PAGEVIEWERS

திருநெல்வேலி : போலீஸ் சங்கம் அமைக்க முயன்றது உட்பட பல்வேறு புகார்களில் சிக்கிய ஏட்டு அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நெல்லை சிறுவர் பாதுகாப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் சங்கர சுப்பிரமணியன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னீர்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்தது. உயர் அதிகாரிகள் விசாரணை செய்த போது அதை டேப் செய்தது. போலீசுக்கு என தனியாக சங்கம் அமைக்க முயற்சி செய்தது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. இதுதொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். கோர்ட் உத்தரவுப்படி மீண்டும் பணியில் சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சங்கர சுப்பிரமணியன் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறியது உட்பட பல்வேறு புகார்கள் இவர் மீது மீண்டும் கூறப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஏட்டு சங்கரசுப்பிரமணியன் நேற்று அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்'

, டி.ஆர்.பி., இணையதளத்தில், வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.inவெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளைமறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Please Click here Child Development and Pedagogy Answer key Paper 1Teacher Eligibility Test 2012 (Supplementary) Initial Key answers for both Paper I and Paper II (Except Minority Languages)


தொடக்கக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டு - 3 முதல் 5 வகுப்பு வரை ரூ.500/- மற்றும் 6ஆம் வகுப்பு ரூ.1000/- SC/ ST பெண் குழந்தைக்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரத்தை அளிக்க மாநில கணக்காயர் அலுவலகம் இயக்குனரிடம் கேட்டு கொண்டுள்ளது.


தொடக்கக் கல்வி - விலையில்லா புத்தகப் பைகள் வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை கோருதல்.

தொடக்கக் கல்வி - பாடநூல்கள் விநியோகம் செய்த கூடுதல் செலவினம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் விவரம் கோருதல்.





நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,695 காலி இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ந்தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை 31/2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஜுன் மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

SARVA SHIKSHA ABHIYAN - HANDWRITING SKILL TRAINING ON 21.11.2012 TO 28.11.2012 AT RAIPUR REG



அனைவருக்கும் கல்வி இயக்கம் - புதியதாக எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் மற்றும் ஏணிப்படிகள் மாற்றங்கள் குறித்து இரு நாள் முன் ஆயுத்த கூட்டம் அனைத்து DPC / ADPCக்களுக்கு 30 & 31.10.2012 திருச்சியில் நடத்த உத்தரவு.



 TATA NEWS IN NEWS PAPER






            TATA NEWS IN NEWS PAPER

அரசு போக்குவரத்து கழகங்களில்


நடத்துனர், மெக்கானிக் நியமனம் அனைத்து அரசு உத்தரவுகள் ரத்து


அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், மோட்டார் மெக்கானிக் நியமனம் செய்வது தொடர்பாக அரசு பிறப்பித்த அனைத்து அறிவிப்பு ஆணைகளையும் ரத்து செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 200 நடத்துனர்கள் நியமனம் தொடர்பாக ஆகஸ்ட் 22ல் அறிப்பாணை வெளியிடப்பட்டது.

அதில், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 40, பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு 35, பொதுப்பிரிவுக்கு 30 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போக்குவரத்து கழகத்தில் 2007, 2010, 2011ம் ஆண்டுகளில் நடத்துனர் நியமனத்தின்போது, பி.சி., எம்.பி.சி. பிரிவுக்கு ஐந்து ஆண்டு வயது சலுகை

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு


சோழிங்கநல்லூரை சேர்ந்த ராஜா ஸ்டான்லி அனிதா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி தமிழக அரசு நடத்தியது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், தேர்வு எழுதாதவர்களுக்கும் வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், ஆசிரியர்கள் படித்த பாடங்களுக்கு வெளியில் இருந்து எடுக்கப்படுகின்றன.

பற்பசையில் விஷம்


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
TATA   NEWS  IN  NELLAI  DHINAKARAN  NEWS PAPER