PAGEVIEWERS


தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - SSLC + ITI + DEGREE, SSLC + 3YR DIPLOMA + 2YR DEGREE(LATERAL ENTRY), SSLC + OLD SSLC + DTED + DEGREE, SSLC + 3YR DIPLOMA + DEGREE (OPEN) படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, Plus 2 வகுப்பிற்கு பின் 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியீடு.