PAGEVIEWERS
ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில்.
புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை, மக்களைக் கொண்டே அடையச் செய்திருக்கிறார் இவர்.
ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு
ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் கோரி ஐகோர்ட்டு கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்
காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கவில்லை
நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக
(உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
(உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
"பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணைஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு
வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி
உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி
அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத
நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்கவலை கொள்கின்றனர்.
வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-
01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை
click here to download the G.O NO 69 ,DT 18.04.2013..
அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை
அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.