PAGEVIEWERS


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய தேர்வுமுறையால் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மார்ச் 21ல் தமிழக அரசு பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவை வரும் மார்ச் 21ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகிறது. இதனை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தங்களது மாவட்டத்தின் முக்கியமான புள்ளி விவரங்களை தயார்ப்படுத்தி வைத்து கொள்ள இயக்குநர் உத்தரவு பிற்பித்துள்ளார்.
 மேற்கண்ட கூட்டத்தில் கழிவறை / குடிநீர் வசதி, மடிக்கணினி பயன்பாடு, ஸ்மார்ட் கார்டு, விலையில்லா நோட்டு புத்தகம், நீதிமன்ற வழக்குகள், சுயநிதிப் பள்ளிகள், அரசாணை எண். 210 குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாதற்க்கான காரணம், சிறார் இல்லங்கள் கருத்துருக்கள், மின் கட்டண தேவை, முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள் பற்றிய விவரம், அரசு வழக்கறிஞர் கட்டண நிலுவை ஆகிய விவரங்களை கொண்டு வர இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலி மாசுவின் விஸ்வரூபம்

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியதாவது: ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகள், 2006 ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என, ஒரு சிலரிடமிருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.முந்தைய நடைமுறைகளின்படி, இரண்டு சம்பள கமிஷன்களுக்கு இடையே, குறைந்தது, 10 ஆண்டுகள் இடைவெளி இருந்துள்ளது. எனவே, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும், இப்போது அரசிடமில்லை.இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள், இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் இருக்கலாம். அதன்படி, நடராஜ், 62, பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன், முடிவுக்கு வருகிறது. கடந்த,