PAGEVIEWERS
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடுவண்
அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள்
இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து
படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு
கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள்
நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு
பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில்
இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார்.
பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்
செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக
வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்
எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான்
இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக்
கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான்
இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர்
வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்
கூறினார்.
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில்,
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை
மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு,
கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என,
நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி
பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" - Dinamalar
லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த
வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது என, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம்,
சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி, குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க
பள்ளி, புதுக்குடி முருகா துவக்க பள்ளி, சொக்கம்பட்டி ஹரிஜன் துவக்க பள்ளி
செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்: