PAGEVIEWERS
டிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள்
மாறIn the month of December 5 Saturday, 5 Sunday, Monday and 5 weeks have been. This event only happens once in 824 years, but this month is rare.
சத்துணவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகைப்பாடுகள்
குறித்து, சத்துணவு ஊழியர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் ஒரு நாள் பயிற்சி
வகுப்பு நடந்தது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பள்ளியில் நடந்த
நிகழ்ச்சியில், சிறப்பு சமையல் கலை வல்லுனர் மில்டன் தலைமையிலான
வல்லுனர்கள், பயற்சியுடன் செயல் விளக்கம் அளித்தனர்.துவக்க நிகழ்ச்சியில்,
கலெக்டர் நடராஜன் முன்னிலையில் கருவேப்பிலை சாதம் தயாரித்து, முகாமில்
பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள் முதல், வெள்ளி வரை ஐந்து
தினங்களில் வழங்கப்பட உள்ள உணவுகள், முட்டை வகைகள் அவற்றை தயாரிக்கும்
முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் அதற்கான கையேடுகள்
வழங்கப்பட்டன.
இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கக் கல்வி - தனியார் உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை ஆசிரியர்களாக நியமிக்க இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனரின் ( உதவி பெறும் பள்ளிகளில் ) செயல் முறைகள் ந.க.எண் :- 37718/எப்2/11 நாள் :- 15.11.2012.
D.T.Ed., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற 10, +2, +3 என்ற முறையில் பயின்று இருக்கவேண்டும் என்று கூறி 10, D.T.Ed., +3 என்ற முறையில் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சந்திரசேகரன், உமை ஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
"D.T.Ed. பட்டயக் கல்வி, +2 கல்வித் தகுதிக்கு இணையானது. 01.01.2012ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும்".
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.
தீர்ப்பு முழு விவரம்:TTC Egual to High court Order
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நிதி உதவி கோரும் விண்ணப்பம். தமிழகஅரசு வெளியீடு.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று,
ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.
இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.
இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை-11-11-2012.
நிதி நெருக்கடி காரணமாக தவித்து
வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன்
கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள்
மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு
இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல்
இருந்து வருகிறது