அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, 20 ரூபாய் அரிசி திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம், திருப்திகரமாக இல்லாததால், தமிழகம் முழுவதும், நுகர்வோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் வேளாண் நிலங்களின் பயன்பாடு மாற்றம் காரணமாக, நெல் உற்பத்தி குறைந்து, தமிழக சந்தையில், அரிசி விலை, வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சந்தையில், ஒரு கிலோ சன்ன ரக அரிசி, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், 1 லட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ, 20 ரூபாய் வீதம் விற்க, தமிழக அரசு ஏற்பாடு செய்தது. கடந்த, 17ம் தேதி முதல், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்தும், விற்கப்படும் அரிசியின் தரம் குறித்தும் புகார்கள் எழுந்து உள்ளன.
யாருக்கு பயன்?இந்த அரிசி விற்கப்படும் அங்காடிகளில், பயனாளிகள் குறித்த கட்டுப்பாடு கிடையாது. அதனால், யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்ற, நிலை உள்ளதால், வணிகர்களும், உணவகங்களும் தான் அதிக அளவில் இதை வாங்குவதாக கூறப்படுகிறது.
சேலத்தில், பெயர் வெளியிட விரும்பாத அங்காடி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "அரிசியை பொறுத்தவரை, நாங்கள் எதுவும் சொல்லக் கூடாது; பார்த்தாலே உங்களுக்கு தெரியும். 10 கிலோ வரை கொடுக்க சொல்லி உள்ளனர். நாங்கள் அதற்கும் மேலேயே கொடுத்து வருகிறோம். புழுங்கல் அரிசி தற்போது, "ஸ்டாக்' இல்லை. பச்சரிசி தான் தற்போது விற்கிறோம், எந்தவித கட்டுப்பாடும் இல்லை' என்றார்.இந்த அரிசி, ஐந்து கிலோ பொதிகளில் தான் விற்கப்படுகிறது. இதனால், 1 கிலோ, 2 கிலோ வாங்கும் ஏழை மக்களுக்கு அரிசி கொடுக்க, விற்பனையாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.கடலூர் அமுதம் அங்காடியில், 1 கிலோ அரிசியைப் பிரித்துக் கொடுக்க மறுப்பதாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜி என்பவர், அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, வெளிசந்தையில் எவ்வாறு விற்பனையாகிறதோ, அதே நிலை தான், 20 ரூபாய் அரிசி திட்டத்திலும் உள்ளது. மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொருவருக்கும் விற்கப்படும் அரிசின் அளவில், கட்டுப்பாடு தேவை.
இது குறித்து, ஊட்டி நகராட்சி கடை வியாபாரிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், மோகன் கூறுகையில், ""ஒருவருக்கு அதிகளவில் அரிசி வழங்குவதால், அது கள்ள சந்தையில் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, குறிப்பிட்ட அளவை, தரமாக வழங்கினால், ஏழை மக்களுக்கு பயன் கிடைக்கும்,'' என்றார்.
ரேஷன் அரிசி தானா?இந்த திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, தரத்தில், சந்தையில்