PAGEVIEWERS

பள்ளிக்கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புதல் - அறிவுரைகள் வழங்கி உத்தரவு.

Samacheer Kalvi Final Syllabus 2009

 தமிழ் - TamilEnglish
 
  
 icon   Tamilnadu Common School Education Curriculum 2009
   
 Class IClass VI
 
icon   Tamil
icon   English
icon   English

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் 90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு தான், ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோர முடியும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் எவ்வித இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த கே.குமாரவேலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எனது தந்தை விவசாயக் கூலி. 2009–ம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ படித்த நான் நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். 1992–ம் ஆண்டு ஒரு பஸ் விபத்தில் எனது வலது கால் துண்டிக்கப்பட்டது. எனக்கு 60 சதவீத ஊனம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக சுகாதார நலத்துறை சான்றிதழ் வழங்கி உள்ளது. அதற்கான ஒதுக்கீட்டின்படி நான் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன்.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு
தெரிவித்து அடுத்தகட்ட விசராணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விசாரணைக்கு வரவில்லை என்றும் இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   


பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.



 மாவட்ட வாரியாகசிறந்தநான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய்முதல், 1 லட்சம் ரூபாய் வரைரொக்கப்பரிசு வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காமராஜர் பிறந்த நாள்பள்ளிகளில்கல்வி வளர்ச்சி

தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

ராணுவத்தில் ஆசிரியர் பணிகள் - Teachers job in the military

இந்திய ராணுவத்தில் ஹவில்தார்(Havildar) அந்தஸ்திலான ஆசிரியர் பணியிடங்களுக்கு 182 

பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.ஏ.பிஎட்(B.A. B.Ed), பி.எஸ்.சி. பி.எட்(Bsc.B.Ed), மற்றும் பி.ஏ.

(B.A.,), எம்.ஏ.,(M.A.,) படித்தவர்கள் இதற்கு

விண்ணப்பிக்கலாம்

கூடுதல் விபரங்களுக்குWWW.joinindianarmy.nic.in இணையதளத்தை பார்க்கவும்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழக இயக்குனர் உத்தரவு.

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.



அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள   
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். 

ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,

             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======

ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் 

                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======

முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)

இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது. 

பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.

(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)

               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.

       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது. 

பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம். 

             பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது   
                 பணியாளர் சங்கத்தில் 
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது  
              ஓய்வு பெற்றோர் சங்கத்தில் 

          அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை 
அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் இது போன்ற ஊதிய பாதிப்பு தொல்லை. 

ஒரு அரசாணை தொகுப்பின் துவக்கத்தில் படித்த மகாகவி பாரதியின் வரிகளை பதிவு செய்து விடைபெறுகிறேன்.

        தேடிச் சோறு நிதம் தின்று 
       மனம் வாடப் பழங்கதைகள் பேசும் 
       சில வேடிக்கை மனிதரைப் போல 
       வாழ்வேன் என்று நினைத்தாயோ.

எத்தனை அருமையான வரிகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.

படியுங்கள், சிந்தியுங்கள் விழிப்படையுங்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O. 258 Dt.23.5.09.


தொகுப்பு:        சே. தாமஸ்  ராக்லண்ட்
                   மாநில துணை பொதுசெயலாளர் 
       தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம். (T.A.T.A.) 

பெருந் தலைவர் காமராஜர் பற்றிய அறிய புகைப்படங்கள் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு



பெருந் தலைவர் காமராஜர் திரைப்படம்

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

Thanks To - Computer Instructor, GHSS, Ariyalur District.

Click here to download RTI Letter-Non teaching/ teaching staffs works regading

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள் கலந்துகொள்ளும் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் 13.07.2013 அன்று நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறை சார்பாக னைத்து பள்ளிகளிலும் ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.


சுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக தேர்வு -ஷீலா தீட்சித் ராஜினாமா

ஆகஸ்ட் 8, புது தில்லி
இன்று காங்கிரஸ் தலைவர் த்விவேதி பத்திர்க்கையாளர்களை சந்தித்து  காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி சுரேஷ் கல்மாடியை டெல்லி முதல் மந்திரியாக தேர்வு செய்தது  அறிவித்தார். ஷீலா தீட்சித் பெயர் மத்திய சி.ஏ.ஜி ரிப்போர்டில் காமன்வெல்த் கேம்ஸ் ஊழலில் அடிபட்டதாலேயே காங்கிரஸ் கட்சி இந்தஅ திரடி முடிவை எடுத்ததாக தெரிகிறது. ஆரம்பத்தி தயங்கிய ஷீலாவை கட்சி மேலிடம் ராஜினாமா செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

தொடக்கக் கல்வி - RTE 2009 - வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் சேர்க்கை குறித்து விவரம் கோரி உத்தரவு.

SYLLABUS III TERM CLASSES I TO VIII

Subject
Mathematics
Science III to VIII & EVS for I &II
Social Science (Classes III to VIII)

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா