PAGEVIEWERS
குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.
குரூப்–2 தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவருகிறது.
1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்
click here-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர் தனது கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு எழுதிய விண்ணப்பம்
Click here -G.O. 340 Date 26.8.2010 Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission
Click here -G.O. 340 Date 26.8.2010 Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission
இன்று இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு
வருவதற்கு முன்பே ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.அதன் காரணமாக பிற்பகல் 12.30மணியளவில் தான் நீதிமன்றம்
தொடங்கியது.மேலும் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.அதன் காரணமாக பிற்பகல் 12.30மணியளவில் தான் நீதிமன்றம்
தொடங்கியது.மேலும் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of pay bills for the month of October,2013 - Instructions issued – Regarding.
நான்கு மாவட்ட கலெக்டர்களை மாற்றியும், புதிதாக இருவரை கலெக்டர்களாக நியமித்தம் தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன், திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டராகவும், வேலூர் கலெக்டராக இருந்த சங்கர், நீலகிரி மாவட்ட கலெக்டராகவும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராகவும், நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில், மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால், வேலூர் மாவட்ட கலெக்டராகவும், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரியம் இணை மேலாண்மை இயக்குனர் சுப்பையன், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு
அறிவுறுத்தல்கள்
13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
திருச்சி மாவட்டத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.
13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.