‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்....
புதுடெல்லி : தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு மூலம் அதை பதிவு செய்வதற்காக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) என்ற பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மாதமும், டிசம்பரிலும் நடக்க உள்ள 5 மாநில தேர்தலிலேயே இதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனி சின்னத்தை அது அறிமுகம் செய்துள்ளது.