PAGEVIEWERS
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி
மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்
அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு
பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க
பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/
GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2
மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும்
வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும்
இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள்
கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அடிப்படைப் பணி - பள்ளிக்கல்வித்துறை - பகுதி நேர பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனம் வழங்குதல்.
அரசு கடித எண். 11199 / ஆர்1 / 2010-11, நாள்.28.11.2011.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5950 / ஜே3 / 2012, நாள். 09.03.2012.
மேலே உள்ள அரசு கடிதத்தில் 01.01.1996 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணியில் உள்ள / ஓய்வுப்பெற்ற சில்லறை செலவின / தினக்கூலி / பகுதிநேரப் பணியாளர்கள் குறித்த முழுவிவர அறிக்கையினை வேலைவாய்ப்பகம் மூலம் நியமனம் செய்யப்பட்டோர் மற்றும் நேரடியாக நியமனம் செய்யப்பட்டோர் என இரண்டு பட்டியல்களாக அரசுக்கு அனுப்பமாறு கோரப்பட்டுள்ளது. எனவே 12.3.2012 க்குள் E-MAIL மூலம் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம், என இந்த துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும். இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டு
பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது.
பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில், மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி, "ரேண்டம்' எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் "ரேங்க்' பட்டியலை, நாளை, 12ம் தேதி காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, "ரேங்க்' பட்டியலை வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய "ரேங்க்' விவரங்களை, www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது. இதில், முதல் நிலை மற்றும், பிரதானதேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபால் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை, யு.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன? - நா.முத்துநிலவன் கட்டுரை
இப்போது, அரசுப்பள்ளிகளில் பெருகிவரும் கல்விஉதவிகள், அறிவியல் ஆய்வக, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த நினைக்காத பெற்றோர், பெரிய பெரிய கட்டடஙகளைப் பார்த்து, மயங்கித் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும்போது, அவர்கள் இவர்களை ஒட்டக் கறந்துவிடுவதும், மாணவரும் மனிதர்தான் என்பதை மறந்துவிடுவதும் தொடர்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமும் எழுந்தது. - நா.மு.
கடந்த ஆண்டு பன்னிரண்டாம்வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்த அடுத்தநாள் (24-05-2012) தினமணித் தலையங்கத்தில் எழுப்பப் பட்ட கேள்வி இது - ‘தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக் கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறோமா?’ - இந்த ஆண்டு, அதை விஞ்சக்கூடிய அளவுக்கு “நாமக்கல்(வி) சாதனை” என்று தினமணியின் தலைப்புச் செய்தி சொல்கிறது.(10-05-2013). இரண்டும் சொல்வது ஒரே பொருள்தான் அதாவது தனியார் பள்ளிகள் சாதனை செய்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சாதிக்க முயற்சிகூடச் செய்வதில்லை. என்பதுதான் அது. இந்தக் கருத்துச் சரிதானா? தனியார் பள்ளிகளின் இந்த சாதனைக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது? அந்த வழிகள் சரியானவையா? என்பவையே நமது கேள்விகள்.