PAGEVIEWERS
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி
மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்
அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு
பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க
பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/
GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2
மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும்
வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும்
இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள்
கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அடிப்படைப் பணி - பள்ளிக்கல்வித்துறை - பகுதி நேர பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனம் வழங்குதல்.
அரசு கடித எண். 11199 / ஆர்1 / 2010-11, நாள்.28.11.2011.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5950 / ஜே3 / 2012, நாள். 09.03.2012.
மேலே உள்ள அரசு கடிதத்தில் 01.01.1996 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணியில் உள்ள / ஓய்வுப்பெற்ற சில்லறை செலவின / தினக்கூலி / பகுதிநேரப் பணியாளர்கள் குறித்த முழுவிவர அறிக்கையினை வேலைவாய்ப்பகம் மூலம் நியமனம் செய்யப்பட்டோர் மற்றும் நேரடியாக நியமனம் செய்யப்பட்டோர் என இரண்டு பட்டியல்களாக அரசுக்கு அனுப்பமாறு கோரப்பட்டுள்ளது. எனவே 12.3.2012 க்குள் E-MAIL மூலம் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம், என இந்த துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும். இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டு