PAGEVIEWERS

நடுநிலைப் பள்ளிகளில் வாரத்தில் 5 பாடவேளை கணினியில் பாடம் நடத்த உத்தரவு




நெல்லை : தமிழகத்தில் 8,026 நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 பாடவேளைகளில் கட்டாயமாக கம்ப்யூட்டர் உதவியுடன் வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 8 ஆயிரத்து 26 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இருந்தும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் வகையில் நடுநிலைப்பள்ளிகளில் அந்தந்த பாட ஆசிரியர்கள் பாடங்களை ஒட்டிய விளக்கப் படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாரத்திற்கு குறைந்தது 5 பாட வேளைகளாவது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க  தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
.

மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்

1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்  
       விடுப்பை துய்க்கலாமா ? 

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் 
       ஏற்புடையதா?
Click here 


Indian Navy Ministry of Defence, Govt of India

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரை

மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
 

மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது

மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.

ஆசிரியர் பணிக்காக, தகுதி தேர்வு எழுத, மைக்ரோ பயாலஜி, சமூக பணி, சமூகவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், பி.எட்., முடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.

பள்ளிக்கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புதல் - அறிவுரைகள் வழங்கி உத்தரவு.