PAGEVIEWERS
ஆசிரியருக்கு பணி நீட்டிக்காதது சட்ட விரோதமானது பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
"ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, கல்வியாண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்காதது சட்ட விரோதமானது" என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள, கேசரி மேல்நிலைப் பள்ளியில், 1982ல், ராமலிங்கம் என்பவர், ஆசிரியராக சேர்ந்தார். கடந்த ஜூலை மாதம், ஓய்வு பெறும் வயதை எட்டினார். கல்வியாண்டின் நடுவில், ஓய்வுபெறும்
வயது வந்ததால், கல்வியாண்டு முடியும் வரை, பணியில் தொடர, அனுமதித்திருக்க வேண்டும்; ஆனால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:அரசாணையை மேற்கோள் காட்டி, கல்வியாண்டு இறுதி வரை, பணி நீட்டிப்பு வழங்கும்படி, மனுதாரர் கோரி உள்ளார். "அவரது நடத்தை திருப்திகரமாக இல்லை&' எனக் கூறி, பணி நீட்டிப்பு வழங்க, நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.
துறைத்தேர்வு - Collections
வழக்கறிஞர்களுக்கு 9ம் தேதி தகுதித் தேர்வு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி, கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்றால், பார் கவுன்சில் நடத்தும், தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தகுதி தேர்வுக்கு, தமிழகத்தில் படிக்கும் சட்ட மாணவர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தகுதி தேர்வை கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என, பார் கவுன்சில் கூறியது.
கடந்த, ஜனவரியில் நடந்த, தகுதி தேர்வில், 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது, இம்மாதம், 9ம் தேதியன்று, தகுதி தேர்வு நடக்க உள்ளது. சென்னையில், நான்கு, திருச்சியில், இரண்டு, கோவையில், இரண்டு, மையங்களில் தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், டி.செல்வம் கூறியதாவது: தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவலை பார் கவுன்சிலின் இணைய தளத்தில் பெறலாம்.
இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்
நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள் உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன?
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள் உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன?
D.T.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1000 பேருக்கு B.Ed தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வினை பெற்றுள்ளனர். இலவச கட்டாய கல்வி சட்டப்படி 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விழுக்காடு 1:30 ஆக மாற்றபட உள்ளது.
இவற்றால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.
கள்ளர் சீரமைப்புத்துறை | பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி அவர்கள்
தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
""தென் மண்டல மின் பாதை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இறுதி செய்யப்பட்டுவிட்டதால், அதுவரை தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
""தமிழகத்தில் மின் திட்டங்கள் தேக்கமடைந்து இருப்பதே அந்த மாநிலத்தில் மின் பற்றாக்குறை நீடிப்பதற்கு காரணம்.
தென் மண்டல மின் பாதையை பலப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு நவம்பரில்தான் நிறைவடையும்.
பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பி.ஏ. இங்கிலீஷ் படிப்புக்கு இணையானது: தமிழக அரசு உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பட்டம், பி.ஏ. இங்கிலீஷ் பட்டப் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அரசுப் பணி நியமனத்தின்போது பி.ஏ. இங்கிலீஷ் பட்டத்துக்கு இணையாக பி.இ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பும் கருதப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் இதுதொடர்பாக அனுப்பிய பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளா