"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப்
படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி
வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டு உள்ளது.
முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்), 2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம், 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு, 2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ., (ஆங்கிலம்) படித்தார். பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும் படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார்.