PAGEVIEWERS
SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது.
இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.
ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய
விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.
புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
பெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள்
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...
யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி! அனைத்தும் தமிழில்! அரசே தருக!
கும்பகோணத்தில் 94 இளம் மொட்டுகள் கருகி மாய்ந்த கொடிய நிகழ்விற்குப் பிறகு தாம்பரத்தில் நேர்ந்த சுருதியின் சாவு தமிழ் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி ஆணைகளைப் பிறப்பித்து வருகிறது. பள்ளிப் பேருந்துப் பாதுகாப்பிற்காகப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசும் தன் பங்கிற்குப் பள்ளித் தாளாளர் (என். விசயன்), பேருந்து ஓட்டுநர் (பி.சீமான்), பேருந்து உரிமையாளர் (யோகேஸ்வரன்), பேருந்து நடத்துநர்(சண்முகம்) ஆகியோரைத் தளைப்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது. நடத்துநர் சண்முகம் 17 அகவைப் பையன் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேருந்துக்குத் தகுதிச் சான்று வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி இடை நீக்கமும் ஊர்தி ஆய்வாளர் இராசசேகர் இடைநீக்கத்துடன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கு ஜூன் 2013-க்கான ஊதியம் பெறுவதற் -கான ஆணை வழங்கி உத்தரவு
DSE - 1590 PG TRS / 6872 BT POSTS SANCTIONED AS PER GO.212 DATED.23.12.2011 - JUNE 2013 PAY ORDER CLICK HERE...
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி
மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்
அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு
பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க
பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/
GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2
மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும்
வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும்
இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள்
கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.