PAGEVIEWERS

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில்
பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்..எம்..எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை,,காவல்துறை,,வருவாய்துறை,,பொதுப்பணித்துறை,
,ஊள்ளச்சித்துறை,, உற்பட பல முக்கிய துறை அரசு ஆணை வெளியிடப்படவில்லை  இன்று வரலாம் (20 அரசு ஆணை வந்து உள்ளது மீதம் வர உள்ளது)
>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

GOVT ORDERS FIRST SPELL FIRST SPELL CLICK HERE...

GOVT ORDERS SECOND SPELL CLICK HERE...

SCHOLARSHIP FOR THE SONS AND DAUGHTERS OF TEACHERS

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத்திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 02.08.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.


ஜூன் / ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய 83,510 தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண்
சான்றிதழ்களை

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் உள்ளோர்க்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணை வெளியீடு

GO.120 SCHOOL EDUCATION DEPT DT.22.7.2013 - CEO / ADDL CEOs TRANSFER & NEW INCHARE REG ORDER CLICK HERE

DSE - CEO / ADDL CEOs TRANSFER & NEW INCHARGE DETAILS REG PROC CLICK HERE

மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இடைநிலை ஆசிரிய நண்பர்களுக்கு ஓர் 

விளக்கமும் வேண்டுகோளும்.

ஆறாவது ஊதிய  குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்கிட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

ஒரு நபர் குழுவின் அறிக்கைக்குப் பின்னரும் ஊதிய 

முரண்பாடுகள் தொடர்ந்ததால் ஏற்ப்படுத்தப்பட்டது மூன்று நபர் 

குழு என்று அழைக்கப்படுகிற ஊதிய குறை தீர்க்கும் பிரிவு.

(இதன் அறிக்கை அடிப்படையில் வெளிவரப்போகும் அரசாணைகளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.) 

இவ்வாறிருக்க "ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200 /- ஆக திருத்தியமைக்கப்பட்டது.  இ.நி.ஆ.  பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - அரசு பதில்"  எனபழைய  RTI யில் தகவல் என வெளிவந்துள்ள தகவலை கண்டு, கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் வேதனயுடன் பதறி விளக்கம் கேட்டு வேதனை அடைந்துவருகின்றனர்.

இதனால் என் இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் இதனை பதிவு செய்கிறேன்.

இன்னும் 500 வருடம் கழித்து RTI யில் ஒரு நபர் குழுவின் 

இடைநிலை ஆசிரியர் ஊதிய விவரம் கேட்டால் 5200 - 20200 +2800 

என்று தான் தருவார்கள்.

ஒரு நபர் குழுவின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அதாவது ஊதிய குறை தீர்க்கும் பிரிவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லஎன்றால்  தான் கவலைப்பட வேண்டும். 

17.4.2013 இல் கையெழுத்திடப்பட்ட கடிதம்,  மூன்று நபர் குழ அறிக்கை அடிப்படையில் அரசாணைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் வெளியிடப்பட்டிருப்பது வீண் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது. 

இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களே, மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு நபர் குழுவில் முரண்பாடுகள் இருந்ததால் அமைக்கப்பட்டதுதான் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு.  

ஒரு நபர் குழு அரசாணை விவரங்களில் இடைநிலை ஊதிய விவரம் உள்ளது. இதனை RTI இல் கேட்டால் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தர மாட்டார்கள். இது விமர்சனம் அல்ல. பதறிய என் நண்பர்களுக்கான விளக்கம்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A.) சார்பில்  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் தெளிவாக முன்வைத்துள்ளோம். நிச்சயம் நம் நம்பிக்கை வீண் போகாது. பொறுமை கொஞ்சம் நமக்கு அதிகம் வேண்டும். காத்திருப்போம் நண்பர்களே.பழைய  RTI தகவல்களை கண்டு அஞ்சி விடாதிருங்கள். 

Relax please 

CPS திட்டத்தில் செலுத்தப்படும்  சந்தா தொகையை பங்கு

 சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்த்து போக்குவரத்து 

தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதி 

மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வார காலத்திற்கு 

தடையாணை பெற்ற விவரத்தை குறிக்கும் தடையாணை நகலை 

உங்களுக்காக வெளியிடுகிறோம். 

தற்போது தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் சந்தா தொகையினை சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஆசிரியர்களிடம் கையொப்பம் கேட்கப்பட்டதாகவும், அதற்க்கு ஆசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்றும் அறிய வருகிறோம். 

இதனை தொடர்ந்து இத்தகவலை உங்களுக்காக வெளியிடுகிறோம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடமும், அதனை தொடர்ந்து தமிழக அரசிடமும் பாதிப்புகளை தெளிவாக தங்களின் மனுக்களில் விளக்கியுள்ளது. நல்லதொரு தீர்வினை மிக விரைவில் காண்போம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்ட பாதிப்புகளையும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் தமிழக அரசிடம் கொண்டு செல்லும் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன். படியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளை அறியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஒன்றுபடுங்கள் எங்களுடன். உழைப்போம் இடைநிலை ஆசிரியர் நலன் காத்திட. 
அத்துடன் செயல்படுவோம் அனைத்து நிலை ஆசிரியர்களின் நலன் காக்கப்பட.



விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் தேர்வு 29 முதல் விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்வாயிலாக கேந்திரியவித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்ஆங்கிலம்இந்திஇயற்பியல்வேதியியல்,பொருளாதாரம்வணிகவியல்கணிதம்உயிரியல்வரலாறுபுவியியல்,கணினி அறிவியல்சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள்தேர்வு செய்யப்பட உள்ளனர்உடற்கல்விஇசை ஆசிரியர்நூலகர் உள்ளிட்டபணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியை தலைமை இடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் இந்த (2013-2014) கல்வியாண்டில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

"முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள்
இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முறையான அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார்
அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DEE - CM AWARD - "BEST PERFORMANCE AWARD 2013" - APPLICATION CALLED REG PROC CLICK HERE..

தமிழகம் வருகிறது அறியியல் எக்ஸ்பிரஸ்

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.