PAGEVIEWERS
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை...
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 10 மணியளவில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர், திருவல்லிகேணி, சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், அமைந்தகரை சாந்தோம், பட்டினப்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர், காலை 7 மணி வரை சாரல் மழை அடித்து கொண்டிருந்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றனர்
.
தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்....
புதுடெல்லி : தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு மூலம் அதை பதிவு செய்வதற்காக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) என்ற பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மாதமும், டிசம்பரிலும் நடக்க உள்ள 5 மாநில தேர்தலிலேயே இதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனி சின்னத்தை அது அறிமுகம் செய்துள்ளது.
கொலைக்களமாகும் கல்வி கூடங்கள்
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!
செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். மேலும் விவரங்களுக்கு