PAGEVIEWERS
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,
CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய
அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த
வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்
ஒவ்வொருவரும் அனுப்புவதுபயனளிக்கும் என்ற
நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.
இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை
அவசியம் எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும்
இதனை பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்களுக்கு தபால் மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு - டி.ஆர்.பி., அரசு பரிந்துரை செய்தது.
பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பி.எச்டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் - நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது.
இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், ""உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், ""தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.
"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில்,
TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது
TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது
வரலாற்று பெருமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34....
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34....
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை
செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும். இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக www.rtionline.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.......
மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் அறிவை வளர்க்கவும் அறிவை ஆய்வு செய்து பரிசோதிக்கவும் முடிவு செய்து தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 20 சதவீத மார்க்குக்கு இந்த புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது வருடாந்திர தேர்வில் எந்த பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதி மாணவர்களிடம் வழங்கப்படும். அதில் இருந்து 20 சதவீத மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் எவ்வாறு புரிந்து படிக்கிறார்கள் என்பதை பரிசோதிக்கவும் அவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த முறை வித்திடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை வருகிற கல்வி ஆண்டில் (2013–2014) 9–வது வகுப்பு, 10–வது வகுப்பு, 11–வது வகுப்பு ஆகியவற்றுக்கு கொண்டுவரப்படுகிறது. 12–வது வகுப்புக்கு 2014–2015ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்,,,
தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.
பொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு)
, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத
முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு,
இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி
பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட்,
"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.
மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது'
கூட்டுறவு தேர்தலில் பரபரப்பு 568ல் 410 ஓட்டுகள் செல்லாதவை
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. 11 இடங்களுக்கு மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 568 வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அப்போது, அதிக அளவில் செல்லாத வாக்குகளாகவே வந்ததால், வேட்பாளர்கள் ஆத்திரமடைந்து வாக்கு எண்ணும் இடத்திலிருந்து வெளியேறினர். மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரினர்.