PAGEVIEWERS

kips

அரிசோனாவில் குங்கும கிளிஃப்ஸ் தேசிய நினைவுச்சின்னம் உள்ள வேவ்

NEW S.P.D. FOR S.S.A. TAMILNADU.




திரு.சி.என்.மகேஸ்வரன் I.A.S.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர்.
(சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆக பணியாற்றியவர்) 

திரு.முஹம்மது அஸ்லாம் I.A.S.
சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர்
(அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆக பணியாற்றியவர்) 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் 

ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்

எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து 

நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் (ஆதங்கம்) சார்ந்த விளக்கம்.


    நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல்  இத்தனி ஊதியம்  அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

   இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல்  அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.             
( ஆதங்கப்படுபவர்கள் எல்லோரும் ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.)

  சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர். (ஆதங்கப்படுகிறவர்கள் மூன்றாவது ஒரு தெளிவுரையை பெற்று இந்த பயனையும் கெடுத்து விடுங்கள். மன நிம்மதி பெறுங்கள்.)

    புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது  தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.

முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது.  மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி  ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. 

இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.

    பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள்  வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

    நன்றி.

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


       ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
 

மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை

"மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை: மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும். 

    TAMIL  -  E  -    BOOKS

———————————————————

சமையல் குறிப்புகள்

புதிய E-BOOKS -2011

புதிய E-BOOKS -2012

———————————————————-
நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குநுல்கள்
TITLEAUTHORClick Here For   Download PDF FileClick Here for View Unicode HTML File
திருக்குறள்திருவள்ளுவர்DOWNLOAD–1
DOWNLOAD–2
VIEW
நாலடியார்பல ஆசிரியர்கள்DOWNLOADVIEW
ஆசாரக் கோவைபெருவாயின் முள்ளியார்DOWNLOADVIEW
இன்னா நாற்பதுகபிலர்DOWNLOADVIEW
இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்DOWNLOADVIEW
களவழி நாற்பதுபொய்கையார்DOWNLOADVIEW
முதுமொழிக் காஞ்சிமதுரை கூடலூர் கிழார்DOWNLOADVIEW
இன்னிலைபொய்கையார்DOWNLOADVIEW
ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார்DOWNLOADVIEW
ஐந்திணை எழுபதுமூவாதியார்DOWNLOADVIEW
திணைமொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்DOWNLOADVIEW
ஏலாதிகணிமேதாவியார்DOWNLOADVIEW
கார் நாற்பதுமதுரை கண்ணன் கூத்தனார்DOWNLOADVIEW
பழமொழி நானூறுமுன்றுறையரையனார்DOWNLOADVIEW
நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்DOWNLOADVIEW
திருகடுகம்நல்லாதனார்DOWNLOADVIEW
இன்னிலைபொய்கையார்DOWNLOADVIEW
கைந்நிலைபுல்லங்காடனார்DOWNLOADVIEW
திணைமாலை நூற்றைம்பதுகணிமேதையார்DOWNLOADVIEW
ஒளவையார் பாடல்கள்
ஆத்திசூடிஒளவையார்DOWNLOADVIEW
கொன்றை வேந்தன்ஒளவையார்DOWNLOADVIEW
நல்வழிஒளவையார்DOWNLOADVIEW
மூதுரைஒளவையார்DOWNLOADVIEW
இலக்கணம்
மாணவர்களுக்கான

கல்வி உதவித்தொகை பொதுநல


அறக்கட்டளை அறிவிப்பு!


125 கோடி கல்வி உதவித்


தொகை விஜயலட்சுமி பொதுநல


அறக்கட்டளை அறிவிப்பு.


சாதி ,மத
பேதம் பார்க்காமல் ஏழை எளிய மற்றும்
நன்கு படிக்கக் கூடிய
மாணவர்களுக்கு வழங்கி வருகிறது “வி
அறக்கட்டளை”. இந்த
அறக்கட்டளையின் சார்பாக இந்த
வருடம் சுமார் 125 கோடி ரூபாய்
கல்வி உதவியாக தமிழகம் முழுவதும்
வழங்கப்பட உள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற
மாணவர்களுக்கு மட்டும்
வழங்கப்பட்டு வந்த இந்த உதவிகள்
இந்த ஆண்டு முதல் தமிழகம்
முழுவதும் விரிவுபடுத்தபடுகிறது
2013-2014 ஆம் கல்வியாண்டில்
மாநகராட்சி, நகராட்சி,

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது

அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ.செல்வம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வானது எதிர்வரும் 10.07.2013 அன்று நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள் சார்பாக அரசானை வெளியிடப்பட்டமைக்கு கூடுதல் விவரங்கள் கோருதல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg

SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

           தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. 

             இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.

ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய


விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.


புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய    புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம். 

பெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள்

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...
யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி! அனைத்தும் தமிழில்! அரசே தருக!


கும்பகோணத்தில் 94 இளம் மொட்டுகள் கருகி மாய்ந்த கொடிய நிகழ்விற்குப் பிறகு தாம்பரத்தில் நேர்ந்த சுருதியின் சாவு தமிழ் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி ஆணைகளைப் பிறப்பித்து வருகிறது. பள்ளிப் பேருந்துப் பாதுகாப்பிற்காகப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசும் தன் பங்கிற்குப் பள்ளித் தாளாளர் (என். விசயன்), பேருந்து ஓட்டுநர் (பி.சீமான்), பேருந்து உரிமையாளர் (யோகேஸ்வரன்), பேருந்து நடத்துநர்(சண்முகம்) ஆகியோரைத் தளைப்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது. நடத்துநர் சண்முகம் 17 அகவைப் பையன் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேருந்துக்குத் தகுதிச் சான்று வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி இடை நீக்கமும் ஊர்தி ஆய்வாளர் இராசசேகர் இடைநீக்கத்துடன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

பள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கு ஜூன் 2013-க்கான ஊதியம் பெறுவதற் -கான ஆணை வழங்கி உத்தரவு

DSE - 1590 PG TRS / 6872 BT POSTS SANCTIONED AS PER GO.212 DATED.23.12.2011 - JUNE 2013 PAY ORDER CLICK HERE...

         ஊதிய குழு கடிதம் 31727/ஊ.பி /13 நாள் 18-6-13



20-06-2013 கூட்ட விளக்கம் 







இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.