சத்துணவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகைப்பாடுகள்
குறித்து, சத்துணவு ஊழியர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் ஒரு நாள் பயிற்சி
வகுப்பு நடந்தது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பள்ளியில் நடந்த
நிகழ்ச்சியில், சிறப்பு சமையல் கலை வல்லுனர் மில்டன் தலைமையிலான
வல்லுனர்கள், பயற்சியுடன் செயல் விளக்கம் அளித்தனர்.துவக்க நிகழ்ச்சியில்,
கலெக்டர் நடராஜன் முன்னிலையில் கருவேப்பிலை சாதம் தயாரித்து, முகாமில்
பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள் முதல், வெள்ளி வரை ஐந்து
தினங்களில் வழங்கப்பட உள்ள உணவுகள், முட்டை வகைகள் அவற்றை தயாரிக்கும்
முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் அதற்கான கையேடுகள்
வழங்கப்பட்டன.