PAGEVIEWERS
வருகிறது அறிவிப்பு-மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்
இன்று ( 18.9.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட
வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர்.
மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.
அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு
பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்
பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பகுராம் மஹாதிக் என்பவரது மனைவி பாக்யஸ்ரீ தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக இருந்த பகுராம் மஹாதிக், கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.