PAGEVIEWERS


2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம் - நாளிதழ் செய்தி

கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் வேலை டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு




தமிழர் வரலாறு (Tamizhar History)


Thamizhar History
தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. 



தமிழர் வாழும் நாடுகள் : 




பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. 

பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், எந்த மாவட்டத்திலும், காலி பணியிடங்களே கிடையாது என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென் மாவட்டங்களுக்குத் தான் ஆசிரியர்கள் அதிக அளவில் பணி மாறுதல் கேட்கின்றனர். ஆனால், அங்கு மிக சொற்ப இடங்களே காலியாக உள்ளன.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வழக்கமாக, ஜூன், ஜூலையில் நடக்கும். கல்வி ஆண்டு துவங்கிய பின், கலந்தாய்வு நடத்துவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கிறது; அத்துடன், பணியிட மாறுதலில் கவனம் செலுத்துவதால், ஆசிரியர், சரிவர, பள்ளிகளுக்கும் செல்வதில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இதை மனதில் கொண்டு, பள்ளி திறப்பதற்கு முன்னரே, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, நாளை (20ம் தேதி) முதல், நான்கு நாட்களுக்கு, "ஆன்-லைன்' முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, நாளை காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. முதலில், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறவும், பின், மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான மாறுதலும் நடக்கும்.

4,000 இடங்கள் காலி:வரும், 21ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும். 22ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும். 23ம் தேதி, முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.இதில், 4,000 காலி பணியிடங்கள் உள்ளன. அனைத்து பாடங்களிலும், காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில், காலி பணியிடங்கள், மிகக் குறைவாக இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு, 24ம் தேதியும், மாவட்டம் விட்டு, மாவட்டத்தில் பணியிடம் பெறுவதற்கான கலந்தாய்வு, 25ம் தேதியும் நடக்கின்றன.

பட்டதாரி:பட்டதாரி ஆசிரியரில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. அறிவியலில், 2,000 இடங்கள், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில், தலா, 3,000 இடங்களும், காலியாக உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், காலி பணியிடங்கள், சுத்தமாக கிடையாது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அதிலும், 8,000 காலி பணியிடங்கள், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் தான், அதிகளவு உள்ளன. தென் மாவட்டங்களில், மிகக் குறைவு என, கூறப்படுகிறது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 24ல் துவங்கி, 31 வரை நடக்கிறது.3ம் தேதி பணியில் சேர உத்தரவு:கலந்தாய்வுக்குப் பின், அனைத்து ஆசிரியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், ஜூன், 3ம் தேதி, பணியில் சேர வேண்டும். பள்ளி திறந்ததற்குப் பின், பணியிட மாறுதல் வழங்கப்படாது. எனவே, பள்ளி திறந்ததற்குப் பின், யாராவது, பணியில் சேராமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.


த.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது


இக்னோ பல்கலைக்கழக கல்வியியல் (B.Ed) 2014 ஆம் படிப்பிற்கான விண்ணப்பம்.


APPLICATION FEES- RS 1000

COURSE FEES    - RS 20,000

LAST DATE-15.07.2013

ENTRANCE DATE-18.08.2013


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 2013 - 2014 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வகுத்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.



*பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் 13.05.2013 முதல் 
17.05.2013 வரை சமர்பிக்கலாம்.
* பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 
ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு 
மூலம் தற்பொழுது வழங்கப்படும் .
பொது மாறுதல் வழங்கும் போது முதலில் ஒன்றியத்திற்குள் / 
நகராட்சிக்குள் உள்ள ஆசிரியர்களுக்குமாறுதல் அளித்துவிட்டு
பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களில் 2012-2013ஆம் 
கலியாண்டில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவலில்
 சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி மாறுதல் 
அளிக்கப்படவேண்டும்.

*பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி 
அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட 
தொடக்கக் கல்விஅலுவலரிடம் சமர்பிக்கின்றனர்.

*23.05.2013 இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி 
இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.


RTI








மே.நி.க - உயர் / உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி TRB-ஆல் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50%க்கு குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (Show Cause Notice) அனுப்பி உத்தரவு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4oLDR55m_4CpwrzBTy17fDdGHTQnDo-nc5KEP-tM3g71QCBCCEXxCQFawjhMD9DXCGWnR2a4W_GBwMLYXzfKud0vQz_4zUVyxKcHLURV99ju2uHx8DPxVGbz4JXv-sJZOx6HgcG00Refd/s1600/computer+teachersa.jpg

D.E.Ed. EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.


DTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-அரசுத் தேர்வுகள் இயக்ககம்,வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாமாண்டு தேர்வு 24 .06.2013திங்கட்கிழமையும்முதலாமாண்டுத் தேர்வு 04.07.2013 வியாழக்கிழமையும் தொடங்கிகீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை இரண்டாமாண்டு
24.06.2013 திங்கள் இந்தியக் கல்வி முறை
25.06.2013 செவ்வாய் கற்றலை எளிதாக்குதலும்மேம்படுத்துதலும் – II
26.06.2013 புதன் மொழிக்கல்வி (தமிழ்தெலுங்குஉருது,மலையாளம்) – II இளஞ்சிறார் கல்வி – II
27.06.2013 வியாழன் ஆங்கில மொழிக் கல்வி – II
28.06.2013 வெள்ளி கணிதவியல் கல்வி – II
29.06.2013 சனி அறிவியல் கல்வி – II
01.07.2013 திங்கள் சமூக அறிவியல் கல்வி – II

2013-2014ம் கல்வியாண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு


2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக முதல்வர் உத்தரவு.


தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர்பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்அதில் 2013-14ம்கல்வியாண்டில் புதியதாக 54 தொடக்கக் பள்ளிகள் துவக்கவும்அப்பள்ளிகளுக்கு
தேவைகேற்ப ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தவும்.
50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி