PAGEVIEWERS
எம்.பில் பகுதி நேர படிப்பாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளில் வழங்குகின்றன.திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் எம்.பில் பகுதி நேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளை காண http://www.bdu.ac.in/admission/mphil2012/MPhil_Prospectus_2012_v6.pdf என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் எம்.பில்., பகுதி நேர மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளின் விவரங்களை காணhttp://www.periyaruniversity.ac.in/files/course_structure_mphil.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உலகை வாழ வைக்கும் அமிர்தம், தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், பாலிடெக்னிக்,
மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்துக் கல்லூரிகள் என ஒட்டுமொத்த
கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (மார்ச் 20) முதல் மார்ச் 22-ம் தேதி
வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 தேர்வுகள்
திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன்
அறிவித்துள்ளார்
கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள், மற்ற
மாணவர்களுக்கு இணையான கல்வி பெற, மாதிரிப் பள்ளிகள் துவங்கும் பணிகள்
நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டு முதல், 26 ஒன்றியங்களில், மாதிரி
பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம்
வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றுக்கு சொந்தக் கட்டடம்
கட்டும் வரை, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மாதிரி பள்ளிகள்
இயங்கும். இப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், இசை, உடற்கல்வி, கணினி, ஓவிய ஆசிரியர்கள் என, 17
ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர்,
அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என, ஏழு
ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படும்.
இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2
மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப்
4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி,
குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப
தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக 72 பக்கங்கள்
இது தொடர்பாக 72 பக்கங்கள்
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆணையாளராக ஓய்வு ஐ.ஏ.எஸ்.
அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள்,
புகார்கள் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகிறது. மாநில
அளவிலான சந்தேகங்களை 044 2435 1403,
விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.