PAGEVIEWERS


தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, "விசிட்' வரும் குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள் மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப்பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின் தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட, அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத்துறையில் இருந்து ஆய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன.

          நமது TATA கோரிக்கை          நிறைவேற்றினர் அம்மா ,.
      பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள் அறிமுகப் படுத்தப் படுவதாக, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்தை, காலத்திற்கு ஏற்ப மாற்றவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய உணவு முறை குறித்து, சமையற் கலைஞர்கள், ஊட்டச் சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், சோதனை முறையில்,கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை, பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்
பட்டதால், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலாக்களை, சமையல் நிபுணர்கள் தயாரித்து, விளக்கம் செய்து காட்டினர். இதன் அடிப்படையில், புதிய உணவு வகைகளை, சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய, அரசுமுடிவெடுத்துள்ளது.

இந்த புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு பகுதியில் மட்டும், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்; அந்த பகுதியில், இந்த புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.



வட்ட பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வேலூர், கரூர், உதகை, ஈரோடு, திருச்சி, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்  

சென்னை - பள்ளிகள், கல்லூரிகள் 
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள் 
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள் 
திருச்சி - பள்ளிகள், கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளிகள், கல்லூரிகள் 
திருப்பூர் - பள்ளிகள், கல்லூரிகள்   
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள் 
T.A.T.A   மாநில பொதுக்குழு கூட்டம் 

நாள் :03-11-2012

இடம் ; சரவணா லாட்ஜ் ,மதுரை , 

                பெரியார் பஸ் நிலையம் அருகில்) 


தொடர்புக்கு ;9443464081,,,,9043426895,,,,

                    வருக வருக 

அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் கிராமம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு வந்துள்ள போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.