PAGEVIEWERS

பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக் கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின்  நியமனம்  ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே  என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.

ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும். 


தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________


IGNOU - ஜுன் - 2013 பி.எட்., தேர்வுமுடிவுகள் வெளீயீடு


தமிழ் ஆசிரியர்




ஒருவர்= "எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க‌?"

மற்றொருவர் = "இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.

எங்கேயோ படித்தது





திரட்டிய நகைச்சுவைகள் ...!



அந்த மாணவன் புத்தகத்தை தின்னுறான் ஏன்?
அவனுக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு தாக்கும்..?
**************
எங்க வீடு கோயில் மாதிரி....
அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
****************
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
*****************
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு

TRB TN TET Hall Ticket 2013 | TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 Hall Ticket published now |

கூட்டு  போராட்டத்திற்கு தமிழ்நாடு  அனைத்து ஆசிரியர் 

சங்கம்(TATA) சார்பில் அழைப்பு


தொடர்புக்கு 

நா .கர்த்திகேயன்  -- 9442239962

S.C.கிப்சன்            ---9443464081

சே .தாமஸ்      ---   9043426895


ஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35000/-லிருந்து ரூ.50000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - புள்ளி விவர மையத்தில் இருந்து பெறப்பட்ட ஆசிரியர்களின் CPS விவர தாட்களை 08.08.2013க்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme.















புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்ள தடை


இரட்டைப்பட்டம் வழக்கு நாளை (06.08.2013 - செவ்வாய்) விசாரணைக்கு வருகிறது

ORAGANISATION OF SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS FOR THE YEAR 2013-2014 REG

DEE.ELE.19547/J2/2013-SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS

தமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .-உறுதிமொழி என்னாச்சு?தினகரன் செய்தி

புதிய ஓய்வூதிய திட்டம் சட்டவிரோதமானது - விளக்கம் கேட்டு ஐகோர்ட் நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் -Source-HINDU News paper, DT-3.8.2013 Madurai Edision

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 

உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு. 


மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.

   நேற்று 03.08.2013 அன்று மதுரை Y.M.C.A SCHOOL COMPOUND - இல் (T.A.T.A.) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டம் மாநில தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் ஆசிரியைகள் உட்பட பல்வேறு ஆசிரியர்களுடன் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

 கூட்டத்தில் 3 நபர் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு எடுத்துகூறப்பட்டது. கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முதல்கட்டமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 தமிழக அரசின் கவனத்திற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள், ஊதிய குறைதீர்க்கும் பிரிவின் அறிக்கையை தொடர்ந்து வெளியிடப்பட்டஅரசானைகளுக்குப் பின்னரும் தொடர்வது குறித்து பொதுசெயலாளர் திரு.கிப்சன் எடுத்து கூறினார். மேலும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் மேற்கொள்ள இருக்கும் ஜனநாயக முறையிலான உண்ணாவிரதத்திற்கு பெருந்திரளாக ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009  -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு  முன்னர்   பணியேற்றவர்களை   பொருத்தவரையில்,   ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

முதல்கட்டமாக உண்ணாவிரதம் 31.8.2013 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில்  பங்குபெற்ற அனைவருக்கும்  மாநில செய்தி தொடர்பாளர் திரு. கார்கில் ராஜேந்திரன் அவர்கள் நன்றிகூற கூட்டம் நிறைவடைந்தது.

புதிய பங்கேற்பு ஓய்வூதியம் (cps) திட்டம் என்றால் என்ன?