்களை பரிசோதிக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உதவியாளரை விட்டு விடுகின்றனர்.

எனவே பள்ளி வாகன உதவியாளர்களும் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 விதிகள்,அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் சார்ந்த பயிற்சி - Powerpoint Presentation Slide Show


பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.


பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.




அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு முழு உடல் பரிசோதனை: மத்திய அரசு உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper





நாடுமுழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 22 கோடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களில் அரசு நடத்தும் 11 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 22 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் முழு உடல் பரிசோதனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக மண்டல அளவில் 2,414 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.383 கோடி நிதியை மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஒதுக்கியுள்ளார். மாணவ, மாணவிகளின் கண் பார்வை, செவித் திறன், சருமம், இதயம், பற்கள் என உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்பது பரிசோதனையின் போது உறுதி செய்யப்படும். குறை இருந்தால் அதற்கான சிகிச்சைக்கு மருத்துவர் குழு பரிந்துரை செய்யும். நோய் தடுப்பு ஊசி, இரும்பு சத்து மாத்திரை, விட்டமின் சி மற்றும் ஏ மாத்திரைகளும் பரிசோதனையின் போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். 6 முதல் 18 வயது வரையிலான அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் இந்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.