PAGEVIEWERS
2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.
> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண் 183 /ஏ1/இ2/2013 நாள்:11 .05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
> 2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக வழங்க வேண்டும்.
> 2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வு | விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) கோரியோ அல்லது மறுகூட்டல்(Retotalling) கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விழைவோர் 10.05.2013 (வெள்ளிக்கிழமை) முதல் 13.05.2013(திங்கட்கிழமை) மாலை 5 மணிவரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
2. விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிப்போர் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
3. விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்றபிறகு அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக் கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 முற்பகல் (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 முற்பகல் (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 பிற்பகல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 முற்பகல்(மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 பிற்பகல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பட்டதாரி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை :-
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 முற்பகல்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.05.2013 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 முற்பகல்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 முற்பகல் (ஒன்றியத்திற்குள்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 பிற்பகல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதுநாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ்மாநிலத்திலேயேமுதலிடம்
பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது
இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்),
ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை
பிடித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், |